தமிழ்நாடு ஸ்மார்ட் குடும்ப அட்டைக்கு இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்வது எப்படி..?

Written By: Tamilarasu
Subscribe to GoodReturns Tamil

சென்னை: இந்தியாவில் மிகப் பெரிய பிரச்சனை அரசு அலுகலகங்கள் சென்று நமக்குத் தேவையான குடும்ப அட்டை, சாதிச் சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டைப் போன்றவற்றைப் பெறுவது என்று கூறலாம்.

எனவே தமிழ்குட்ரிட்டர்ன்ஸ் தளம் உங்களுக்கு இணையதளம் மூலமாகத் தமிழகத்தில் எப்படி எளிதாக வீட்டில் இருந்தபடியே குடும்ப அட்டைக்கு விண்ணப்பிப்பது என்று இஙு விளக்கமாக அளிக்கின்றது. இதனைப் படித்துப் பயன்பெறுங்கள்.

தமிழ்நாடு உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tnpds.gov.in மூலமாக நீங்கள் எளிதாகக் குடும்ப அட்டைக்கு விண்ணப்பிக்கலாம். ஸ்மார்ட் ரேசன் கார்டுகள் பெறப் பதிவு செய்யலாம் என்று உங்களுக்குத் தெரியுமா.

2016-ம் ஆண்டுத் தீபாவளி முதல் தமிழக அரசு இணையதளம் மூலம் குடும்ப அட்டைக்கு விண்ணப்பிக்க www.tnpds.gov.in இணையளத்தை அறிமுகப்படுத்தியது.

ஆனால் இந்த இணையதளம் மூலமாக எப்போதும் குடும்ப அட்டைக்கு விண்ணப்பிக்க முடியது. இணையதளம் மூலம் குறிப்பிட்ட கால அவகாசத்தில் மட்டுமே புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பிக்க முடியும். அது எப்போது என்று செய்திகள் மூலம் அறிந்து கொண்டு பதிவு செய்வது நல்லது.

படி 1

www.tnpds.gov.in என்ற இணையதளத்தில் உள்நுழைந்து புதிய அட்டைக்கு விண்ணப்பிக்க என்ற தெரிவை தேர்வு செய்யவேண்டும்.

பூர்த்திச் செய்யப்படக் கட்டாயமானவை

* குறிக்கப்பட்ட அனைத்துப் புலங்களும் விண்ணப்பதாரரால் பூர்த்திச் செய்யப்படவேண்டியது கட்டாயமாகும்.

புதிய குடும்ப அட்டைக்காக விண்ணப்பிக்க, விண்ணப்பத்தில் உள்ள "இப்போது விண்ணப்பிக்க" பொத்தானை கிளிக் செய்யவும்.

 

குடும்ப விவரங்கள்

விண்ணப்பதாரரின் பெயர், தந்தை அல்லது கணவர் பெயர் மற்றும் முகவரி (கதவு எண், வீடு / அப்பார்ட்மெண்ட் பெயர் , தெரு பெயர் ) தமிழ் (அ ) ஆங்கிலத்தில் உள்ளிடவும். மாவட்டம், தாலுகா, கிராமம் ஆகியவற்றை அதனதன் பட்டியலிலிருந்து தேர்ந்தெடுக்கவும்.

உறுப்பினரை எப்படிச் சேர்பது

குடும்பத் தலைவர் மற்றும் உறுப்பினர் விவரங்களைச் சேர்ப்பதற்கு, "உறுப்பினரைச் சேர்க்க" பொத்தானை அழுத்தவும் . முதலில் குடும்பத் தலைவரின் விவரங்களை உள்ளீடு செய்யவும்.

குடும்ப உறுப்பினர் ஒவ்வொருவருக்கும் பின்வரும் விவரங்களை உள்ளிடவும்

  • பெயர் தமிழ் (அ ) ஆங்கிலத்தில் - கட்டாயம்
  • பிறந்த தேதி - கட்டாயம்
  • பாலினம் - கட்டாயம்
  • தேசிய இனம் - கட்டாயம்
  • உறவுமுறை - கட்டாயம்
  • தொழில் - கட்டாயமற்றது
  • மாத வருமானம் - கட்டாயம்
  • வாக்காளர் அட்டை எண் - கட்டாயமற்றது
  • ஆதார் எண் - கட்டாயம்

குடும்ப அட்டை வகை

குடும்ப அட்டை வகையைத் தேர்வு செய்யவும் பொருட்களில்லா அட்டை, அரிசி அட்டை , சர்க்கரை அட்டை, காவல்துறை அட்டை.

குடியிருப்புச் சான்று

குடியிருப்புச் சான்றை பதிவேற்ற, குடியிருப்புச் சான்று பிரிவில் உள்ள ப்ரவ்ஸ் பொத்தானை அழுத்தவும். பின் கணினியில் தகுந்த கோப்பை தேர்ந்தெடுத்து, பதிவேற்றுப் பொத்தானை அழுத்தவும் .

குடியிருப்புச் சான்றுக்கான ஆவணத்தைத் தேர்வு செய்யவும் (மின்சாரக் கட்டணம், தொலைப்பேசி கட்டணம், வாக்காளர் அடையாள அட்டை, வங்கி கணக்குப் புத்தகத்தின் முன் பக்கம், சொந்த வீடு இருந்தால் அதன் சொத்து வரி, குடிசை மாற்று வாரியத்தின் ஒதுக்கீட்டு ஆணை, இதர.,).

 

பதிவேற்றும் படிவங்கள் இருக்க வேண்டிய வடிவம்

பதிவேற்றம் செய்யும் குடியிருப்புச் சான்று png, gif, jpeg வடிவத்தில் இருக்க வேண்டும் மற்றும் ஆவணத்தின் அளவு 2 மெகாபைட்ஸ் (MB) இருக்க வேண்டும்.

எரிவாயு இணைப்பு விவரங்கள்

ஏற்கனவே எரிவாயு இணைப்புப் பெறப்பட்டிருந்தால், சரிகுறிப் பெட்டியைக் கிளிக் செய்யவும். எரிவாயு இணைப்பு பற்றிய கீழ்க்கண்ட விவரங்களை அளிக்கவும்: கீழே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களும் இணைப்பு 1 பிரிவில் பூர்த்திச் செய்வது கட்டாயமாகும்.

1. எரிவாயு இணைப்புக்குரிய நபரின் பெயரைத் தேர்வு செய்யவும்
2. எண்ணெய் நிறுவனத்தின் பெயரைத் தேர்வு செய்யவும்
3. எல்.பி.ஜி நுகர்வோர் எண்ணை உள்ளிடவும்
4. எரிவாயு நிறுவனத்தின் பெயரை உள்ளிடவும்
5. சிலிண்டர் எண்ணிக்கை தேர்வு செய்யவும்

 

குறிப்பு:

குடும்ப அட்டைக்காக விண்ணப்பிக்கும் நபரிடம் இரண்டு எரிவாயு இணைப்பு இருந்தால், அந்த விவரங்களை இணைப்பு 2 பிரிவில்; உள்ளிடவும். உள்ளிட்ட விவரங்களை ஒப்புக்கொள்ள, உறுதிப்படுத்தல் பகுதியில் உள்ள சரிகுறிப் பெட்டியைக் கிளிக் செய்யவும்.

விண்ணப்பத்தைச் சமர்ப்பித்தல்

உள்ளிட்ட விவரங்களைச் சமர்ப்பிக்க, விண்ணப்பத்தில் உள்ள பதிவு செய் பொத்தானை கிளிக் செய்யவும். விண்ணப்பத்தைப் பதிவு செய்த பின்னர், உங்களுக்கு ஒரு குறிப்பு எண் அனுப்பப்படும்.

இந்த எண் உங்கள் விண்ணப்பத்தின் நிலையை அறியப் பயன்படுத்தப்படும் மேலும் எதிர்காலப் பயன்பாட்டிற்கும் உதவும்.

 

ஆதார் அட்டை

இந்திய தனிப்பட்ட அடையாள அட்டை ஆணைய (UIDAI) இணையத்தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்த ஆதாரை பொது விநியோகத் திட்ட (PDS) பயன்பாட்டில் பதிவேற்றம் செய்தால் அந்தக் கோப்பின் பெயர் ஆதார் அட்டையில் உள்ள முகவரியின் அஞ்சல் குறியீடாக இருக்க வேண்டும்.

விண்ணப்பத்தின் நிலையை எப்படிச் சரிபார்ப்பது

இந்த இணைப்பை கிளிக் செய்வதன் மூலம் குடும்ப அட்டை விண்ணப்பத்தின் நிலையை உங்களுக்குக் கிடைத்த குறிப்பு எண்ணை உள்ளிட்ட சரி பார்க்கலாம்.

இந்த குறியீட்டிற்கு எல்லாம் என்ன அர்த்தம் என்று தெரியுமா..?

உங்களது ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள இந்த குறியீட்டிற்கு எல்லாம் என்ன அர்த்தம் என்று தெரியுமா..?

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

How to Apply and Get New Ration Card through Online Application in Tamil nadu with help of tnpds

How to Apply and Get New Ration Card through Online Application in Tamil nadu with help of tnpds
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns