மூத்தக் குடிமக்களின் சேமிப்புத் திட்டங்கள் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 10 விஷயங்கள்..!
ஓய்வு பெற்ற பிறகு புத்திசாலித் தனமாக முதலீடு செய்வது முதன்மைப் பொறுப்பாகும். நேர்மையான வரவு மற்றும் பாதுகாப்பை வழங்கும் முதலீட்டுத் திட்டத்தை தேர்வு செய்வது மிகவும் முக்கியமானதாகும்.
தபால் அலுவலக சேமிப்புத் திட்டத்தின் கீழ், மூத்தக் குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS) அதற்கு மிகவும் பயனுள்ளதாகும். மூத்தக் குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பயன்களான உயர்ந்த திரும்ப பெறும் வரவு, குறைவான அபாயக் காரணிகள் மற்றும் வரி சேமிப்புத் திட்டங்கள் போன்ற காரணங்களினால் ஓய்வு பெற்றவர்கள் மத்தியில் அது மிகவும் பிரபலமாக ஆகியுள்ளது.
வங்கிகளால் வழங்கப்படும் நிரந்தர வைப்புத் திட்டங்களுக்குச் செல்வதற்குப் பதிலாக ஒருவர் அரசாங்க பின்புலம் கொண்ட இந்தத் திட்டத்தின் விவரங்களைச் சரிபார்ப்பது அவசியமாகும்.
இங்கே நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய மூத்தக் குடிமக்களின் 10 சேமிப்புத் திட்டங்கள் பற்றிக் கொடுக்கப்பட்டுள்ளது:
ஒரு கணக்கைத் தொடங்க தகுதி வரைமுறைகள்
60 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய தனிப்பட்ட நபர் இந்தக் கணக்கைத் தொடங்கலாம். மேலும் முதிர்வயது ஓய்வு முறையின் கீழ் ஓய்வு பெற்ற அல்லது விருப்ப ஓய்வுத் திட்டத்தின் (VRS) கீழ் ஓய்வு பெற்ற 55 முதல் 60 வயது வரை உள்ளவர்கள் கூட தகுதி உடையவர்கள். இந்தக் கணக்கைத் தொடங்கும் செயல்முறையானது ரூ 1 லட்சத்திற்குக் கீழ் இருந்தால் பணமாகவும், ரூபாய் 1 லட்சத்திற்கு மேல் இருந்தால் காசோலையாகவும் செய்யப்படும்.
வைப்புத் தொகை வரம்பு
வைப்புத் தொகையின் சேமிக்கப்பட்ட தொகை ரூபாய் 15 லட்சம் வரை இருக்க வேண்டும். (ரூ. 1000 பெருக்கல்களாக)
கணக்குகளின் எண்ணிக்கை
எத்தனை எண்ணிக்கைகள் வேண்டுமானாலும் கணக்குகள் திறக்கப்படலாம் ஆனால் அனைத்துக் கணக்குகளிலும் சேர்க்கப்பட்ட நிலுவைத் தொகையானது அதிகபட்ச முதலீடு வரம்பு ரூ 15 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். ஒரு வைப்புத் தொகையாளர் ஒன்றுக்கும் மேற்பட்ட கணக்குகளைத் தனிப்பட்டத் திறன் அல்லது வாழ்க்கைத் துணைவருடன் (கணவன் / மனைவி) கூட்டுக் கணக்காகவும் இருக்கலாம். கூட்டுக் கணக்கு வாழ்க்கைத் துணைவருடன் மட்டுமே திறக்க முடியும் மற்றும் அந்தக் கணக்கில் முதல் வைப்புத் தொகையாளர் முதலீட்டாளராக இருப்பார்.
நியமனம்
இந்த வசதிக் கணக்கைத் தொடங்கும் நேரத்திலும் மேலும் கணக்கைத் தொடங்கிய பிறகும் கிடைக்கப் பெறுகிறது.
வட்டி விகிதம்
தற்சமயம், திட்டத்தின் மீது வழங்கப்படும் வட்டி விகிதம் ஆண்டிற்கு 8.5 சதவீதம் ஆகும். வட்டித் தொகை காலாண்டுக்கு ஒரு முறை வரவில் வைக்கப்படும். வரவுத் தொகை தானியங்கியாக வரவில் வைக்கப்பட, தபால் அலுவலகத்தில் ஒரு தனிப்பட்ட சேமிப்பு கணக்கு தொடங்கப்படுவது தேவையாகும்.
கால வரையறை
இந்தத் திட்டத்தின் கீழ் முதிர்வுறும் காலம் 5 வருடங்களாகும். முதிர்வடைந்தப் பிறகு அந்தக் கணக்கு மேற்கொண்டு 3 வருடங்களுக்கு நீட்டிக்கப்படும். முதிர்வடைந்த நாளிலிருந்து 1 வருடத்திற்குள் 5 வருட கால எல்லையில் தபால் அலுவலகத்திற்கு வகுத்துரைக்கப்பட்ட வடிவத்தில் விண்ணப்பத்தைத் தருவதன் மூலம் நீட்டித்துக் கொள்ளலாம்.
முதிர்வடைவதற்கு முன் கணக்கை முடித்தல்
இந்தத் தேர்வு, ஒரு வருடத்திற்குப் பிறகு வைப்புத் தொகைக்குச் சமமான 1.5 சதவிகிதத் தொகையை கழித்த பின்பு மற்றும் இரண்டு வருடங்களுக்குப் பிறகு வைப்புத் தொகையின் 1 சதவிகிதத்தைக் கழித்த பின்பு மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. முதிர்வடைவதற்கு முன்பாக திரும்பப் பெற்றதற்கான அபராதக் கட்டணம் விதிக்கப்படும்.
கணக்கு இடமாற்ற வசதி
ஒரு நபர் தனது கணக்கை ஒரு தபால் அலுவலகத்திலிருந்து மற்றொன்றிற்கு மாற்றிக் கொள்ளலாம்.
தேவைப்படும் ஆவணங்கள்
உங்கள் வாடிக்கையாளர் படிவத்தைத் தெரிந்து கொள்ளுங்கள் (KYC), புகைப்படங்கள், நிரந்தரக் கணக்கு எண் (PAN), முகவரி மற்றும் வயது சான்றிதழ். ஓய்வு பெற்றவர்களுக்கு, முதிர்வயது ஓய்வு முறை அல்லது வேறு ஏதேனும் காரணங்களால் பணியிலிருந்து ஓய்வு பெற்ற தேதியைக் குறிப்பிடும் ஒரு பணியாளர் சான்றிதழ், சலுகைச் சான்றிதழ், பதவியின் பெயர் மற்றும் பணியில் இருந்த காலம் ஆகியவை தேவைப்படுகிறது.
வரிச் சலுகைகள்
இந்தத் திட்டத்தின் கீழ் செய்யப்படும் முதலீடானது வருமான வரிச் சட்டம் பிரிவு 80சி யின் கீழ் வரிச் சலுகைகளுக்கு உரிமை அளிக்கப்பட்டுள்ளது.
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்



Click it and Unblock the Notifications