சொத்துக் காப்பீடு வாங்குவதற்கு முன்பு நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய 7 விஷயங்கள்..!

சொத்துக் காப்பீடு வாங்குவதற்கு முன்பு நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய 7 விஷயங்கள்..!

சென்னை: காப்பீடு ஒரு சொத்தின் உரிமையாளரை நிதியளவில் சேதம் இழப்பீடு அல்லது திருட்டு போன்ற நிகழ்வுகளிலிருந்து காக்க, சொத்துக் காப்பீடு அத்தியாவசியமானதாகும்.

சொத்து காப்பீடு என்பது கட்டிடங்கள், இயந்திரங்கள், சரக்கிருப்பு மற்றும் பலவற்றின் சேதாரங்களுக்கு எதிராகப் பாதுகாப்பளிப்பது, மற்றும் தீ அல்லது திருட்டு அபாயங்கள் மற்றும் பலவற்றிற்கு எதிராகப் பாதுகாப்பதும் இதில் சேர்ந்ததாகும்.

நீங்கள் தேடும் காப்புறுதி வகையைப் பொறுத்து பல்வேறு வகையான சொத்துக் காப்பீடுகள் உள்ளன. சில காப்பீடுகள் நிலநடுக்கம், சுனாமி, மற்றும் வெள்ளம் போன்றவற்றிற்கு மட்டும் காப்பளிப்பதில்லை ஆனால் வீட்டிற்குள் நடக்கும் சேதங்களையும் உள்ளடக்கி காப்பளிக்கின்றன.

இங்கே சொத்துக் காப்பீட்டைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 7 விஷயங்கள் கொடுக்கப்பட்டுள்ளன:

திருட்டு கொள்ளை

திருட்டு கொள்ளை

திருட்டு கொள்ளையிலிருந்து பாதுகாப்பளிக்கும் காப்பீட்டு ஆவணம் காப்பீடு செய்யப்பட்ட பகுதியில் உள்ள சொந்தமான சரக்கிருப்புகள், வியாபாரப் பொருட்கள் ஆகியவற்றிற்கும் சேர்த்துப் பாதுகாப்பு அளிக்கிறது. மேலும் இந்தக் காப்பீடு, நீங்கள் பாலிசியில் குறிப்பிட்டிருந்தால், பாதுகாப்புப் பெட்டகம் அல்லது பணப்பெட்டி ஆகியவற்றில் வைத்துப் பூட்டப்பட்ட பணம், மதிப்பு மிக்கப் பொருட்கள், முதலீட்டுக் காப்பாவணங்கள் ஆகியவற்றிற்கும் காப்பளிக்கிறது.

அனைவருக்குமான காப்பீடு

அனைவருக்குமான காப்பீடு

பொதுக் காப்பீடு வழக்கமாக நகைகள் அல்லது எடுத்துச் செல்லக்கூடிய கையடக்கச் சாதனங்கள் மற்றும் பலவற்றிற்குக் காப்பீட்டை வழங்குகிறது. இந்தக் காப்பீடு பொதுவாக மிகவும் தேர்ந்தெடுத்து வழங்கப்படுகிறது. பாலிசியின் தயாரிப்பு, நிறுவனத்திலிருந்து நிறுவனத்திற்கு மாறுபடும்.

பிரபலமான ஒன்று

பிரபலமான ஒன்று

தீ விபத்து காப்பீடு, சொத்துக் காப்பீடுகளில் மிகவும் பிரபலமானவற்றில் ஒன்றாகும். தீ விபத்து காப்பீட்டுத் திட்டம் தீ விபத்தினால் ஒரு சொத்திற்கு ஏற்படும் ஏதேனும் எதிர்பாராத இழப்பு அல்லது சேதாரம் அல்லது அழிவு போன்றவற்றிற்கு எதிராகப் பாதுகாப்பை வழங்குகிறது.

முக்கியப் பொருட்கள்

முக்கியப் பொருட்கள்

தீ காப்பீட்டின் கீழ் இயந்திரங்கள், தொழிற்கூடங்கள், கருவிகள் மற்றும் உபரி பாகங்கள்; தொழிற்சாலைகள் மற்றும் கிடங்குகளில் உள்ள கச்சாப் பொருட்கள் உள்ளிட்ட சரக்குகள், செயற்பாட்டில் உள்ள பொருட்கள், பாதி முடிந்த அரையிறுதி பொருட்கள், முடிவடைந்த இறுதிப் பொருட்கள், கட்டுப் பொருட்கள் மற்றும் பல இந்தக் காப்பீட்டின் கீழ் காப்புப் பெறுகிறது.

கடல்சார் சரக்கு காப்பீடு

கடல்சார் சரக்கு காப்பீடு

கடல்சார் சரக்கு காப்பீடு, நீர் வழி, வான் வழி, சாலை வழி, அல்லது இரயில் வழி போக்குவரத்துகளுக்கு, பதிவு செய்யப்பட்ட சிப்ப அஞ்சல், தனியார் விரைவு அஞ்சல் அல்லது இவற்றின் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கலவை ஆகியவற்றிற்குக் காப்பீடு அளிக்கிறது.

ஆவணங்கள்

ஆவணங்கள்

நீங்கள் சொத்து காப்பீட்டிற்குத் தாக்கல் செய்ய வேண்டி வரும் போது எளியச் செயல்முறைக்குப் பின்வரும் ஆவணங்களை எடுத்துச் செல்லுங்கள்.

1. முதல் தகவல் அறிக்கையின் கொள்கை நகலின் புகைப்பட நகல்
2. காவல்துறையிடமிருந்து இறுதி அறிக்கை
3. அனைத்து விலை பொருள் விவரப்பட்டியல்கள், விலைப் பட்டியல், மற்றும் பழுதுபார்த்தல் மதிப்பீடுகளின் பிரதிகள்.
4. நேரத்தோடு நிறைவு செய்யப்பட்ட மற்றும் கையெழுத்திடப்பட்ட தாக்கல் படிவம்.

 

மறுகட்டுமான மதிப்பீடு

மறுகட்டுமான மதிப்பீடு

சொத்தின் மதிப்பு மறுகட்டுமான மதிப்பீடு என்று அழைக்கப்படும் ஒரு முறையைப் பயன்படுத்திக் கணக்கிடப்படுகிறது. சொத்தின் மதிப்பீடு ஒரு வீடு சேதமடைந்திருந்தால் அதை மறுகட்டுமானம் செய்ய ஆகும் செலவை அடிப்படையாகக் கொண்டு தீர்மானிக்கப்படுகிறது.

ஆய்வு

ஆய்வு

காப்பீடு வாங்க திட்டமிட்டுக் கொண்டிருக்கும் தனிநபர்கள் காப்பீட்டு முனைம விலைகள், தீர்வு விகிதங்கள் மற்றும் நிறுவனத்தின் நற்பெயர் ஆகியவற்றை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+