இ-காமர்ஸ் என்றாலே நமக்கும் முதலில் நினைவுக்கு வருவது பிளிப்கார்ட், அமேசான் போன்ற இணையதளங்கள் ஆகும். இதற்கு முக்கியக் காரணம் பொரும்பாளான இந்தியர்கள் இங்கு இருந்து பொருட்களை வாங்குவது ஆகும்.
அதே நேரம் சமுக வலைத் தளங்களையும் இ-காமர்ஸ் தளங்கள் போலப் பொருட்களை விற்றுச் சம்பாதிக்கலாம். இதற்குப் பெரிய முதலீடுகள் எதுவும் தேவை இல்லை. இப்படி 54,000 கோடி ரூபாய் வரை வீட்டில் இருந்தபடியே வர்த்தகம் நடந்துள்ளதாக ஆங்கில நாளிதழ் ஒன்று தெரிவித்துள்ளது.
சிறிய, நிலையான மற்றும் இலாபகரமான வணிகம்
சிறிதாக நீங்கள் ஏதேனும் பொருட்களைத் தயார் செய்து விற்க முடியும் என்று நம்பிக்கை இருந்தால் போது. பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமுக வலைத்தளங்கள் பயன்படுத்தி விற்கலாம்.
ஒரு வேலைப் பொருட்கள் பற்றி வாடிக்கையளர்களுக்குச் சந்தேகம் இருந்தால் வாட்ஸ் ஆப் தகவல்கள், பிற தகவல் பரிமாற்றம் செய்யும் செயலிகளைப் பயன்படுத்தி விற்பனையாளரை தொர்பு கொள்ளலாம். பணப் பரிமாற்றத்தை டிஜிட்டல் பிளாட்பார்ம் மூலமாக இணையதளத்தைப் பயன்படுத்தி எளிதாகச் செலுத்தலாம்.
விற்பனை ஆச்சர்யத்தை அளிக்கின்றது
சிறிய வியாபாரம் என்று தங்கள் எண்ணத்தை மூட்டைக் கட்டி வைக்காமல் முயற்சி செய்தால் லட்சம் கணக்கில் பணம் சம்பாதிக்கலாம் என்பது தான் சென்ற ஆண்டுச் சமுக வலைத்தளங்கள் மூலமாக 55,000 கோடி ரூபாய் வரை வருவாய் ஈட்டியுள்ளனர் என்று டைம்ஸ் ஆப் இந்தியா அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்த முறையிலான வர்த்தகம் 5 முதல் 6 மடங்கு வரை 2022-ம் ஆண்டிற்குள் வளர்ச்சி பெறும் என்றும் அந்த அறிக்கை கூறுகின்றது.
சுதந்திரமாகப் பணம் சம்பாதிக்க எளிய வழி
முதல் கட்ட நகரங்களில் சமுக வலைத் தளங்கள் மூலமான வர்த்தகம் 50 முதல் 60 சதவீதம் வரை வளர்ச்சி அடைந்து இருக்கும் நேரத்தில் இரண்டாம், மூன்றாம் கட்ட நகரங்கள் மட்டுமில்லாமல் கிராமங்களிலும் ஸ்மார்ட்போன் வளர்ச்சி தனது ஆதிக்கத்தைச் செலுத்தி வருகின்றது.
எனவே கிராமங்கள் தாங்கள் விவசாயம் மூலம் விற்பனை செய்யும் பொருட்கள் முதல் நகரங்களில் வீட்டில் இருந்த படியே தயாரிக்கும் கைவினை பொருட்கள் என அனைத்தையும் எளிதாகச் சமுக வலைத்தளங்கள் மூலமாக விற்பனை செய்யலாம்.
சிறு முதலீடு, அதிக லாபம்
பிளிகார்ட், அமேசான் உள்ளிட்ட இ-காமர்ஸ் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களைக் கவருவதற்காகப் பல கவர்ச்சி திட்டங்களை அறிவித்துச் செலவு செய்கின்றன.
ஆனால் இந்த வணிகத்தில் புகழ் மற்றும் பரஸ்பர நம்பிக்கையின் மூலமாக 15 முதல் 20 சதவீதம் வரை கமிஷன் உடன் விற்பனையாளர்கள் நிறைவான விலையில் பொருட்களை விற்பனை செய்கின்றனர்.
பழைய பொருட்களை விற்பனை செய்யலாம்
இ-காமர்ஸ் நிறுவனங்கள் பல பொருட்களை விற்பனை செய்வதினால் பெரிய தலைவலியாக்க இருக்கும். பல நேரங்களில் பொருட்கள் மாறியும் டெலிவரி செய்யப்படும்.
ஆனால் இதில் அவ்வாறு சிக்கல்களும் இல்லை. பழைய பொருட்களையும் புதுப்பித்து எளிதாக விற்பனை செய்ய முடியும்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications