அமிதாப் காந்த் 20 மில்லியன் இந்தியர்களுக்கு இலவசமாகப் பணத்தை அளிக்கும் திட்டத்தில் இந்திய அரசு இருப்பதாகத் தெரிவித்தார்.
ஸ்விஸில் உள்ள டாவோஸ் நகரத்தில் நடைபெற்ற உலகப் பொருளாதார மன்றத்தில் உரையாடிய நிதி ஆயோக் நிறுவனத்தின் தலைவர் அமிதாப் காந்த் 20 மில்லியன் இந்தியர்களுக்கு இலவசமாகப் பணத்தை அளிக்கும் திட்டத்தில் இந்திய அரசு இருப்பதாகத் தெரிவித்தார்.
இந்தத் திட்டத்தை யுனிவர்சல் பேசிக் இன்கம் என்றும் உலகளாவிய அடிப்படை வருமானம் என்றும் கூறலாம். யுனிவர்சல் பேசிக் இன்கம் பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டியவற்றை இங்குப் பார்ப்போம்.
யுனிவர்சல் பேசிக் இன்கம் என்றால் என்ன..?
தனி நபர்கள், வீடு இல்லாதவர்கள், மற்றும் பிறருக்கு இலவசமாகப் பணம் அளித்து உதவுவதே யுனிவர்சல் பேசிக் இன்கம் திட்டத்தின் நோக்கம் ஆகும். எனவே தான் இது யுனிவர்சல் என்ற பெயரை எடுத்துள்ளது.
பணம் எப்படி அளிக்கப்படும்..?
உணவு அல்லது சேவையாக வழங்குவது அல்லது கூப்பன் அல்லது நேரடியாக வங்கி கணக்கில் பணத்தை டெபாசிட் செய்வதன் மூலம் யுனிவர்சல் பேசிக் இன்கம் திட்டத்தில் இருந்து பணத்தைப் பெறலாம்.
யாருக்கு அது கிடைக்கும்?
அரசு நிர்னைத்துள்ள வறுமை கோட்டிற்கும் கீழே உள்ள குடும்பங்களுக்கு 15 டாலர் அதாவது 1000 ரூபாய் வரை பணம் அளித்து உதவி செய்யப்படும்.
பணம் எப்போது கிடைக்கும்?
யுனிவர்சல் பேசிக் இன்கம் திட்டத்தின் கீழ் ஒட்டு மொத்தமாகப் பணத்தைப் பெற இயலாது. ஆனால் மாத தவணையாகத் தொடர்ந்து பெற இலயலும்.
எவ்வளவு காலத்திற்கு இதில் பணம் அளிக்கப்படும்..?
எந்த நிபந்தனையும் இல்லாமல் இத்திட்டத்தின் கீழ் பணம் அளிக்கப்படும். இத்திட்டத்தின் கீழ் பணம் பெற விரும்புபவர்கள் பண ஏதும் செலவு செய்ய இயலவில்லை.
பின்பற்ற விரும்பிய பிற நாடுகள்
இத்திட்டத்தைப் பின்பற்ற ஃபின்லாந்து மற்றும் ஸ்காட்லாந்து ஆகிய நாடுகள் முடிவு செய்துள்ளன. ஆனால் ஸ்விசர்லாந்து இத்திட்டத்தில் இருந்து வெளியேறியது.


Click it and Unblock the Notifications