கிரெடிட் கார்டு என்றால் என்ன?

ஒரு வங்கி அல்லது நிதி நிறுவனத்தினால் அதனுடைய வாடிக்கையாளருக்கு வழங்கப்படும் ஒரு பிளாஸ்டிக் அட்டை.

கிரெடிட் கார்டு என்பது ஒரு வங்கி அல்லது நிதி நிறுவனத்தினால் அதனுடைய வாடிக்கையாளருக்கு வழங்கப்படும் ஒரு பிளாஸ்டிக் அட்டை ஆகும். அந்தக் கிரெடிட் கார்டை பயன்படுத்தி அந்த வாடிக்கையாளர் எந்த ஒரு பொருளோ அல்லது சேவையையோ விலைக்கு வாங்க இயலும்.

அதன் பின்னர் ஒரு குறிப்பிட்ட தேதிக்குள் அந்த வாடிக்கையாளர் தான் வாங்கிய பொருள் அல்லது பெற்ற சேவைக்கான கட்டணத்தை செலுத்த வேண்டும்.

கிரெடிட் கார்டு வாங்கும் முன்னர் நினைவில் கொள்ள வேண்டிய சில காரணிகள்

கிரெடிட் கார்டு வாங்கும் முன்னர் நினைவில் கொள்ள வேண்டிய சில காரணிகள்

நடைமுறையில் அதுவும் இந்தியாவில் மிகச் சிறந்த கிரெடிட் கார்டு என்று எதுவும் இல்லை. ஆனால் நீங்கள் நிச்சயமாகப் பின்வரும் காரணிகள் அடிப்படையில் சந்தையில் உள்ள கிரெடிட் கார்டுகளை ஒப்பிடுவதன் மூலம், நீங்களே உங்களுக்கு உகந்த ஒரு கிரெடிட் கார்டைத் தேர்வு செய்யலாம்.

 

 

சேர்க்கை கட்டணம்

சேர்க்கை கட்டணம்

ஒரு சில ஆண்டுகளுக்கு முன் வரலாறு எனக் கருதப்பட்ட நிகழ்வு மாறி நிகழ்வுக்கு வந்து விட்டது. அந்த நிகழ்வுகள் 2009க்கு பிறகு தெரிய ஆரம்பித்தது. சந்தையில் உள்ள பல அட்டைகளுக்குச் சேர்க்கை கட்டணம் என்று எதுவும் இல்லை. எனினும் நீங்கள் ஒரு கிரெடிட் கார்டு வாங்கும் முன்னர் அதை ஆராய்ந்து பார்த்து முடிவெடுங்கள்.

ஆண்டு கட்டணம்

ஆண்டு கட்டணம்

கிரெடிட் கார்டுகளுக்கு நீங்கள் ஒவ்வொரு ஆண்டும் அந்த ஆண்டிற்கு உரியக் கட்டணத்தை செலுத்த வேண்டும். நீங்கள் இலவச கிரெடிட் கார்டு என்கிற சொல்லை எங்கேனும் கண்ணுற்றால் அது பொதுவாக இலவச சேர்க்கை கட்டணம் மற்றும் இலவச முதலாமாண்டு கட்டணத்தைக் குறிக்கும். நீங்கள் இரண்டாம் ஆண்டு முதல் ஆண்டு கட்டணத்தை செலுத்த வேண்டும். எனவே இதை நன்றாக நினைவில் நிறுத்திக் கொண்டால் பின்னாட்களில் வரும் குழப்பங்களில் இருந்து விடுபடலாம்.

வெகுமதி புள்ளிகளை உங்களுக்குப் பிடித்த கடை அல்லது சேவை வழங்குநரிடம் பணமாக மாற்றிக் கொள்ளும் வசதி

வெகுமதி புள்ளிகளை உங்களுக்குப் பிடித்த கடை அல்லது சேவை வழங்குநரிடம் பணமாக மாற்றிக் கொள்ளும் வசதி

நீங்கள் அடிக்கடி விமான பயணம் மேற்கொள்ளும் நபர் அல்லது அடிக்கடி ஒரு தொடர் சங்கிலி கடையில் பொருள் வாங்கும் நபர் எனில் உங்களுக்கு ஏற்ற ஒரு கோ-பிராண்ட் கிரெடிட் கார்டு தேர்ந்தெடுக்கலாம். அவ்வாறு செய்வதன் மூலம் உங்களுக்கு நீங்கள் அடிக்கடி வாங்கும் கடையின் காரணமாக அதிகமான வெகுமதி புள்ளிகள் கிடைக்கும். அதோடு உங்களுடைய வழக்கமான பிற செலவுகளுக்குரிய வெகுமதி புள்ளிகளும் தடையின்றி கிடைக்கும்.

பாக்கியின் மீதான மற்றும் ரொக்க பணத்தின் மீதான வட்டி விகிதம்

பாக்கியின் மீதான மற்றும் ரொக்க பணத்தின் மீதான வட்டி விகிதம்

நீங்கள் சரியான காரணங்களுக்காகக் கிரெடிட் கார்டு வாங்குகின்றீர்களா என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும். ஏனெனில் கிரெடிட் கார்டுகள் மிகவும் குறுகிய கால கடன் சார்ந்த விற்பனைக்கு மட்டுமே உகந்தது. நீண்ட கால விற்பனை மற்றும் ரொக்க பணப் பரிமாற்றத்திற்கு இதில் மிகவும் அதிக வட்டி விதிக்கப்படும்.

கிரெடிட் கார்டுக்கான தகுதி

கிரெடிட் கார்டுக்கான தகுதி

நீங்கள் முதன் முதலில் ஒரு கிரெடிட் கார்டுக்காக விண்ணப்பிக்கப் போகின்றீர்கள் எனில் உங்களின் தகுதிக்கு உரிய அட்டைக்கு மட்டுமே விண்ணப்பிக்க இயலும். இது ஒரு சில குறிப்பிட்ட அம்சங்களை உடையக் கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பிப்பதை விட இது மிகவும் முக்கியமானது.

கிரெடிட் கார்டு வழங்குபவர் அல்லது ஒரு அதிகாரியின் எந்த ஒரு வாக்குறுதியையும் நம்பாதீர்கள். அவர்கள் எழுத்து வடிவில் அல்லது மின்னஞ்சல் வடிவில் குறிப்பிட்டால் மட்டுமே அவர்களுடைய வாக்குறுதிக்கு உரிய மரியாதை கிடைக்கும்.

எனவே உங்களுக்கு எந்த ஒரு வாக்குறுதி அளிக்கப்பட்டால், அது கருப்பு வெள்ளை வடிவில் உங்களுக்குக் கிடைத்த பின்னர் மட்டுமே அதன் மீதான உங்களுடைய முடிவை எடுங்கள்.

வெற்று விண்ணப்பப் படிவங்கள் அல்லது ஆவணங்களில் கையெழுத்திட வேண்டாம். மேலும் உங்களுடைய எதிர்கால நலன் கருதி, நீங்கள் கிரெடிட் கார்டுக்குச் சமர்ப்பித்த எல்லா ஆவணங்களின் நகல்களையும் மிகவும் பாதுகாப்பாக வைத்திருங்கள்.

 

கிரெடிட் கார்டு மற்றும் சிபில்

கிரெடிட் கார்டு மற்றும் சிபில்

உங்கள் கடன் அறிக்கையை பெற்றிடுங்கள். சிபில் வலைத்தளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். அதில் குறிப்பிடப்பட்ட வழிமுறையைப் பின்பற்றவும். இவ்வாறு செய்வதன் மூலம் உங்களுடைய மற்றும் உங்களுக்கு ஜாமீன் அளித்தவரின் கடன் அறிக்கையை பெற்றிடலாம். உங்களுடைய கடன் அறிக்கையை நன்றாக ஆராய்ந்து பார்த்திடுங்கள்.

அதில் ஏதேனும் பிழைகள் இருப்பின் அதைக் கண்டு பிடித்து சிபில் வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வழிமுறைகளைப் பயன்படுத்தி சரி செய்திடுங்கள். உங்களுடைய கடன் அறிக்கையில் உள்ள பிழைகள் உங்களுக்குக் கிரெடிட் கார்டு கிடைப்பதை தடை செய்து விடலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+