மணிபேக் பாலிசி என்றால் என்ன..? இதில் உள்ள நன்மைகள் என்னென்ன..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆயுள் காப்பீட்டுத் திட்டங்களில் புதிதாகச் சேரும் பலரும் விரும்பிச் சேரக்கூடிய திட்டம் குறிப்பிட்ட கால் இடைவெளியில் பயன் தரும் மணிபேக் பாலிசி தான். இந்தப் பாலிசிகள் முதலீடு மற்றும் காப்பீட்டு வசதி என்ற இரண்டு நன்மைகளைத் தரக்கூடியவை.

இந்த மணிபேக் பாலிசிகள் காப்பீடு செய்யும் நபருக்கு பாலிசி முடியும்வரை அல்லது அந்த நபர் உயிருடனிருக்கும் வரை குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு தொகையினை வழங்கிடுவதாகும். இவ்வாறு வழங்குவது 'வாழ்வதற்கான ஆதாயம்' என்றும் அழைக்கப்படுகிறது.

பிரிமியம் சற்று கூடுதல் ஆனால் நன்மை அதிகம்

பிரிமியம் சற்று கூடுதல் ஆனால் நன்மை அதிகம்

சாதாரண எண்டோவ்மென்ட் பாலிசிகளை விட மணிபேக் பாலிசிகளுக்குச் செலுத்த வேண்டிய பிரிமியம் சற்றுக் கூடுதலாக இருந்தாலும் குறிப்பிட்ட இடைவெளியில் ஒரு தொகை வழங்கப்படுவது நன்மை பயப்பதாகவே உள்ளது.

பாலிசி தாரர் இறந்தால் பே அவுட்

பாலிசி தாரர் இறந்தால் பே அவுட்

எதிர்பாராதவிதமாகப் பாலிசிதாரர் பாலிசி முதிர்வுறும்முன் இறக்க நேரிடும்போது பே அவுட் எனப்படும் குறிப்பிட்ட இடைவெளியில் நிதிபயன் வழங்குதல் நிறுத்தப்பட்டுப் பாலிசி முதிர்வுத்தொகை பாலிசிதாரர் வழங்கியுள்ள நியமன படிவங்களின் அடிப்படையில் அவரது வாரிசுதாரருக்கு வழங்கப்படும். இந்தக் குறிப்பிட்ட இடைவெளி நிதிப்பயன் பாலிசி துவங்கிய 5 வது ஆண்டிலிருந்து குறிப்பிட்ட இடைவெளியில் பாலிசி முதிர்வுகால முடிவு வரையில் அல்லது பாலிசிதாரரின் இறப்பு வரையில் தொடர்ந்து வழங்கப்படும்.

எதனால் மணிபேக் பாலிசி அனைவராலும் விரும்பப் பெறுகின்றது?
 

எதனால் மணிபேக் பாலிசி அனைவராலும் விரும்பப் பெறுகின்றது?

தொடர்ச்சியான வருவாயினை மணிபேக் திட்டம் பாலிசி முதிர்வு வரை தரும் என்பதாலேயே அனைவராலும் விரும்பப்படும் ஒரு திட்டமாக இது உள்ளது.

மணிபேக் பாலிசியை எங்கு வாங்குவது?

மணிபேக் பாலிசியை எங்கு வாங்குவது?

எல்ஐசி, எஸ்பிஐ லைப், எச்டிஎப்சி லைப், பிர்லா சன் லைப் முதலிய நிறுவனங்கள் பல்வேறு மணி பேக் திட்டங்களை அறிமுகப்படுத்தி நடைமுறைப்படுத்தி வருகின்றன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

What is mean by money back policies? what are the benisits in it?

What is mean by money back policies? what are the benisits in it?
Story first published: Saturday, May 13, 2017, 13:40 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X