கோடைக்கு ஏற்ற சூப்பர் பிஸ்னஸ் ஐடியா.. இளநீர்-ஐ இப்படியும் விற்கலாம்..!

இளநீர் வங்கி குடிக்கலாம் என்றால் இளநீர் கடையைத் தேடி கண்டுபிடிப்பதற்குள் கண் கட்டிவிடும்.

சென்னை: நமது நாட்டில் வெளிநாட்டுக் குளிர்பானங்களை வங்கி குடிக்காதவர்களே இல்லை என்று கூறலாம். ஜல்லிக்கட்டு பிரச்சனை, உணவில் கலப்படம், போன்று ஏதேனும் பிரச்சனைகள் வரும்போது நாம் உள்நாட்டு தயாரிப்புகளை வாங்கி உபயோகிக்க வேண்டும் என்பதை உணர்த்தி மக்கள் மத்தியிலும், சமுக வலைத்தளங்களில் பல கருத்துக்களை பார்க்க முடியும்.

சரி, இளநீர் வங்கி குடிக்கலாம் என்றால் இளநீர் கடையைத் தேடி கண்டுபிடிப்பதற்குள் கண் கட்டிவிடும்.

இப்படி இருக்கும் இளநீரை பாட்டிலில் அடைத்து விற்று லாபம் பார்க்கலாம் என்ற முயற்சியில் இறங்கிய ஒருவரின் கதை பற்றித் தான் நாம் இன்று பார்க்க இருக்கின்றோம்.

ரசாயன கலப்படம் இல்லாமல்

ரசாயன கலப்படம் இல்லாமல்

இயற்கையான இந்த இளநீரில் எந்த ரசாயன கலப்படமும் இல்லாமல் நாம் வைட்டமின் சி, வைட்டமின் பி, பொட்டாசியம், கால்ஷியம், இரும்பு சத்துடன் குளுக்கோஸ் போன்றவை கிடைக்கும்.

ஒலிம்பிக் விளையாட்டில்

ஒலிம்பிக் விளையாட்டில்

ஒலிம்பிக் விளையாட்டில் போட்டியில் பங்கேற்பவர்களுக்குச் சத்தான பணங்களாக இளநீர் அளிக்கின்றனர். இப்படிப் பட்ட இளநீர் பாகெட்களில், பாட்லிகளில் எல்லாம் அடைத்து வைத்து விற்பனை செய்து வருவது மக்கள் மத்தியில் அதிகளவிலான வரவேற்பு கிடைத்துள்ளது.

தொழிலை துவங்கவும் ஒரு வழிக்காட்டி

தொழிலை துவங்கவும் ஒரு வழிக்காட்டி

இப்படி கேரளாவில் வணிகம் செய்யும் ஒருவருடைய கதையைத் தான் நாம் இங்குப் பார்க்க இருக்கின்றோம். இந்த கட்டுரை பல பேருக்கு இத்தொழிலை துவங்கவும் ஒரு வழிக்காட்டியாக அமையும்.

வைக்கம்

வைக்கம்

கேரள மாநிலத்தில் உள்ள வைக்கித்தில் உள்ளவர்கள் தென்னை மரங்கள் வைத்துத் தான் பெரும்பாலும் பிழைப்பை நடத்தி வருகின்றனர்.

இளநீர்

இளநீர்

இதற்காக இங்கு உள்ள டிவி புரம் ஃபார்மஸ் சர்வீசஸ் வங்கி இளநீர் உள்ளிட்ட பானங்களை விற்பனை செய்யும் பிரிவை நடத்தி வந்தது. இந்தப் பிரிவு நட்டத்தில் இயங்கிவந்த நேரத்தில் பைஜு என்பவர் தான் இந்த இளநீர் பிரிவை எடுத்து நடத்தகின்றேன் என்று கூறியுள்ளார்.

பைஜுவிற்கு ஒப்பந்தம்

பைஜுவிற்கு ஒப்பந்தம்

இதனைத் தொடர்ந்து நிர்வாகம் இளநீர் பிரிவை பைஜுவிற்கு லீஸில் அளித்தது. இதில் இருந்து பெறும் லாபத்தில் ஒரு பங்கை வங்கிக்கு அளித்தால் போதும் என்று ஒப்பந்தமும் போடப்பட்டது.

நட்டம்

நட்டம்

நிறுவனத்தை எடுத்து நடத்தும் பொறுப்பு பைஜுவிற்கு வந்த போதிலும் வங்கி எப்படி நட்டத்தைச் சந்தித்ததோ அதையே இவரும் சந்தித்தார்.

வலிமை படுத்த திட்டம்

வலிமை படுத்த திட்டம்

பின்னர் தனது விற்பனை முறையை வலிமை படுத்த திட்டம் போட துவங்கினார் பைஜு. இதற்காக மார்க்கெட்டிங் குழு ஒன்றை உருவாக்கி சந்தை நிலவரத்தை ஆராய்ந்து நிரந்தரமான விலை, பிறாண்டு போன்ற சில மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளார்.

இளநீர் கூழ்

இளநீர் கூழ்

அது மட்டும் இல்லாமல் விற்பனையாளர்களுக்கான திட்டங்கள், தரமான பேக்கிங் போன்றவற்றைச் செய்து ‘இளநீர் கூழ்' என்ற பெயரும் வைத்தார்.

கொள்முதல்

கொள்முதல்

இதற்காக இளநீரைக் கொள்முதல் செய்ய ஒரு டாடா ஏஸ் வாகனமும் வாங்கினார். இந்த வாகனங்கள் மூலம் அருகில் உள்ள தென்னை தோப்புகளில் இருந்து தரத்திற்கு ஏற்றவாறு குறைந்தது 10 ரூபாய் ஒரு இளநீர் என்ற விலையில் கொள்முதல் செய்யத் துவங்கினார்.

அது மட்டும் இல்லாமல் கோட்டையாம், எர்ணாகுளம் உள்ளிட்ட இடங்களில் இருந்தும் இளநீர்களைக் கொள்முதல் செய்யத் துவங்கியுள்ளார் பைஜு. இப்படிச் சேகரிக்கும் இளநீர்களை முதலில் துனியால் துடைத்துச் சுத்தம் செய்து அதனைக் கட்டர்கள் வைத்து வெட்டி நீரை மட்டும் தண்ணீர் கேன்களில் வடிகட்டி சுத்தமாகச் சேகரித்துக்கொள்வார்களாம் ஊழியர்கள்.

 

உற்பத்தி செய்யும் முறை

உற்பத்தி செய்யும் முறை

இப்படி எடுக்கப்படும் இளநீர் மூன்று மணி நேரத்தில் பதப்படுத்தப்பட்டுப் பாட்டிலில் அடைக்கப்பட்டுவுடன் குளிர்சாதனப் பெட்டியில் வைத்துவிட வேண்டுமாம். இல்லை என்றால் இளநீரின் சுவை மாறிவிடும்.

குளுக்கோஸ் சேர்க்கை

குளுக்கோஸ் சேர்க்கை

இப்படி வடிகட்டப்பட்ட இளநீரில் குளுக்கோஸ் சேர்த்துக்கொள்வார். குளுக்கோஸ் எதற்காக என்றால் பல மரங்களில் இருந்து வெட்டப்பட்ட இளநீர் தேங்காய்களால் சுவை மாறிவிடும் என்றும், இதனைச் சமப்படுத்தவே என்றும் பைஜு கூறுகிறார்.

பேக்கிங்

பேக்கிங்

பின்னர்ச் சுத்தமான பிறாண்டு ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட பாட்டில்களில் இளநீரைக் குறிப்பிட்ட அளவிற்கு நிரப்புகின்றனர். இப்படி நிறப்பப்பட்ட பாட்டில்களில் அடுத்து மீதும் உள்ள அளவில் கார்பன் டை ஆக்சைடு நீரும் சேர்க்கப்படுகின்றது. இதனால் இளநீர் குளிர்பானத்தின் தன்மை மாறாமல் இருக்கும்.

இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம்

இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம்

இளநீர் தயாரிப்பு நிறுவனத்தின் பேரில் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம்(fsaat) நிறுவனத்தில் பதிவு செய்து சண்றிதழும் பெற்றுள்ளார் பைஜு.

பிரசர்வேட்டிவ் ஏதும் சேர்க்கப்படுவதில்லை

பிரசர்வேட்டிவ் ஏதும் சேர்க்கப்படுவதில்லை

இளநீர் கூழ் பானத்தில் பிரசர்வேட்டிவ் ஏதும் சேர்க்கப்படுவதில்லை என்று கூறுகின்றார் பைஜு. இதை உருவாக்கும் பணி மற்றும் குளிர் சாதனப் பெட்டிகளில் வைத்து இதனை விற்பனை செய்வதால் உடல் நலத்திற்குப் பாதிப்பு ஏதும் இல்லை என்றும் கூறினார்.

வருங்கால திட்டம்

வருங்கால திட்டம்

இதன் மூலம் கேரளாவில் உள்ள கோலா பாணங்களுக்குப் போட்டியாக விற்பனை செய்யவும், கேரளா முழுவதும் விற்பனையை விரிவுபடுத்தும் முயற்சியில் உள்ளதாகவும் பைஜூ கூறுகின்றார்.

தினசரி உற்பத்தி

தினசரி உற்பத்தி

தினமும் இது போன்று 4000 முதல் 5000 பாட்டில்கள் வரை உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்படுகின்றது.

உற்பத்தி செலவு அதிகம்

உற்பத்தி செலவு அதிகம்

பொதுவாகக் குளிர்பானங்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு 4 முதல் 5 ரூபாய் வரை மட்டுமே உற்பத்தி செலவு ஆகும். ஆனால் இளநீர் ஒன்றை நாங்கள் குறைந்தது 10 வரை விலை கொடுத்து கொள்முதல் செய்வதால் உற்பத்தி விலை அதிகமாக உள்ளது என்றார் பைஜூ.

இவை மட்டும் இல்லாமல் போக்குவரத்துச் செலவு, டிஸ்டிரிபியூட்டர்கள் மற்றும், விற்ப்பனையாளர்களுக்கான கமிஷன் போன்றவையும் விலை அதிகமாக இருக்கக் காரணம். ஆனால் இயற்கையான பானம் என்பது ஒரு சிறப்பு.

 

நான்கு மாதங்கள் கெடாமல் இருக்கும்

நான்கு மாதங்கள் கெடாமல் இருக்கும்

இளநீர் கூல் நான்கு மாதங்கள் வரை கெடாமல் இருக்கும். இளநீர் கூல் நிறுவனத்தால் தென்னை மரம் வளர்ப்பவர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். நஷ்டம் இல்லாமல் விவசாயிகளும் பயன்பெறுவார்கள் என்று கூறுகின்றனர்.

கிளைகள்

கிளைகள்

இளநீர் கூல் நிறுவனத்திற்காக மேலும் கிளைகளை அருகில் உள்ள பிற நகரங்களில் பைஜூ துவங்கி உள்ளார். இப்போது மூன்று இடங்களில் கிளைகள் இருக்கும் இந்த நிறுவனத்தில் இப்போது 22 ஊழியர்கள் பணியில் ஈடுபடுகின்றனர்.

லாபம்

லாபம்

துவக்கத்தில் இருந்த பிரச்சனைகள் எல்லாம் இப்போது குறைந்துள்ள நிலையில் கார்ப்ரேட் நிறுவனங்கள் போன்ற லாபம் இல்லை என்றாலும், தான் எதிர்பார்த்த லாபம் இப்போது பெற்று வருவதாகப் பைஜூ கூறினார்.

இளநீர் கூல் மட்டும் இல்லாமல் ஐஸ்கிரீம், தேங்காய் எண்ணெய், போன்றவற்றைத் தயாரிக்கும் பணியிலும் பைஜூ ஈடுபட்டு வருகின்றார்.

 

பைஜூவை நீங்கள் தொடர்புகொள்ள விருப்பினால்

பைஜூவை நீங்கள் தொடர்புகொள்ள விருப்பினால்

பைஜு என் டி,
கௌப்ராடு இளநீர் திட்டம்,
டி வி புரம், வைக்கம்,
கோட்டயம் மாவட்டம்.
தொலைப்பேசி: 9747150330

விரைவில் தென்னை மரம், மற்றும் தேங்காய் பயன்படுத்திக் குறைந்த செலவில் எப்படியெல்லாம் வியாபாரம் செய்யலாம் என்பதை விளக்கும் சிறப்பு கட்டுரை தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தில் பெறலாம்.

 

முக்கிய குறிப்பு

முக்கிய குறிப்பு

அதே நேரத்தில் நீங்களும் இதே போன்று வித்தியாசமாக ஒரு வணிகத்தைச் செய்து வருகின்றீர்களா? அல்லது வணிகம் செய்பவர்கள் பற்றி உங்களுக்குத் தெரியுமா? அதன் பற்றிய கட்டுரை அல்லது விவரங்களை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

பிசினஸ் படு ஜோர்..!

பிசினஸ் படு ஜோர்..!

அமெரிக்க கனவு

அமெரிக்க கனவு

அமெரிக்க கனவை நினைவாக்க 5,00,000 டாலரை கொட்டும் இந்தியர்கள்..!

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+