ஆண் குழந்தைகளுக்கான ‘பொன் மகன் பொது வைப்பு நிதி திட்டம்’ பற்றி தெரிந்துகொள்ள வேண்டியவை..!
பெண் குழந்தைகளுக்கு எப்படிச் சுகன்யா சம்ரிதி யோஜனா எனப்படும் செல்வ மகள் திட்டம் உள்ளதோ அதே போன்று ஆண் குழந்தைகளுக்கும் தபால் அலுவலகங்களில் 'பொன் மகன் பொது வைப்பு நிதி திட்டம்' உள்ளது.
இந்தத் திட்டத்தில் பணத்தைச் சேமித்து வரும் போது முதலீடுகள் 5 ஆண்டுகள் வரை செய்திருந்தால் முதிர்வு காலத்திற்கு முன்பே பணத்தை எடுக்க முடியும்.
பொன் மகன் பொது வைப்பு நிதி திட்டத்தை மக்கள் பொன் மகன் சேமிப்புத் திட்டம் என்றும் அழைக்கின்றனர். இத்திட்டம் 2015-ம் ஆண்டுச் செப்டம்பர் 4-ம் தேதி சென்னையில் துவங்கப்பட்ட ஒரு திட்டமாகும். பொன் மகன் பொது வைப்பு நிதி திட்டத்தில் கணக்குத் துவங்குபவர்கள் 15 ஆண்டுகள் முதலீடு செய்ய வேண்டும். பொன் மகன் பொது வைப்பு நிதி திட்டத்தில் முதலீடு செய்ய விரும்புபவர்களின் பிள்ளைக்கு 10 வயதுக்குக் குறைவாக இருக்கின்றது என்றால் பாதுகாவலர் உதவியோடும், இதுவே 10 வதை பூர்த்திச் செய்திருந்தால் ஆண் குழந்தை தானாகவே பொன் மகன் சேமிப்புத் திட்டத்தில் கணக்கை துவங்கலாம். அதே நேரம் குறைந்தபட்ச வயது வரம்பு என்றும் ஏதும் கிடையாது. பொன் மகன் பொது வைப்பு நிதி திட்டத்தில் முதலீடு செய்பவர்களுக்கு 8.5 சதவீதம் வட்டி விகிதம் அளிக்கப்படுகின்றது. கணக்கைத் துவங்க குறைந்த பட்சம் 100 ரூபாய் கணக்கில் வைப்பு வைக்க வேண்டும். பின்னர் ஆண்டுக்குக் குறைந்தது 500 ரூபாய் முதல் 1.50 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம். பொன் மகன் சேமிப்புக் கணக்கைத் துவங்கியதில் இருந்து 7வது ஆண்டில் 50 சதவீத தொகையைத் திரும்பப் பெற முடியும். அதுமட்டும் இல்லாமல் அந்தத் தொகையைத் திரும்பச் செலுத்த வேண்டிய அவசியமும் இல்லை. இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யும் தொகை மற்றும் பெறப்படும் வட்டி என இரண்டுக்கும் வரி விலக்கு பெற முடியும். மத்திய அரசால் பெண் குழந்தைகளுக்குக் கொண்டு வரப்பட்ட திட்டம் சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம். இத் திட்டம் தான் தமிழ் நாட்டில் செல்வ மகள் திட்டமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் அல்லது காப்பாளர் உதவியுடன் இந்தக் கணக்கை அனைத்து அஞ்சலகங்களிலும் தொடங்கலாம்.
பொன் மகன் பொது வைப்பு நிதி திட்டம்
முதிர்வு காலம்
வயது வரம்பு
வட்டி விகிதம்
முதலீடு வரம்பு
பணத்தைத் திரும்பப் பெறுவதில் உள்ள சலுகை
வரி விலக்கு
செல்வ மகள் சேமிப்புத் திட்டத்தைப் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை..!


Click it and Unblock the Notifications