1947 முதல் இந்திய வரலாற்றில் மிக முக்கியமான பட்ஜெட்கள்..!

கடந்த கால பட்ஜெட்கள் பொருளாதாரத்தில் எத்தகைய மாற்றங்களை கொண்டு வந்தன.

2017 - 18 ம் ஆண்டின் பட்ஜெட்டை நிதி அமைச்சர் அருண் ஜெட்லி முன்வைக்க இருக்கும் இந்தத் தருணத்தில், 1947 முதல் 2005-ம் ஆண்டு வரை கடந்த கால பட்ஜெட்கள் பொருளாதாரத்தில் எத்தகைய மாற்றங்களைச் செய்துள்ளது தெரியுமா?

இந்தியாவின் முதல் பட்ஜெட் முதல் 2005-ம் ஆண்டு வரை மக்களுக்கு பட்ஜெட் என்னவெல்லாம் கொண்டு வந்தன என ஒரு பார்வையை நாம் இங்கே பார்க்கலாம்.

1. 1947 : முதல் பட்ஜெட்

1. 1947 : முதல் பட்ஜெட்

நிதி அமைச்சர் : ஆர். கே. சண்முகம் செட்டி

சுதந்திர இந்தியாவின் முதல் பட்ஜெட்டை 1947 ல் வழங்கினார். இந்த பட்ஜெட்டில் வேளாண்மை மீது முழுக் கவனம் செலுத்தப்பட்டது. அடுத்த பத்தாண்டு கால கட்டத்தில் தொழில்துறையின் வளர்ச்சியின் மீது கவனம் செலுத்தப்பட்டது.

மேலும் வனத்துறை, மீன்வளம் மற்றும் ஜவுளித் துறைகள் என எல்லாப் பகுதிகள் மீதும் கவனம் செலுத்தப்பட்டது.

 

2. 1950 : வேளாண்மை பட்ஜெட்

2. 1950 : வேளாண்மை பட்ஜெட்

நிதி அமைச்சர் : சி.டி. தேஷ்முக்

இந்த பட்ஜெட்டில் 'உணவை மேலும் அதிகரிக்கும்' திட்டம் முன்மொழியப்பட்டது. நேருவின் ஆலோசனைப்படி நீர் பாசனத்தின் மூலம் வேளாண்மையில் அதிக லாபத்தை ஈட்ட உறுதி செய்யப்பட்டது.

வளர்ந்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப மக்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்யும் பொருட்டு வேளாண்மையில் விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டது. 'உணவை மேலும் அதிகரிக்கும்' திட்டமானது பொருளாதார வளர்ச்சியில் குறுகிய கால அடிப்படையில் தேவைகளை பூர்த்தி செய்ய உதவியது.

 

3. 1969 : வங்கி தேசியமயமாக்குதல்

3. 1969 : வங்கி தேசியமயமாக்குதல்

நிதி அமைச்சர் : மொரார்ஜி தேசாய்

இந்த ஆண்டில் 14 வங்கிகள் தேசியமயம் ஆக்கப்பட்டது. வங்கிகள், முதன்மை துறைகளுக்கு 40 % கடன் வழங்குவதை அவசியமாக்கப்பட்டது.

விவசாயம், சிறு தொழில் நிறுவனம், சில்லறை வர்த்தகம், சிறிய அளவிலான வியாபாரங்கள் ஆகியவை முதன்மை துறைகளாக கருதப்பட்டது. சமுகத்தின் வளர்ச்சியை மேம்படுத்துவதன் நோக்கமாக வங்கிகள் தேசிய மயமாக்கப்பட்டது.

பொது நிதி, சேமிப்பு, வரி விதிப்பு மற்றும் பணவீக்கம் ஆகியவற்றின் மீது கவனம் வைத்து 1960 ல் பட்ஜெட் தயார் செய்யப்பட்டது.

இருப்பு நிலையைப் பாதுகாக்க வேண்டும் என்பதும் நோக்கமாகக் கருதப்பட்டது.

 

4. 1970 : கரீபி ஹட்டாவோ

4. 1970 : கரீபி ஹட்டாவோ

நிதி அமைச்சர் : இந்திரா காந்தி

இந்தியாவின் முதல் பெண் நிதி அமைச்சரால் இவ்வாண்டு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. 'பலகீனமான பிரிவு நபர்களுக்கு முன்னுரிமை அளிப்பதே பொருளாதார வலிமைக்கு மிக முக்கியமான ஆதாரமாக இருக்கும்' என இந்திரா காந்தி கூறினார்.

இந்த பட்ஜெடில் 'வறுமை ஒழிப்பு திட்டங்கள்' முன்மொழியப்பட்டது. சிறப்புத் திட்டங்கள் மற்றும் தன் விருப்பப்படி இடமாற்றம் ஆகிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

சமூக நலச் செலவினங்கள் மற்றும் வளர்ச்சி சாத்தியங்களை இணைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. மத்திய அரசானது அதிக செலவு இல்லாத பொருளாதார பாதையை அமைத்தது.

 

5. 1986 : வரி சீர் திருத்தம்

5. 1986 : வரி சீர் திருத்தம்

நிதி அமைச்சர் : வி. பி. சிங்

நீண்ட கால அடிப்படையில் வரி சீர்திருத்த திட்டம் தொடங்கப்பட்டது. கலால் (வரி) கொள்கையானது மிகப் பெரும் சீரமைப்பைக் கண்டது. நிதி கொள்கையானது வரி தளத்தை விரிவாக்க வடிவமைக்கப்பட்டது.

திருத்தப்பட்ட மதிப்புக் கூட்டு வரி (அல்லது) MODVAT அறிமுகப்படுத்தப்பட்டது. உற்பத்தியாளர்கள் தங்களின் உபகரணங்கள் மற்றும் மூலப் பொருட்கள் மீதான கலால் வரியை உடனடியாகவும் முழுமையாகவும் செலுத்துவதற்கு MODVAT அனுமதிக்கிறது.

 

6. 1992 : இந்தியாவின் புதிய எழுச்சி

6. 1992 : இந்தியாவின் புதிய எழுச்சி

நிதி அமைச்சர் : மன்மோகன் சிங்

இந்தக் கால கட்டத்தில் கொண்டு வந்த பட்ஜெட் விளையாட்டு விதிகளில் மாற்றங்களைக் கொண்டு வந்தது. அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதார உத்தி அறிமுகப்படுத்தப்பட்டது. இந் பட்ஜெட்டில் புதிய நாணய கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டது. அதிகாரப்பூர்வமான ஆட்சி முறையும் ஒழிக்கப்பட்டது.

புதிய ஏற்றுமதி - இறக்குமதி கொள்கையானது, பொருளாதாரத்தில் அந்நிய நேரடி முதலீட்டை கொண்டு வந்தது. உயர் முதன்மை தொழில்களில் வெளிநாட்டு முதலீட்டு எல்லையானது 51 சதவிகிதமாக உயர்த்தப்பட்டது. வட்டி விகிதங்கள் எளிதில் மாற்றப்படத்தக்க வகையில் இயற்றப்பட்டது.

வணிக வங்கிகளில் தொகுப்பு வட்டி விகிதங்கள் அடிப்படையில் கடன் வழங்க அனுமதி அளிக்கப்பட்டது.

தனியார் துறைகள் லாபம் ஈட்டி கொடுப்பவர்களாக உருவானார்கள். இதனால், தனியார் துறையின் வளர்ச்சி நோக்கம் மற்றும் வாய்ப்புகள் பன்மடங்கு அதிகரித்துள்ளது.

1992 ம் ஆண்டு பட்ஜெட், உலகமே இந்தியாவைத் திரும்பி பார்க்க வைக்கும் அளவிற்கு மாற்றி அமைத்தது.

 

7. 1997 : கனவு பட்ஜெட்

7. 1997 : கனவு பட்ஜெட்

நிதி அமைச்சர் : ப. சிதம்பரம்

இந்த பட்ஜெடில் பொருளாதார சீர்திருத்தங்களை செயல்படுத்தச் சாலை வரை படத்தை வழங்கினார். நேரடி மற்றும் மறைமுக வரியானது இந்தியாவில் பெரும் மாற்றத்தை கொண்டு வந்தது.

தனி நபரின் அதிகபட்ச வரி விகிதம் 20 சதவிகிதத்தில் இருந்து 30 சதவிகிதமாக குறைக்கப்பட்டது. நிறுவனங்களின் வருமான வரி விகிதம் 40 சதவிகிதத்தில் இருந்து 30 சதவிகிதமாக குறைக்கப்பட்டது. உச்ச சுங்க வரியானது 50 சதவிகிதத்தில் இருந்து 40 சதவிகிதமாக குறைக்கப்பட்டது. தனிப்பட்ட முதலீட்டாளர்களுக்கு ஆதாயப் பங்கு வரி ரத்து செய்யப்பட்டது.

வருமான வரி திட்டம் என்ற தன்னார்வ வெளிப்பாடு அறிமுகப்படுத்தப்பட்டு, கருப்புப் பணத்தை மீட்பதே இந்த பட்ஜெட்டின் இலக்காகக் கருதப்பட்டது.

வரி தாக்கல் என்பது, தொலைப்பேசி, நான்கு சக்கர வாகனம், அசையா சொத்து மற்றும் வெளிநாட்டுப் பயணங்கள் ஆகியவற்றின் மீதான உரிமையில் கட்டாயமாக்கப்பட்டது.

இந்த வரவு - செலவு திட்டமே 'கனவு பட்ஜெட்' என அழைக்கப்படுகிறது.

 

8. 2002 : திரும்பப் பெறுக பட்ஜெட்

8. 2002 : திரும்பப் பெறுக பட்ஜெட்

நிதி அமைச்சர் : யக்ஷ்வந்த் சின்ஹா

இந்த பட்ஜெட்டில் 5 முக்கிய திட்டங்கள் திரும்பப் பெற வேண்டும் அல்லது திருத்தி அமைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

வருமான வரிச் சட்டம் 88 வது பிரிவின் படி ஆண்டின் வருமானம் 1.5 லட்சம் முதல் 5 லட்சங்களுக்குள் இருப்போருக்கு வரிச் சலுகை 15 சதவிகிதமாக குறைக்கப்பட்டது. ஆயுள் காப்பீட்டு பிரிமீயத்தில் 5 சதவீதம் சேவை வரியாக நிறைவேற்றப்பட்டது.

தொழில்நுட்ப பூங்காக்கள் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலங்களில் ஏற்றுமதி லாபத்தில் 100 சதவீதம் வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டு, 100 சதவீதம் EOUs மீட்கப்பட்டது.

குடியிருப்பு கட்டுமானங்களுக்காக ஊக்கத் தொகைகள் மற்றும் சலுகைகள் அளிக்கப்பட்டது. இந்த பட்ஜெட்டில் தான் மதிப்புக் கூட்டு வரி (VAT) அறிமுகப்படுத்தப்பட்டது. 'வாட்' இப்போது 'ஜிஎஸ்டி' அறிமுகத்திற்கு முதுகெலும்பாக உள்ளது.

 

9. 2005 : சமூக துறை உத்வேகம்

9. 2005 : சமூக துறை உத்வேகம்

நிதி அமைச்சர் : ப. சிதம்பரம்

தேசிய கிராமப்புற சுகாதாரத் திட்டத்தில், ஜெண்டர் (Gender) பட்ஜெட் மற்றும் கிராமப்புற வேலை உத்திரவாத திட்டம் போன்ற அரசின் தனித்துவமான திட்டங்கள் 2005 - 06 ம் ஆண்டு பட்ஜெட்டில் முதன் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது.

தேசிய கிராமப்புற சுகாதாரத் திட்டமானது, இந்தியா முழுவதும் உள்ள கிராமப்புறங்களில் சுகாதார விநியோகத்தை சுகாதாரத் திட்டம் மூலம் மேம்படுத்துவது ஆகும். இந்தத் திட்டமானது உள்ளுர்களில் பயிற்சி மற்றும் குழந்தை பேருக்கான தாய்மை பாதுகாப்பு உள்படப் பல பதிய வழிமுறைகளை முன் மொழிகிறது. சுகாதாரத்தின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகக் கருதப்படுகிறது.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+