ஆதார் தகவல் திருட்டை தடுப்பது எப்படி..? முறைகேடாக பயன்படுத்துவதை தடுக்கும் வழி..!

பலர் எதற்காக இந்தப் பயோமெட்ரிக் தரவுகள் என்று நினைத்திருக்கலாம். பயங்கரவாதம் மற்றும் ஆள் மாறாட்டம் உள்ளிட்ட சிக்கல்களைப் பயோமெட்ரிக் மூலம் தவிக்கலாம்.

ஆதார் கார்டுக்கு விண்ணப்பிக்கும் ஒவ்வொருவருடைய கருவிழிகள், முகம், கைவிரல் ரேகை போன்றவற்றை இந்தியா தனிப்பட்ட அடையாள அட்டை ஆணையம் ஸ்கான் செய்து வைத்துக்கொள்ளும்.

பலர் எதற்காக இந்தப் பயோமெட்ரிக் தரவுகள் என்று நினைத்திருக்கலாம். பயங்கரவாதம் மற்றும் ஆள் மாறாட்டம் உள்ளிட்ட சிக்கல்களைப் பயோமெட்ரிக் மூலம் தவிக்கலாம். மோசடி நபர்களின் விவரங்களையும் கண்டறிய இந்தப் பயோமெட்ரிக் தரவுகள் உதவும். மேலும் இந்தத் தரவுகள் மூலமாகத் தவறு செய்த சரியான நபரை எளிதாகக் கண்டறிய முடியும்.

கருவிழி, கைவிரல் ரேகை போன்றவை 0-15 வயதுடைய குழந்தைகள் போன்று அவ்வளவு எளிதாக மாறக்கூடியவை அல்ல.

அன்மையில் ஆதார் தரவுகள் முறைகேடாகச் சிலர் பயன்படுத்துவதாகவும் புகார்கள் கிளம்பியுள்ளன. இப்படிப் பட்ட சூழலில் ஆதார் தரவை முறைகேடாகப் பயன்படுத்த முடியுமா? என்றால் முடியும் என்கின்றனர் வல்லுநர்கள்.

பிஓஎஸ்

பிஓஎஸ்

ஷாப்பிங் செய்யும் போது கார்டுக்கு பதிலாக பிஓஎஸ் இயந்திரங்களிலும் ஆதார் எண் மற்றும் பயோமெட்ரிக் தரவு பயன்படுத்திப் பரிவர்த்தனை செய்யும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இப்படிப் பிஓஎஸ் இயந்திரத்தில் பயோமெட்ரிக் தரவை உள்ளிடும் போது அதைச் சேமித்து வைத்து முறைகேடாகப் பரிவர்த்தனை செய்ய முடியும் என்று கூறுகின்றனர் வல்லுநர்கள்.

முக்கியமான பயோமெட்ரிக் தரவு

முக்கியமான பயோமெட்ரிக் தரவு

பயோமெட்ரிக் தரவுகள் அவ்வளவு முக்கியமானவையாக இருக்கும் போது அந்தத் தனிநபர் தரவுகள் தவறான வழிகள் பயன்படுத்தினால் என்ன ஆகும்? இதனால் இந்தப் பயோமெட்ரிக் தரவுகளை அரசே பாதுகாக்கின்றது, ஆதார் கார்டுக்குப் பதிவு செய்யும் போது இந்தத் தரவுகள் வெளியில் செல்லாத வகையில் அரசு தனியாகச் சேமிக்கின்றது.

அதுமட்டும் இல்லாமல் மத்திய அரசு ஆதார் பயோமெட்ரிக் தரவுகளுக்குப் பூட்டுதல் / திறப்பது போன்ற வசதிகளையும் அளிக்கின்றது.

 

மூன்றாம் நபர்களுக்கு எதற்காகப் பயோமெட்ரிக் தரவு

மூன்றாம் நபர்களுக்கு எதற்காகப் பயோமெட்ரிக் தரவு

எப்போது எல்லாம் உங்கள் தனிநபர் விவரங்கள் தேவைப்படுகின்றதோ அப்போது எல்லாம் அந்த மூன்றாம் நபர் தரப்பு அரசிடம் உங்கள் தரவிற்கு அனுமதி கேட்கும்.

உதாரணத்திற்கு வங்கி கணக்கு துவங்கும் போது வங்கிக்கு நீங்கள் அளித்துள்ள தனிநபர் விவரங்கள் வேண்டும் என்றால் அரசிடம் கோரிக்கையை வைத்து வங்கி கேட்டுப் பெற்றுக்கொள்ளும்.

 

சரி, இப்போது பயோமெட்ரிக் தரவுகளைப் பூட்டுவது என்றால் என்ன ஆகும்?

சரி, இப்போது பயோமெட்ரிக் தரவுகளைப் பூட்டுவது என்றால் என்ன ஆகும்?

உங்களது பயோமெட்ரிக் தரவுகளைப் பூட்டுவதன் மூலமாக மூன்றாம் நபருக்கு உங்களுடைய தனிப்பட்ட தரவுகள் தேவைப்படும் போது அவற்றை எளிதாகப் பெற முடியாது. உங்களது தனிப்பட்ட தரவுகள் பாதுகாப்பாக இருக்கும். எனவே உங்களது தரவை மூன்றாம் நபர் பெறுவதில் இருந்து தடுக்க அடுத்து எப்படிப் பூட்டுவது மற்றும் திறப்பது என்று இங்குப் பார்ப்போம்.

படி 1

படி 1

உங்களது ஆதார் பயோமெட்ரி தரவுகளைப் பூட்ட இந்த இணைப்பை கிளிக் செய்து உங்கள் 12 இலக்க ஆதார் எண்ணை உள்ளிட வேண்டும். பின்னர் அங்கு உள்ள கேப்ட்சாவை உள்ளிட்டு ஒரு முறை கடவுச்சொல் பெறக்கூடிய பொத்தானை கிளிக் செய்ய வேண்டும்.

படி 2

படி 2

பின்னர் ஆதார் அட்டையுடன் நீங்கள் இணைத்துள்ள மொபைல் எண்ணிற்கு வரும் ஒரு முறை கடவுச்சொல்லை உள்ளிட்டு உறுதி செய்ய வேண்டும். இப்படி உறுதி செய்த உடன் உங்களது ஆதார் கார்டு பூட்டப்படும்.

ஆதார் கார்டு தரவை பூட்டு நீக்க என்ன செய்ய வேண்டும்?

ஆதார் கார்டு தரவை பூட்டு நீக்க என்ன செய்ய வேண்டும்?

பூட்டப்பட்ட ஆதார் கார்டுகளை மீண்டும் பூட்டு நீக்க மேலே கூறிய அந்த இரண்டு படிகளை மீண்டும் செய்வதன் மூலம் பூட்டு நீக்கலாம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+