சிக்கனமாக இருந்து பணத்தை சேமிக்க ஆறு குறிப்புகள்..!

சிக்கனமாக இருந்து பணத்தை சேமிக்க ஆறு குறிப்புகள்..!

பலர் நல்ல சம்பளம் வாங்கிய போதிலும் பணம் சேமிப்பதைக் கடினமாக உணர்கிறார்கள் . இங்கே அவர்கள் பணத்தைச் சேமிக்க உதவும் சில குறிப்புகள் உள்ளன.

அடிக்கடி இந்தக் கேள்வி கேட்டு பலரிடமிருந்து எனக்கு அழைப்புகள் வருகிறது - நான் எப்படிப் பணத்தைச் சேமிக்க வேண்டும்? அவர்களில் பலர் ஒரு லாபகரமான பணி வாழ்க்கையைத் துவங்கியபோதிலும் சிறிது காலத்திற்குப் பிறகு தங்கள் வருமானத்திலிருந்து போதுமான அளவு சேமிக்க முடிவதில்லை. பல்வேறு காரணங்கள் குறிப்பிடப்படலாம் - கடன் திடீரென்று அதிகரிப்பு, உயர் வாழ்க்கைத்தரம், சம்பளம் போதுமான அளவு அதிகரிக்கவில்லை. என்னவாக இருப்பினும் எதிர்காலத் தேவைகள் பூர்த்திச் செய்யப் போதுமான பணம் சேமிப்பது எப்போதும் முக்கியம்.

1. என்ன வருகிறது என்ன செலவாகிறது என அறியவும்

1. என்ன வருகிறது என்ன செலவாகிறது என அறியவும்

நீங்கள் என்ன சம்பாதிக்கிறீர்கள் என்று தெரிந்து கொள்ள வேண்டியது மிக அவசியம். சம்பளம் தொகுப்பு மற்றும் உங்கள் கையில் வரும் நிகர வருமானம் இரண்டுக்கும் இடையே வித்தியாசம் உள்ளது. நீங்கள் பெறும் வருவாய்க்கு வரி செலுத்த வேண்டும். வரி செலுத்திய பிறகு கிடைக்கும் பணத்தைக் கொண்டு உங்கள் செலவுகள் மற்றும் எதிர்காலத்தைத் திட்டமிட வேண்டும்.

சம்பளம் வாங்கும் ஊழியர்களுக்கு, வரி முதலாளிகளால் கட்டப்பட்டாலும் கூட வருமான வரி தாக்கலின் போது நீங்கள் வரி செலுத்த வேண்டும். ஒரு விரிவான ஆய்வு செய்ய உங்கள் கையில் எவ்வளவு பணம் கிடைக்கும் என்பதைக் கண்டுபிடியுங்கள். உங்கள் சரியான வருமானம் தெரியும் போதுதான் உங்கள் கையை விட்டு எவ்வளவு பணம் செல்கிறது எனப் புரிந்து கொள்ள முடியும். உங்கள் செலவு நடத்தை கவலைக் உறியதாக இருக்கும் பட்சத்தில் உங்கள் பில்களை ஆய்வு செய்யுங்கள்.

இது, நீங்கள் எங்கு அதிகம் செலவு செய்கிறீர்கள் எனத் தெரிந்து கொள்ள உதவும். இது உங்கள் பிரயாணமோ அல்லது மனத்தூண்டுதளினால் வாங்கும் பொருட்களோ அல்லது சம்பளம் அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பினால் வாங்கப்பட்ட கடனோ ஏதுவாகவும் இருக்கலாம். காரணம் ஏதுவாக இருந்தாலும் அதிகச் செலவை குறைக்கும் வழிகளைக் கண்டுபிடிக்க வேண்டும். பண வெளியேற்றம் அதிகக் கடனின் காரணமாக இருப்பின் வட்டியைக் குறைக்கும் வழி கண்டுபிடித்துப் பணத்தை மிச்சப்படுத்த வேண்டும்

 

2. உங்கள் வரவு செலவு திட்டத்தைக் கடைப்பிடியுங்கள்

2. உங்கள் வரவு செலவு திட்டத்தைக் கடைப்பிடியுங்கள்

உங்கள் பணம் எங்கே செல்கிறது மற்றும் எவ்வளவு பணம் உங்களிடம் இருக்கிறது எனத் தெரிந்த பிறகு பட்ஜெட் போடுவது அத்தியாவசியம் ஆகிறது. இது உங்கள் பணம் விஷயங்களைக் கண்காணிக்க உதவுகிறது. உங்கள் பணப்புழக்கங்களில் நடப்பது என்ன மற்றும் ஏன் என்று ஒரு தெளிவு கொடுக்கிறது.

நீங்கள் உங்கள் பணி வாழ்வின் ஆரம்பக் கட்டங்களில் இருக்கும் போது இந்தப் பயிற்சி சலிப்புத் தரலாம். இருந்தாலும் கூட, ஒரு பட்ஜெட் தயாரியுங்கள். அதன் மூலம் நீங்கள் விரும்பும் ஆனால் இன்று தேவையில்லாத பொருட்களை வாங்குவதிலிருந்து உங்களைக் கட்டுப்படுத்தும். பட்ஜட்டை கடைப்பிடிக்கும் பட்சத்தில் அடுத்தச் சில மாதங்களில் உங்கள் சேமிப்பு என்ன என்பதையும் அறிய உதவும்.

 

3. உங்கள் சேமிப்புக் கணக்குத் தனியாக இருக்கட்டும்

3. உங்கள் சேமிப்புக் கணக்குத் தனியாக இருக்கட்டும்

நீங்கள் பணம் சேர்க்கவில்லை எனில் சேமிப்பு இருக்காது. உங்கள் சேமிப்பை குறிப்பிட்ட வங்கியைக் கணக்கில் செலுத்துவதைக் கடைப்பிடிக்கவும். முதலில் சேமிக்கும் பழக்கத்தை ஒரு பயிற்சியாகச் செய்யவும். சேமிப்பு கணக்கு மற்றும் செலவு கணக்குத் தனியாக வைத்தால் குழப்பம் ஏற்படாது.

4.எவ்வாறு நீங்கள் அதிகமாகச் சம்பாதிக்க முடியும்?

4.எவ்வாறு நீங்கள் அதிகமாகச் சம்பாதிக்க முடியும்?

பல முறை, உங்கள் வேலை வளர்ச்சி அதிகரிக்கும் செலவினை மேற்கொள்ள போதுமானதாக இருப்பதில்லை. வேலை மாற்றுவது அல்லது பணியை மாற்றுவது எளிதன்று. உங்கள் வேலையுடன் இணைந்து செய்யும் வாய்ப்புகள் மூலம் சம்பாதித்து உங்கள் வருமானத்தை அதிகரிக்கலாம். உதாரணம் பகுதி நேர ஆசிரியர் வேலை, ஆலோசனை பணிகள் போன்றவற்றின் மூலம் கூடுதல் வருவாய் பெற முடியும்

5.மனத்தூண்டுதலின் பேரில் வாங்குவதைத் தடுத்திடுங்கள்

5.மனத்தூண்டுதலின் பேரில் வாங்குவதைத் தடுத்திடுங்கள்

இளைஞர்கள் தள்ளுபடிகளால் தூண்டப்படுகிறார்கள். நீங்கள் அவ்வாறு பொருள் வாங்குவது திட்டமிடப்படாத செலவாகும் இவ்வாறு தேவை இல்லாத பொருட்களை மேலும் மேலும் வாங்குவது கடனுக்கு வழி வகுக்கும். என்ன வாங்கவேண்டும் என்று திட்டமிட்டு அதற்குத் தேவையான நிதிக்கும் திட்டமிட வேண்டும். இது சேமிப்புக்கு வழி வகுத்து பிரகாசமான எதிர் காலத்தை உங்களுக்குக் கொடுக்கும்.

6. விருப்பங்களைப் பூர்த்திச் செய்யக் கடனில் வாங்குவதைத் தவிருங்கள்

6. விருப்பங்களைப் பூர்த்திச் செய்யக் கடனில் வாங்குவதைத் தவிருங்கள்

நீங்கள் உங்கள் தேவைகளை அல்லாமல் விருப்ங்களை'ப் பூர்த்திச் செய்ய வாங்கும் கடனாக இருந்தால் அதைத் தவிர்க்கவும். நீங்கள் வெளிநாட்டிற்கு ஒரு நீண்ட விடுமுறை செல்ல ஒரு தனிப்பட்ட கடன் வாங்கினீர்கள் என்றால் நீங்கள் கடன் திருப்பிச் செலுத்துவதோடில்லாமல் பெரிய வட்டியும் செலுத்த வேண்டும். அதற்குப் பதில் இந்தியாவில் ஒரு குறுகிய விடுமுறை எடுத்துக்கொண்டால் சேமிக்க முடியும்.

சேமிப்பைப் பழக்கம் செய்ய, கீழே உள்ளக் குறிப்புகளை நினைவில் கொள்வது அவசியம்:

1. எது வாங்கினாலும் திட்டமிடுங்கள்.
2. உங்களுக்கு என்ன தேவை மற்றும் என்ன விருப்பம் எனத் தெரிந்து கொள்ளுங்கள். விருப்பங்கள் செலவில் முடியும்
3. பொருள் வாங்கும் போது விலை பேசி வாங்கவும். மாலில் அதிக விலைக்குக் கிடைக்கும் அதே பொருள் சந்தையில் குறைந்த விலையில் கிடைக்கும். அங்கே சென்று வாங்குவதில் தவறேதும் இல்லை
4. சேமிப்புகளுக்கு இலக்கு வைத்துக் கண்டிப்பாகப் பின்பற்றுங்கள்.
5. குறைந்தபட்சம் 10% சேமிப்பு இருக்கவேண்டும். அதிகமாக இருந்தால் சிறப்பு

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+