விசா, மாஸ்டர் டெபிட் கார்டுகளை ஓரம்கட்டும் ரூபே..!

ரூபே கார்டுகளுக்கும் விசா, மாஸ்டர் டெபிட் கார்டுகளுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா..?

இந்திய தேசிய கொடுப்பனவுகள் கார்ப்பரேஷன்(NPCI) ரூபே கார்டுகளை அறிமுகப்படுத்தியது இருந்து அதை வைத்து டிஜி தன் மேலா போன்ற விளம்பரங்களைச் செய்து பரிசுகளை அளித்ததோ தவிர ரூபே கார்டு பற்றிய விவரங்களை முறையாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை என்று கூறலாம்.

ரூபே கார்டுகளும் விசா, மாஸ்டர் கார்டுகள் போன்ற முழுமையாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்தியாவிற்குச் சொந்தமான பணப் பரிமாற்ற கேட்வே ஆகும்.

ஏற்கனவே விசா, மாஸ்டர் கார்டுகள் உள்ள போது நாம் எதற்கு ரூபே கார்டுகளுக்கு மாற வேண்டும்?

ஏற்கனவே விசா, மாஸ்டர் கார்டுகள் உள்ள போது நாம் எதற்கு ரூபே கார்டுகளுக்கு மாற வேண்டும்?

விசா, மாஸ்டர் கார்டுகள் போன்ற சேவை அளிக்கும் நிறுவனங்கள் அனைத்தும் வெளிநாட்டு நிறுவனங்கள். நாம் இங்குச் செய்யும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் வங்கிகள் அவர்களுக்குச் சில கட்டணங்களைச் செலுத்து வருகின்றன. அதற்காக நமது வங்கி கணக்குகளில் இருந்தும் அவ்வப்போது கட்டணங்கள் பிடிக்கப்படுகின்றன.

இந்தக் கட்டணமாகப் பெறப்படும் வருவாய் அனைத்தும் வெளிநாட்டில் உள்ள இந்த விசா, மாஸ்டர் போன்ற நிறுவனங்களுக்குக் கொண்டு செல்வதைக் குறைக்கவே மத்திய அரசு ரூபே கார்டுகளை அறிமுகப்படுத்தியது. ஆனால் முறையாக நாட்டு மக்களுக்கு இதனைக் கொண்டு செல்ல மத்திய அரசு தவிரவிட்டது.

 

ரூபே கார்டில் கட்டணங்கள் உண்டா? இல்லையா?

ரூபே கார்டில் கட்டணங்கள் உண்டா? இல்லையா?

ரூபே கார்டுகளில் பணப் பரிமாற்ற கட்டணங்கள் உண்டு ஆனால் விசா, மாஸ்டர் கார்டுகளை விடக் குறைவான கட்டணங்கள் தான் வசூலிக்கப்படுகின்றது.

வேகமும் செயல்பாடும்

வேகமும் செயல்பாடும்

முழுமையாக இந்தியாவிலேயே செயல்படுவதால் ரூபே கார்டுகள் விசா, மாஸ்டர் கார்டுகளை விட வேகமாகச் செயல்படுகின்றன. விசா மற்றும் மாஸ்டர் கார்டுகள் சர்வதேச அளவில் செயல்படுவதால் வேகம் குறைவாக உள்ளது.

ரூபே கார்டில் உள்ள சிக்கல் என்ன?

ரூபே கார்டில் உள்ள சிக்கல் என்ன?

ரூபே கார்டுகளைப் பொருத்தவரை உள்நாட்டில் எளிதாகப் பயன்படுத்த முடியும், ஆனால் வெளிநாடுகளில் விசா கார்டுகள் போன்று ரூபே கார்டுகளைப் பயன்படுத்த முடியாது.

ரூபே நெட்வொக்கில் வங்கிகள் சேர என்ன செய்ய வேண்டும்?

ரூபே நெட்வொக்கில் வங்கிகள் சேர என்ன செய்ய வேண்டும்?

ரூபே நெட்வொர்க்கில் வங்கிகள் சேர கட்டணம் ஏதும் செலுத்த தேவையில்லை. ஆனால் விசா போன்ற கார்டு திட்டங்களில் சேரக் கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன.

டெபிட்/கிரெடிட்

டெபிட்/கிரெடிட்

ரூபே கார்டுகள் டெபிட் கார்டுகள் மட்டுமே வழங்குகின்றன. ஆனால் விசா போன்ற நிறுவனங்கள் கிரெடிட், டெபிட் கார்டு இரண்டையும் வழங்குகின்றன.

பரிவர்த்தனை தரவு

பரிவர்த்தனை தரவு

ரூபே கார்டு நிறுவனம் உள்நாடு நிறுவனம் என்பதாலும் மேலும் வெளிநாடுகளில் பயன்படுத்த முடியாது என்பதாலும் உங்கள் பரிவத்தனை தகவல்கள் வெளிநாடு வரை சென்று வர வாய்ப்பில்லை.

வாடிக்கையாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

வாடிக்கையாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

டெபிட் கார்டு வாடிக்கையாளர்கள் வெளிநாடுகளுக்குச் செல்ல போவதில்லை என்றால் ரூபே கார்டுகள் வேண்டும் என்று வங்கிகளுக்குக் கோரிக்கை வைக்க வேண்டும். இதனால் உள்நாட்டில் டெபிட் கார்டுகள் பயன்படுத்தப்படும் போது எடுக்கப்படும் கட்டணங்கள் குறைய வாய்ப்புள்ளது.

வெளிநாடுகள் செல்லும் போது விசா போன்ற கார்டுகளுக்கு விண்ணப்பித்துப் பெற்றுக்கொள்வது நல்லது.

 

அரசு என்ன செய்ய வேண்டும்?

அரசு என்ன செய்ய வேண்டும்?

மத்திய அரசு பொதுத் துறை வங்கிகள் அனைத்தும் இனி வாடிக்கையாளர்களுக்கு இது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதைக் கட்டாயப்படுத்த வெண்டும். அது மட்டும் இல்லாமல் மக்களுக்கு ரூபே கார்டுகளைப் பிரபலப் படுத்த பரிசுகளை அளிக்காமல் அதன் பயனை விளக்க வேண்டும். இதனால் இந்தியர்கள் ரூபே டெபிட் கார்டுகளைப் பயன்படுத்திப் பொருட்களை வாங்கும் போது அரசுக்கும் வருமானம் கிடைக்கும்.

விசா நிறுவனத்தால் ரஷியாவிற்கு ஏற்பட்ட சிக்கல்

விசா நிறுவனத்தால் ரஷியாவிற்கு ஏற்பட்ட சிக்கல்

ரூபே கார்டு போன்றே ரஷியா அமெரிக்கா இடையே உள்ள பிரச்சனைகளால் விசா நிறுவனத்தை வெளியேற்றிவிட்டு மைர் நேஷனல் பேமெண்ட்ஸ்(எம்என்பி) என்ற சேவையை ரஷியா அறிமுகப்படுத்தியது. இதே காலகட்டத்தில் தான் இந்தியாவும் ரூபே கார்டினை அறிமுகப்படுத்தியுள்ளது. இதனால் விசா, மாஸ்டர் கார்டுகளுக்கு இந்தியாவில் எதிர்ப்பு கிளம்பினால் ரூபே கார்டுகள் உள்ளதால் சிக்கல் இல்லாமல் டெபிட் கார்டுகளை பயன்படுத்த முடியும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+