வீட்டுக்கடன் காப்பிட்டுத் திட்டம் உண்மையிலேயே அவசியமா..? இல்லை மக்களை ஏமாற்றும் திட்டமா..?!

உங்களுக்கு வீட்டுக்கடன் அளித்த வங்கி, கடன் மீதான ஒரு காப்பீட்டுத் திட்டத்தைப் பற்றியும் அதனால் விளையும் பலன்களைப் பற்றியும் விளக்கியிருக்கலாம்.

இன்றைய இக்கட்டான சூழ்நிலைகளில் இந்தக் காப்பீட்டை எடுப்பது ஒரு சரியான முடிவாக இருக்கும் என நீங்கள் நினைக்கலாம். ஆனால் நீங்கள் இதில் முடிவெடுக்கும் முன் குட்ரிடர்ன்ஸ் தமிழ் சில குறிப்புகளைத் தர விரும்புகிறோம். இதனைப் படித்துவிட்டு முடிவு செய்யுங்கள் காப்பீடு வேண்டுமா வேண்டாமா என்று..

என்ன வித்தியாசம்..?

என்ன வித்தியாசம்..?

சொத்துக் காப்பீட்டையும், வீட்டுக் கடன் காப்பீட்டையும் (ஹோம் லோன் இன்சூரன்ஸ்) போட்டு நீங்கள் குழப்பிக் கொள்ள வேண்டாம்.

சொத்துக் காப்பீடு உங்கள் சொத்திற்கு ஏற்படும் சேதத்திலிருந்து பாதுகாப்பு அளிக்கும், அதே நேரம் வீட்டுக்கடன் காப்பீடு உங்களின் எதிர்பாராத இறப்பின்போது நீங்கள் செலுத்தவேண்டிய கடனுக்குக் காப்பீடாய் அமையும்.

 

கவனிக்க வேண்டியவை..

கவனிக்க வேண்டியவை..

இங்கே நீங்கள் நினைவில் கொள்ளவேண்டியது இந்த வீட்டுக் கடன் காப்பீடு உங்களுடைய இயற்கையான மரணம் அல்லது தற்கொலை ஆகிய காரணங்களுக்கு உங்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதில்லை.

ஒருவேளை உங்கள் வேலையிழப்பு, தீவிர நோய்வாய்ப்படுதல் அல்லது ஊனமுறுதல் போன்றவற்றால் ஏற்படும் நட்டங்களில் இருந்து பாதுகாப்பு வேண்டியிருந்தால் அதற்கெனத் தனியாக அதிகப் பிரிமியம் செலுத்தவேண்டியிருக்கும்.

 

தேவை இருந்தால் மட்டுமே..

தேவை இருந்தால் மட்டுமே..

வீட்டுக் கடன் காப்பீட்டுத் திட்டங்கள் ஒரே ஒரு முறை மட்டுமே பிரிமியம் செலுத்தவேண்டியவை என்பதோடு மட்டுமல்லாமல் அதைத் தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயம் உங்களுக்கு இல்லை.

எனவே நிச்சயமாக வாங்கவேண்டிய தேவை இருந்தால் அன்றி வீட்டுக்கடன் காப்பீட்டை நீங்கள் வாங்கவேண்டாம்.

 

முடிவு உங்களுடையது..

முடிவு உங்களுடையது..

உங்கள் வங்கி அல்லது காப்பீட்டு நிறுவனம் இதன் பலன்களைக் கூறி உங்களை வாங்க நிர்பந்தித்தாலும் அதை முடிவு செய்யவேண்டியது நீங்கள் மட்டுமே.

எனவே இந்த வீட்டுக் கடன் காப்பீட்டுத் திட்டங்கள் மூன்றாம் நபர் தரும் திட்டங்கள் என்பதுடன் இந்த நிறுவனங்கள் இதன் மூலம் இலாபமடைகின்றன என்பதை நினைவில் கொள்ளவும்.

 

வரி விலக்கு..

வரி விலக்கு..

இதன் மூலம் உங்களுக்கு வருமானவரிச் சட்டம் பிரிவு 80சி யின் கீழ் நீங்கள் செலுத்தும் வீட்டுக் கடன் காப்பீட்டுப் பிரிமியத்திற்கு வரி விலக்கு உண்டு. எனினும் இந்தப் பணத்தை நீங்கள் வங்கியிலிருந்து பெற்ற கடனுக்குச் செலுத்தும் மாதாந்திர பணத்துடன் செலுத்தினால் இது பொருந்தாது.

செக் பாயின்ட்

செக் பாயின்ட்

ஒருவேளை நீங்கள் முன்கூட்டியே உங்கள் வீட்டுக்கடனை செலுத்தினால், கடனில் மாற்றம் செய்தால் அல்லது உங்கள் கடனை மாற்றினால் இந்தக் காப்பீட்டுத் திட்டம் செல்லாது.

ஒரு முறை பிரிமியம் ஏற்கனவே செலுத்தப்பட்டு விடுவதால் கடனை திரும்பச் செலுத்தும் முறை செல்லாது. நீங்கள் மேலும் தெரிந்துகொள்ள வேண்டியது உங்கள் கடனை தற்போதுள்ள வங்கியில் இருந்து வேறொரு வங்கிக்கு மாற்றினால் இந்தக் காப்பீடு செல்லுபடியாகாது.

நீங்கள் கடன் திருப்பிச் செலுத்தும் காலக் கெடுவை நீட்டித்தாலும் இந்தக் காப்பீடு உங்கள் புதிய கால அவகாசத்திற்கு உங்களுக்குப் பாதுகாப்பு அளிக்காது.

 

கடனுக்கேற்ப குறையும்

கடனுக்கேற்ப குறையும்

உங்கள் வீட்டுக் கடன் காப்பீட்டுத் திட்டம் உங்களுடைய கடன் திருப்பிச் செலுத்தும் தவணையோடு தொடர்புடையதாக இருப்பதால் இதன் மதிப்பும் திரும்பச் செலுத்தப்படும் கடனுக்கேற்ப குறையும்.

உதாரணம்

உதாரணம்

ஒரு கடன் பெறுபவர் 30 இலட்சம் பெற்று அதற்கு வீட்டுக்கடன் காப்பீட்டை எடுக்கிறார் என வைத்துக் கொள்வோம். ஒருவேளை அவர் 25 இலட்சம் திரும்பச் செலுத்தியுள்ள நிலையில் இறந்துவிட்டால், காப்பீட்டு நிறுவனம் மீதமுள்ள ஐந்து இலட்ச்சத்திற்கு மட்டுமே பொறுப்பேற்கும்.

இதுவே டெர்ம் இன்சூரன்ஸ் எனப்படும் காலக் கெடுவுடன் கூடிய திட்டமானால் உங்களுக்கு முழுப் பாதுகாப்புக் கிடைக்கும். அதாவது மேற்கூறிய உதாரணத்தில் முப்பது இலட்சம் ரூபாயும் அவருக்குக் கிடைக்கும்.

 

முடிவு உங்கள் கையில்..

முடிவு உங்கள் கையில்..

என்ன இப்ப உங்களுக்கு இந்தத் திட்டத்தைப் பற்றிய ஒரு விழிப்புணர்வு கிடைச்சிருக்குதானே?

வீட்டுக் கடன் காப்பீட்டு மட்டுமல்ல எந்த ஒரு காப்பீடு எடுத்தாலும், அதில் உள்ள சாதகபாதகங்களை ஆராய்ந்து அதன் பின்னர் உங்கள் தேவையைப் புரிந்துகொண்டு காப்பீட்டைப் பெறுங்கள். இல்லையெனில் பணம் செலுத்தினாலும் உங்களுக்குப் பயனளிக்காமல் போக அதிகளவில் வாய்ப்புகள் உள்ளது.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+