சென்னை: இன்றைய இளைய தலைமுறை தான் நாளைய இந்தியாவின் எதிர்காலம், என்பதை நினைவாக்கும் வகையில் இன்று இந்தியாவில் பெரும்பாலான இளைஞர்களுக்குக் கல்வி கடன் கிடைக்கிறது. இதன் மூலம் பல குடும்பங்கள் இன்று பொருளாதாரத்தில் முன்னேறியுள்ளது என்றால் மிகையாகாது.
இந்நிலையில் இந்தியாவில் படித்தாலும் சரி, வெளிநாடுகளில் படித்தாலும் சரி கல்வி கடன் குறித்து அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய அடிப்படை விஷயங்களைத் தான் நாம் இப்போது பார்க்கப்போகிறோம்.
கல்வித் தகுதி..!
இந்தியா அல்லது அயல்நாட்டில் தொழில்முறை அல்லது தொழில்நுட்ப மேல்படிப்பு படிக்கும் மாணவர்களுக்குத் தகுதி அடிப்படையில் கல்விக்கடன் வழங்கப்படுகிறது.
காரணம் படிப்பு ஏற்றார் போல் கடன் அளவு மாறுபடும்.
ரூ.25 லட்சம்
இந்திய வங்கிகளின் சம்மேளனத்தின் ( Indian Banks' Association )விதிமுறைகளின்படி வங்கிகள் இந்திய கல்லூரிகளில் படிப்பதற்கு ரூபாய் பத்து லட்சமும் அயல்நாட்டுக் கல்லூரிகளில் படிப்பதற்கு ரூபாய் இருபது லட்சமும் வழங்குகிறது.
இணை விண்ணப்பதாரர்
கல்விக்கடன் பெறுவதற்கு இணை விண்ணப்பதாரர் அவசியம் தேவை. பெற்றோர்கள், வாழ்க்கை துணைவர் அல்லது உடன்பிறந்தவர்கள் யாரேனும் இருக்கலாம்.
ஜாமீன் தேவையில்லை
ரூ.4 இலட்சத்திற்குக் குறைவான கல்விக் கடனுக்குப் பாதுகாப்பு ஜாமீன் எதுவும் தேவையில்லை. ரூபாய் நான்கு இலட்சத்திற்கு மேல் கல்விக் கடன் தேவைப்படுமானால் கடன் கொடுக்கும் வங்கி ஏற்கத்தக்க வகையில் வருமானம் உள்ள நபரின் தனிப்பட்ட உத்தரவாதம் தேவைப்படும். ரூபாய் ஏழரை இலட்சத்திற்கு மேல் கல்விக் கடன் தேவையெனில், குடியிருக்கும் வீடு, தங்கநகை போன்ற இணையப் பாதுகாப்பு ஜாமின் தேவைப்படும்.
ஒரு வருட அவகாசம்
கல்விக்கடனைப் படிப்பு முடிந்து ஆறு மாதம் அல்லது ஒரு வருடத்திலிருந்து திருப்பிச் செலுத்தவேண்டும், இந்தக் காலக் கட்டத்தில் எளிய வட்டி வசூலிக்கப்படும்.
More From GoodReturns

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!



Click it and Unblock the Notifications