தபால் நிலையங்களில் உள்ள முதலீடு திட்டங்களின் வட்டி விகிதத்தை அரசு மாற்றி அமைத்தாலும் அதில் உள்ள சில முதலீடு திட்டங்கள் லாபத்தை வருமான வரியில் இருந்து தப்பிக்கவும் உதவுகின்றது.
பங்குச் சந்தை முதலீடுகளில் உள்ள ரிஸ்க்குகள் போன்று எதுவும் இல்லாமல் தபால் நிலையத்தில் உள்ள முதலீடு திட்டங்களின் உதவியால் வரியைச் சேமிக்கலாம் என்று தெரியுமா உங்களுக்கு.
தபால் நிலையங்களில் உள்ள முதலீடு திட்டங்களின் வட்டி விகிதத்தை அரசு மாற்றி அமைத்தாலும் அதில் உள்ள சில முதலீடு திட்டங்கள் லாபத்தை வருமான வரியில் இருந்து தப்பிக்கவும் உதவுகின்றது.
இப்படித் தபால் நிலையங்களில் உள்ள திட்டங்களின் மூலம் முதலீடு செய்யும் போது அந்து வருடங்கள் முதலீடு செய்ய வேண்டும்.
டர்ம் டெப்பசிட்
டர்ம் டெப்பாசிட் கணக்கைத் தனி நபரால் மட்டுமே திறக்க இயலும். டர்ம் டெப்பாசிட் கணக்கை ஒரு தபால் நிலையத்தில் இருந்து பிற தபால் நிலைகளுக்கு எளிதாக மாற்றமும் செய்ய இயலும்.
டர்ம் டெப்பாசி கணக்கைத் திறக்க வயது வரம்பு ஏதும் இல்லை. 10 வயதுக்கு அதிகமாக உள்ள யார் வேண்டுமானாலும் கணக்கில் முதலீடு செய்யலாம். இந்தத் திட்டத்தின் கீழ் 5 வருடம் முதலீடு செய்பவர்கள் 80 சி படிவத்தின் கீழ் வரி விலக்குப் பெறலாம்.
டர்ம் டெப்பாசிட்டில் முதலீடு செய்பவர்களுக்கு வருடத்திற்கு ஒரு முறை வட்டி பணம் கணக்கில் சேர்க்கப்படும் ஆனால் ஒவ்வொரு காலாண்டிற்கும் வட்டி விகிதம் மாற்றி அமைப்பதைப் பொருத்துக் கணக்கிடப்படும். மேலும் இத்திட்டத்தின் கீழ் முதலீடு செய்பவர்களுக்கு 2016-2017 நிதி ஆண்டின் 3வது மற்றும் 4-வது காலாண்டில் 7.8 சதவீதம் வரை லாபம் கிடைக்கும்.
தேசிய சேமிப்புப் பத்திரங்கள்
அரசு ஊழியர்கள், வணிகர்கள், மாத சம்பளம் வாங்குபவர்கள் வரிக் கட்டுவதில் இருந்து பெறும் அளவிற்கு விடுபடத் தேசிய சேமிப்புப் பத்திரங்கள் திட்டம் உதவும். இத்திட்டத்தின் கீழ் இவ்வளவு முதலீடு செய்ய வேண்டும் என்ற வரம்பு ஏதும் இல்லை. ஆனால் வரி விலக்கு 1.5 லட்சம் ரூபாய் வரை பெறலாம். மேலும் இந்தச் சேமிப்புப் பத்திரங்களை வைத்து கடன் வாங்க இயலும்.
தேசிய சேமிப்புப் பத்திரங்கள் திட்டத்தின் கீழ் ஐந்து வருடங்கள் முதலீடு செய்து வந்தவர்களுக்கு 2016-2017 நிதி ஆண்டின் 3வது மற்றும் 4-வது காலாண்டில் 8 சதவீதம் வரை லாபம் கிடைக்கும்.
பிபிஎப்
வரி விலக்கு வேண்டும் பலர் தேர்வு செய்யும் திட்டம் இது. பிபிஎப் திட்டத்தின் கீழ் நீங்கள் முதலீடு செய்யும் பணம், பெறக் கூடிய வட்டி, முதிர்வுத் தொகை என அனைத்திற்கும் வரி விலக்கு உண்டு.
இத்திட்டத்தின் கீழ் முதலீடு செய்பவர்களுக்குக் கணக்கைத் துவங்கியதில் இருந்து 7 வது ஆண்டுக்குப் பிறகு பணத்தைத் திரும்பப் பெற இயலும். 3-ம் வருடத்தில் இருந்து தேவைப்படும் போது கடனும் பெற இயலும்.
பிபிஎப் திட்டத்தின் முதிர்வுக் காலம் 15 ஆண்டு, ஆனால் தேவைப்பட்டால் மேலும் ஐந்து ஆண்டுக் காலம் முதலீட்டைத் தொடரலாம்.2016-2017 நிதி ஆண்டின் 3வது மற்றும் 4-வது காலாண்டில் 8 சதவீதம் வரை லாபம் கிடைக்கும்.
மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம்(SCSS)
60 வயதுக்கும் அதிகமாக உள்ளவர்கள் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம்(SCSS)-இல் முதலீடு செய்யலாம். மேலும் அரசுப் பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றவர்கள் 55 வயது முதல் முதலீடு செய்யலாம். முதிர்வு காலம் 5 வருடம். மனைவி இருக்கும் போது ஜாயிண்ட் கணக்காகவும் திறக்கலாம்.
இத்திட்டத்தின் கீழ் முதலீடு செய்பவர்கள் பிரிவு 80சி கீழ் வரி விலக்குப் பெறலாம். ஒவ்வொரு காலாண்டிற்கும் வட்டி அளிக்கப்படும். ஐந்து வருட மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தில் முதலீடு செய்தவர்களுக்கு 2016-2017 நிதி ஆண்டின் 3வது மற்றும் 4-வது காலாண்டில் 8.5 சதவீதம் வரை லாபம் கிடைக்கும்.
More From GoodReturns

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

மத்திய அரசின் ஒற்றை அறிவிப்பு.. ரூ.82,000 கோடி இழப்பை சந்தித்த முகேஷ் அம்பானி!!

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் வட்டி உயர்த்தப்படுகிறதா? மக்களவையில் முக்கிய தகவலை வெளியிட்ட அரசு…!!

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்



Click it and Unblock the Notifications