ஐஓஎஸ் செயலியும், ஆண்ராய்டு பிம் செயலியும் ஒன்றே தான். இரண்டிலும் ஒரே மத்திரியான தெரிவுகள் தான் உள்ளன. இதனால் பயனர்களுக்குப் பெரிதாக பயன்படுத்துவதில் சிரமம் ஏதும் இருக்காது.
பாரத் இண்டர்ஃபேஸ் ஃபார் மணி(BHIM) செயலி இப்போது ஐஓஸ் மொபைல் பொன்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. யூபிஐ போன்ற ஒரு செயலியே பிஎச்ஐஎம். பிஎச்ஐஎம் செயலி இந்திய தேசிய கொடுப்பனவு கார்ப்பரேஷன் (NPCI) உருவாக்கியுள்ளது. இது முழுக்க முழுக்க இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட செயலி ஆகும்.
ஐஓஎஸ் செயலியும், ஆண்ராய்டு பிம் செயலியும் ஒன்றே தான். இரண்டிலும் ஒரே மத்திரியான தெரிவுகள் தான் உள்ளன. இதனால் பயனர்களுக்குப் பெரிதாக பயன்படுத்துவதில் சிரமம் ஏதும் இருக்காது.
பிஎச்ஐஎம் செயலியை ஐஓஎஸ் சாதனத்தில் எப்படி நிறுவுவது..?
1. ஐபோனில் ஆப்ஸ்டோரை திறக்கவும்
2. பிஎச்ஐஎம் என்பிசிஐ என்று ஆப் ஸ்டோரில் தேடவும்.
3. செயலியை கண்டறிந்து நிறுவுக என்ற பொத்தானை டேப் செய்யவும்.
4. செயலியை நிறுவிய பிறகு ஐகான் உங்கள் போனில் பட்டியலிடப்படும்.
குறிப்பு: இந்தச் செயலி ஐ-பாடுகளில் வேலை செய்யாது.
பிஎச்ஐஎம் ஐஓஎஸ் செயலியில் உள்ள பிற அம்சங்கள்
ஐடியூன்சில் பிஎச்ஐஎம் செயலி ஐஓஎஸ்-க்காக கிடைக்கின்றது. இதையும் பிஎச்ஐஎம் செயலியை போன்றே எல்லாத் தெரிவுகளுடனும் பயன்படுத்தலாம். இங்கு பிஎச்ஐம் செயலியில் உள்ள அம்சங்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.
பண பரிமாற்றம்
ஐபோன் பிம் செயலியை பயன்படுத்தி பணத்தை எளிதாக மொபைல் எண் அல்லது விர்ச்சுவல் பேமெண்ட் முகவரியைப் பயன்படுத்தி பணத்தை அனுப்ப இயலும்.
பணத்தைப் பெறுதல்
உங்கள் பிம் செயலியில் இருந்து பணத்தை எப்படி அனுப்புகிறீர்களோ அப்படியே எளிதாக விர்ச்சுவல் பேமெண்ட் முகவரி மற்றும் மொபைல் எண்ணுக்குக் கோரிக்கை அனுப்பி பணத்தை பெற இயலும்.
மேலும் QR-குறியீட்டை ஸ்கேன் செய்து பணத்தை அனுப்பவும், பெறவும் இயலும்.
பரிவர்த்தனை பதிவுகள்
பிம் செயலியில் பண பரிவர்த்தனை செய்யப்பட்ட விவரங்களும் சேமிக்கப்படும். இதற்கு யூபிஐ செயலிகளின் விரிச்சுவல் பேமெண்ட் முகவரி உதவுகின்றது.


Click it and Unblock the Notifications