சேவை கட்டணம் இல்லை, குறைந்தபட்ச இருப்பு போதும் 'சூப்பர் சேமிப்பு கணக்கு' தேவைக்கான 5 காரணங்கள்..!

Written By: Tamilarasu
Subscribe to GoodReturns Tamil

நம்மில் பலருடைய வாழ்க்கையிலும் வங்கியில் சேமிப்பு கணக்கு இருப்பது ஒரு மைல்கல்லைக் குறிக்கிறது. இதன் முக்கிய நோக்கம் எனக்குக் கிடைக்கும் வருமானத்தைப் பொறுப்புடன் நிர்வகிக்க வேண்டும் என்பதாகும்.

ஆனால் நீங்கள் உங்களுடைய வருமானத்தில் இருந்து 4% வட்டி பலன் மட்டுமே உங்களுக்குக் கிடைக்கும் என்றால் அதை ஒரு பொறுப்பான பண மேலாண்மை என்று அழைக்க முடியுமா? முடியாது. ஏனெனில் பணவீக்க விகிதம் உங்கள் சேமிப்பு விகிதத்தை விட அதிகமாக இருந்தால், (தற்போதைய நிலவரப்படி சுமார் 6%) அது உங்கள் பணத்தை அரித்துக் கொண்டிருக்கிறது என்று பொருள்.

எனவே, உங்களுடைய மற்ற தேர்வுகள் என்னென்ன?

சில நாட்களுக்கு முன் ரிசர்வ் வங்கி சேமிப்பு கணக்கிற்கான வட்டி விகிதங்களை மாற்றி அமைத்திருக்கிறது. இதன் காரணமாக வங்கிகள் இப்போது சேமிப்புக் கணக்குகளுக்கு அதிக வட்டிகளை வழங்க முடியும் மற்றும் அதே நேரத்தில் சந்தையில் அதிகப் போட்டியும் இருக்கும்.

ஆனால் வங்கிகள் உண்மையிலே வாடிக்கையாளர்களுக்குச் சிறப்பான சேவை செய்கின்றனவா?

இல்லை, ஒரு சில ஸ்வீப் கணக்குகளில் மட்டும் செயலற்ற நிதிகளை நீண்ட கால வைப்பு நிதிக்கு மாற்றும் போது 6% வட்டி வழங்கப்படுகிறது. ஆனாலும் இது பணவீக்கத்தைச் சமாளிக்க இன்னும் போதாது.

இப்போது இதற்கு வேறு வழியே இல்லையா என்று நீங்கள் நினைப்பது எங்களுக்குப் புரிகிறது. உங்களுக்காகவே நாங்கள் இன்னும் புத்திசாலியான சேமிப்பு முறைகள் பற்றிச் சொல்ல போகிறோம் .மேலும் உங்களுடைய பணத்தை வெறுமனே சேமிப்புக் கணக்கில் வைத்திருப்பதற்குப் பதிலாக மற்ற கணக்கிற்கு ஏன் மாற்ற வேண்டும் என்றும் விரிவாக விளக்குகிறது இந்தக் கட்டுரை.

 

ஒரேஆண்டில் உங்கள் வருமானத்தில் இருந்து 8.65% வட்டியைச் சம்பாதிக்க முடியும் – என்ன மலைப்பாக இருக்கிறதா ?

நீங்கள் நினைப்பது சரி. பண்ட்ஸ் இந்தியாவால் தொடங்கப்பட்ட சூப்பர் சேமிப்பு கணக்கான இது ஒரு புதுமையான முயற்சி அதாவது இந்த இரண்டு சேமிப்பு உலகிலும் இருந்து மிகசிறந்த வருமானத்தை உங்களுக்குக் கொடுக்கும். உங்களுடைய சேமிப்பு கணக்கின் மூலம் அதிகப்படியான வருவாயைப் பெற்று தருவது அதே சமயத்தில் உங்களுடைய சேமிப்பு கணக்கின் பணப்புழக்கத்திற்கு எந்த ஒரு சமரசமும் ஏற்படாதவாறு பார்த்துக் கொள்வதும் இதன் முக்கிய நோக்கம்.

இந்தச் சூப்பர் சேமிப்பு கணக்கானது உங்களுடைய உபயோகப்படுத்தாமல் இருக்கும் பணத்தை ஒரு பணப்புழக்கமுடைய பரஸ்பர நிதியில் முதலீடு செய்வதன் மூலம் உங்களுக்கு அதிக வருமானத்தைப் பெற்று தரும் சாத்தியம் உள்ளது. இது எவ்வாறு செயல்படுகிறது என்றால், உங்களுடைய பணத்தை ரிலையன்ஸ் மணி மேனேஜர் என்ற பரஸ்பர நிதியில் முதலீடு செய்வதன் மூலம் அதிகபட்சமாக உங்களுக்கு ( 7 ஜனவரி 2017 ன் படி) 8.65% வருமானத்தைப் பெற்று தரும். அது ஒரு சராசரி சேமிப்பு கணக்கின் வட்டி விகிதத்தை விட இருமடங்கு அதிகமானதாக இருக்கும்.

 

இது, பாதுகாப்பான , புத்திசாலியான மற்றும் வசதியான தேர்வு

ஏன் தெரியுமா, நீங்கள் முதலில் எப்படி ஒரு பணப்புழக்க நிதியானது வேலை செய்கிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

ஒரு பணபுழக்க அல்லது பணச் சந்தை நிதி என்பது பாதுகாப்பான பரஸ்பர நிதியாகும். ஒரு பண்புழக்க நிதியின் முதன்மை நோக்கம் நீங்கள் அதைச் சிறந்த முறையில் பயன்படுத்துவதைக் கண்டுபிடிக்கும் வரை செலவு செய்வதையோ அல்லது அதை மேலும் முதலீடு செய்வதையோ அனுமதிக்காது. இதன் காரணமாக இந்த வகையான நிதி முதலீடுகள் முக்கியமாக மிகவும் பாதுகாப்பான முதலீடாக அறியப்படுகின்றன. முக்கியமாக அரசாங்க கருவூல செலவினங்கள், குறுகிய கால அரசாங்க பத்திரங்கள் மற்றும் அழைப்பு பணச்சந்தை, இவை எல்லாம் பாதுகாப்பாகவும் அதே நேரத்தில் அதிகப் பணப் புழக்கமும் (91 நாட்களுக்கும் குறைவான முதிர்வு காலம்) இருக்கும்.

 

லிக்விட் பண்ட்

இந்தப் பணப்புழக்க நிதியின் (லிக்விட் பண்ட்) ஒரு சிறிய குறை என்னவென்றால், சில உயர் முதலீடுளுக்கு அதிகப் பணம் தேவைப்படும். எனவே தங்களுக்குப் பணம் வேண்டும் என்று நினைத்தால் நீங்கள் குறைந்தது 24 மணி நேரமாவது காத்திருக்க வேண்டும். அதுவே ஒரு வார இறுதி என்றால், நீங்கள் சில நாட்கள் காத்திருக்க நேரிடலாம்.
சூப்பர் சேமிப்பு கணக்கு இந்தப் பிரச்சனைக்கு ஒரு தீர்வாக அமைகிறது. இது பணப்புழக்க நிதியின் பயன்களைத் தரும் அதே நேரத்தில் அதில் இருந்து நீங்கள் ஒரு சேமிப்பு கணக்கின் நன்மைகளையும் பெற முடியும். இப்போது, நீங்கள் விரும்பும் எந்த நேரத்திலும் உங்கள் பணத்தை அணுக முடியும் மற்றும் இன்னும் அதிக வருமானம் கிடைக்கும்,.

மேலும் நீங்கள் மற்றும் உங்கள் சூப்பர் சேமிப்புக் கணக்கில் இருந்து உள்ளேயும் வெளியேயும் பணம் பரிமாற்றம் செய்ய முடியும். ஒரு லிக்வில் பண்ட் போலல்லாமல், நீங்கள் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒரு பணப் பரிமாற்ற சேவைக்கான கட்டளையை அமைத்தவுடன் 2 மற்றும் 3 நிமிடங்களில் உங்கள் வங்கி கணக்கில் அதிகப் பட்சமாக 30 நிமிடங்களில், உங்கள் கணக்கில் பணம் வரவு வைக்கப்படும்.

 

சேமிப்பு கணக்கு போன்றே பயன்படுத்த முடியும்

இதில் நீங்கள் ஒரு சேமிப்பு கணக்கின் அனைத்து நன்மைகளையும் பெற முடியும். ஒரு சூப்பர் சேமிப்புக் கணக்கில் உள்ள நிதியை எளிதில் அணுக முடியும். அதை நீங்கள் ஒரு சேமிப்பு கணக்கு போன்றே பயன்படுத்த முடியும். நீங்கள் ஷாப்பிங் நிலையங்களிற்குப் பயன்படுத்த அல்லது ஏடிஎம்களில் இருந்து பணத்தை எடுக்க உங்கள் சொந்த விசா டெபிட் கார்டை இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம்.

கூடுதலாக, உங்களுக்கு வாழ்நாள் முழுவதும் பயன்படுத்துவதற்கான முதலீடு கணக்கை பெற்றுக்கொள்வீர்கள். இதில் நீங்கள் பண்ட்ஸ் இந்தியாவின் பரஸ்பர நிதி, பங்கு முதலீடு, பெருநிறுவன வைப்புகள் போன்றவற்றில் முதலீடு செய்யமுடியும்.

 

குறைந்தபட்ச இருப்பு இருந்தால் போதும்

எந்த ஒரு குழப்பமான சேவைக் கட்டணம் இல்லை மற்றும் சேமிப்பில் குறைந்தபட்ச இருப்பு இருந்தால் போதும்.

பல வங்கி கணக்குகள் தேவையற்ற மற்றும் வரிகளுக்கென்று ஒரு தொகையை வாடிக்கையாளர் தலையில் கட்டும் போது, சூப்பர் சேமிப்புக் கணக்கு வாழ்க்கையை எளிதாக்குகிறது. இந்தக் கணக்கை திறப்பதற்குச் சேவை கட்டணம் இல்லை. மேலும் குறைந்தபட்ச இருப்பு வெறும் ரூ .500 ஆகும்.

பல சேமிப்புக் கணக்குகள் குறைந்த வட்டி விகிதங்களை வழங்குவது மட்டுமல்லாது அதிக இருப்புத் தொகை இருக்க வேண்டும் என்ற நிபந்தனையினால் பெருமூச்சு விடும் வாடிக்கையாளர் மத்தியில் இது ஒரு நல்ல தேர்வாக அமைகிறது.

 

சூப்பர் சேமிப்பு கணக்கு பெறுவது எளிது

யார் வேண்டுமானாலும் ஒரு சூப்பர் சேமிப்புக் கணக்கை ஆரம்பிக்கலாம். உங்களுக்குத் தேவையான தெல்லாம் ஒரு இந்தச் சேமிப்பிற்குப் பணம் பரிமாற்றம் செய்வதற்கு ஒரு சேமிப்பு கணக்கு இருக்க வேண்டும் அவ்வளவு தான். பதிவு செய்வதற்குக் கீழே உள்ள இணைப்பை கிளிக் செய்து கொடுக்கப்பட்டுள்ள மூன்று எளிய முறையைப் பின்பற்றவும். இது முற்றிலும் காகிதமற்ற எளிய முறை. மின்னணு வாடிக்கையாளர்கள் படிவத்தினைத் தங்களுடைய ஆதார் எண்ணுடன் சமர்ப்பித்து விட்டீர்கள் என்றால் இன்னும் சில நிமிடங்களில் உங்களுடைய கணக்கை ஆரம்பித்து விடலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

5 reasons you need the Super Savings Account

5 reasons you need the Super Savings Account
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns