ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் சேரும் முன் நீங்கள் கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்..!
2016 ஆம் ஆண்டு 200 க்கும் மேற்பட்ட புதிய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மூடப்பட்டன. புதிய நிறுவனங்களில் (Startup) வேலைக்குச் சேர்வதென்பது உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒரு துணிச்சலான முடிவாகும்.
இத்தகைய நிறுவனத்தில் ஒரு வாய்ப்பை ஏற்றுக் கொள்வதற்கு முன்பு அதைப் பற்றித் தீர விசாரித்துத் தெரிந்து கொண்டீர்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். மேலும் வேலையில் சேர்வதற்கு முன்பாகச் சில முக்கிய விஷயங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்.
1. முதலாளியின் எதிர்பார்ப்புகள்
ஒரு நிறுவனத்தில் இணையும் முன் அதில் நீங்கள் பொறுப்பு வகிக்கும் முக்கியப் பகுதிகள் மற்றும் நிறுவனத்தில் உங்கள் வேலை ஆகியவற்றைப் பற்றித் தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள்.
உங்கள் வேலையின் விவரத்தைப் புரிந்து கொள்ளுங்கள், புதிய தொழில் நிறுவனங்களில் குறிப்பாக நிறுவனம் தொடங்கப்பட்ட தொடக்கக் காலங்களில் வேலையாட்களுக்குப் பற்றாக்குறை இருப்பதால், உங்கள் வேலையின் கடமைகளைப் புரிந்து கொள்ளுங்கள்.
ஒவ்வொரு வளத்தையும் திறம்பட உபயோகித்தல் பெரும்பாலும் பொறுப்புகள் பெருகுவதற்கு வழிவகுக்கிறது. உங்களுக்குக் கொடுக்கப்பட்ட முக்கியப் பணிகளையும் தாண்டிக் கூடுதல் பொறுப்புகளை எடுத்துக் கொள்ள விரும்பினால் அந்த வேலையை எடுத்துக் கொள்வதற்கு முன்பாக நிறுவன அதிபர்களிடம் கலந்து பேசுங்கள் மற்றும் முதலாளிகளின் எதிர்பார்ப்புகளைப் பற்றித் தெளிவு செய்து கொள்ளுங்கள்.
2. சலுகைகள்
உங்கள் சம்பளத்தின் வடிவமைப்பை கவனமாகத் தெரிந்து கொள்ளுங்கள். புதிய தொழில் நிறுவனங்கள் இளைஞர்களின் திறமைகளைக் கவர்வதற்காகப் பல்வேறு சலுகைகள் மற்றும் இழப்பீடுகளை வழங்குகிறது.
உங்களுக்குக் கொடுக்கப்படும் சலுகைகளில் திருப்தி இல்லையென்றால் நீங்கள் நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுங்கள். பணியாளர் பங்கு தேர்வுகள் (ESOP) போன்ற சலுகைகள் பெரும்பாலும் திறமைகளைக் கவர்வதற்காகப் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு நிறுவனம் தொழிலில் நற்பெயரை நிறுவிய பிறகு, முதலீட்டாளர்களிடமிருந்து பெற்றுப் பணியாளர்களுக்கான பங்குகளைச் செலுத்துகிறது. இருந்தாலும் அந்தத் தொழில் நிறுவனம் வெற்றி பெறவில்லையென்றால் அதில் வேலை செய்யும் பணியாளர்களும் இழப்பை சந்திக்கும் அபாயம் எப்பொழுதும் இருக்கிறது.
இங்கு நிறையப் புதிய தொழில் நிறுவனங்கள் இருந்தாலும், நடைமுறையில் பணியாளர்களுக்கு அளிக்கப்படும் பங்குகளின் வழியாகப் பணியாளர்கள் கோடீஸ்வரர்களாக மாறிய கதைகள் மிகவும் அரிது.
3. நிறுவன அதிபர்களின் பின்புலம்
நிறுவன அதிபர்களின் பின்புலத்தைப் பற்றித் தெரிந்து கொள்வது அவர்களது தொலைநோக்கு பார்வையைப் பற்றிப் புரிந்து கொள்ள உங்களுக்கு உதவாது, ஆனால் அவர்கள் அந்நிறுவனத்தில் எவ்வளவு அர்ப்பணிப்பாக இருக்கிறார்கள் என்பது பற்றிக் கற்றுக் கொள்ள உதவும்.
அவர்களுடைய கல்வியின் பின்புலம், தொழில் தொடர்புகள், திறமைகள் மற்றும் அனுபவங்கள், கடந்த கால வெற்றி, தோல்விகள் ஆகியவற்றைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள். நிறுவன அதிபர்களுடன் அல்லது அந்த நிறுவனத்தில் ஏற்கனவே வேலை செய்து கொண்டிருப்பவர்களுடன் நேரடி உரையாடலின் மூலம் இந்த விஷயங்களைக் கண்டறியலாம். நிறுவனத்தைப் பற்றி இணையத்தில் ஆராய்தல் கூட இதில் உதவும்.
4. நிதியளிப்பு
நிறுவனத்தைத் தொடங்கியதற்குப் பின்னால் முதலீட்டாளர்களால் செய்யப்பட்ட நிதியளிப்பைப் பற்றி ஆராய்தலையும் புறக்கணிக்க முடியாது. வலிமையான, நம்பிக்கைக்குரிய முதலீட்டாளர்களின் பின்புலத்தைக் கொண்ட ஒரு புதிய நிறுவனம் மேற்கூறிய சிறப்பம்சங்கள் இல்லாத ஒரு சாதாரண நிறுவனத்தை விட அதிக அளவில் வெற்றிப் பெறுகிறது.
5. பணியாளர்கள் வெளியேற்ற விகிதம்
பொதுவாக மக்கள் ஒரு புதிய நிறுவனங்களில், நிறுவனத்தோடு தானும் சேர்ந்து வளர வேண்டும் என்ற நோக்கத்துடன் வேலையில் சேர்கிறார்கள். எனவே ஒரு நிறுவனத்தில் அதிகளவு பணியாளர்கள் வெளியேற்றம் கண்டிப்பாக நல்ல அறிகுறி அல்ல.
உயர்மட்ட நிர்வாகத்தில் வெளியேற்றம் - நிறுவன அதிபர்கள் கூட நிறுவனத்தை விட்டு வெளியேறிய பல்வேறு சந்தர்ப்பங்கள் உள்ளன. இது வருங்காலத்தில் நிறுவனத்தில் வளரும் வாய்ப்புள்ள பணியாளர்களுக்கு ஒரு கெட்ட செய்தியாகும். ஒரு புதிய நிறுவனத்தில் வேலைக்குச் சேர்வதற்கு முன்பாக இந்தத் தகவல்களை எல்லாம் தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியமாகும். இந்த வெளியேற்றங்கள் பெரும்பாலும் உயர் மட்ட நிர்வாக மேலாண்மையில் ஏற்படும் சச்சரவுகளின் விளைவாகும். இதனால் புதிய தொழில் நிறுவனத்தின் மற்றும் அதில் பணியாற்றும் பணியாளர்களின் எதிர்காலம் வெகுவாகப் பாதிப்புக்குள்ளாகிறது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications