வீட்டு வாடகை மூலம் கிடைக்கும் வருமானத்திற்கு எப்படி வரி விதிக்கப்படுகிறது..?

மும்பை: இந்திய வருமான வரிச் சட்டத்தின்படி அனைத்து வருமானங்களும் வரி விதிப்புக்குட்பட்டவைதான். அதில் சில காரணிகளின் அடிப்படையில் சிற்சில சலுகைகளும் கிடைக்கும்.

உங்கள் சொத்தினை வாடகைக்கு விட்டு அதிலிருந்து ஈட்டும் வருமானமும் வரி விதிக்குட்பட்டதுதான். இந்த வரி எப்படி எவ்வாறு விதிக்கப்படுகிறது என்பதைத் தான் இப்போது பார்க்கப்போகிறோம்.

வீட்டுச் சொத்திலிருந்து வருமானத்தை எவ்வாறு நிர்ணயிப்பது?வீட்டுச் சொத்திலிருந்து வருமானத்தை எவ்வாறு நிர்ணயிப்பது?

வீட்டுச் சொத்திலிருந்து வருமானத்தை எவ்வாறு நிர்ணயிப்பது?வீட்டுச் சொத்திலிருந்து வருமானத்தை எவ்வாறு நிர்ணயிப்பது?

உங்கள் சொத்து வருடாந்திர அடிப்படையில் உங்களுக்குக் குறிப்பிட்ட அளவிற்கு வருமானத்தை ஈட்டித் தரக்கூடியது. இதுதான் உங்கள் சொத்தின் வருடாந்திர மதிப்பு ஆகும்.

இந்த மதிப்புதான் நீங்கள் எந்த விதமான வரி செலுத்த வேண்டும் என்பதை நிர்ணயிக்கிறது. ஆனால், உங்கள் சொத்தின் வருடாந்திர மதிப்பினை எப்படித் தெரிந்து கொள்வது? தங்கள் சொத்தினை வாடகைக்கு விடுவோருக்கு இது நிர்ணயிக்கக் கூடிய சக்தியாகத் திகழ்கிறது.

 

இரண்டு வழிகள்

இரண்டு வழிகள்

நகராட்சியினரின் மதிப்பீட்டறிக்கையின் அடிப்படையில், அதன் பல கூறுகளைப் பொறுத்தே நகராட்சி நிர்வாகம் ஒவ்வொரு சொத்திற்கும் ஒரு மதிப்பினை நிர்ணயிக்கிறது. இதுவே நகராட்சி மதிப்பாகும்.

நகராட்சியின் வரி நிர்ணயித்தல் தான் முதலில் செய்யப்படும். அலுவலக ரீதியாக இதுவே அந்தச் சொத்தின் மதிப்பினை நிர்ணயிக்க உதவுகிறது. ஒரு சொத்தின் மொத்த மதிப்பினை நிர்ணயிக்க உதவும் இன்னொரு வழி, அதன் சந்தை மதிப்பினை வரையறுப்பதுதான்.

 

சொத்துக்களை வாடகைக்கு விடும்போது எவ்விதமான வருமானம் வரக்கூடும்?

சொத்துக்களை வாடகைக்கு விடும்போது எவ்விதமான வருமானம் வரக்கூடும்?

பல நேரங்களில் சொத்தின் சந்தை மதிப்பு, நகராட்சியின் மதிப்பினை விடச் சற்று அதிகமாகத் தோன்றுகிறது. அந்த மாதிரி நேரங்களில் சொத்தின் மதிப்பினை நிர்ணயிக்க வேறு வழிகள் உள்ளன.

நகராட்சியால் நிர்ணயிக்கப்பட்ட வருடாந்திர சொத்து மதிப்பைக்காட்டிலும், நீங்கள் வருமானமாக ஈட்டும் வாடகைத் தொகை கூடுதலாக இருந்தால், நீங்கள் பெறும் வாடகையின் அடிப்படையில் வரியைச் செலுத்த வேண்டி இருக்கும்.

அது அதிகமாகக் கூட இருக்கலாம். நீங்கள் வாடகையாகக் குறைவான ஒரு தொகையே ஈட்டி வந்தால், உங்கள் சொத்தின் மதிப்பின்படி கணக்கிடக்கூடிய நீங்கள் வாடகையாகப் பெறக்கூடிய உத்தேச மதிப்பினை கட்டாயம் செலுத்த வேண்டும்.

 

வாடகை கட்டுப்பாடு சட்டம்

வாடகை கட்டுப்பாடு சட்டம்

வாடகை கட்டுப்பாடு சட்டம் நடைமுறையில் இருக்கும் பகுதிகளில் நிலையான வாடகைக் கொள்கை அந்தச் சொத்தின் மீதான வருடாந்திர மதிப்பினை நிர்ணயிப்பதோடு, வரியையும் அதற்கேற்றாற்போல் பிடித்துவிடும்.

உங்கள் வீட்டுச் சொத்தின் மீதான வருமானம் வருடாந்திர மொத்த மதிப்பின் அடிப்படையில் அல்லது வருடாந்திர நிகர மதிப்பின் அடிப்படையில் வரி விதிப்பிற்குட்படும். நகராட்சி நிர்வாகத்திற்கு நீங்கள் செலுத்திய வரிகளின் அடிப்படையில் வருடாந்திர நிகர மதிப்புக் கணக்கிடப்படும்.

 

பிரிவு 24

பிரிவு 24

இந்திய வருமானவரிச் சட்டம் பிரிவு 24 ல் குறிப்பிட்ட வழிக்கட்டுதல்களின் படி 30% வருடாந்திர நிகர மதிப்பு வீட்டின் பழுது பார்த்தல், தண்ணீர் வரி, மின்சார வரி, நில வரி, சொத்து வரி இவை செலுத்தப்படுவதன் அடிப்படையில் சில சலுகைகளுடன் நிர்ணயிக்கப்படுகிறது.

உங்கள் வீட்டின் மீது பெறப்பட்ட வீட்டுக் கடன் பற்றி?உங்கள் வீட்டின் மீது பெறப்பட்ட வீட்டுக் கடன் பற்றி?

உங்கள் வீட்டின் மீது பெறப்பட்ட வீட்டுக் கடன் பற்றி?உங்கள் வீட்டின் மீது பெறப்பட்ட வீட்டுக் கடன் பற்றி?

ஒரு நிலக்கிழார் வாடகை பெறக்கூடிய வீட்டின் மீது பெறப்பட்ட கடன் தொகைக்கு அந்தக் கடன் திரும்பச் செலுத்தும்போது செலுத்தப்பட்ட வட்டித்தொகையில் உள்ள தள்ளுபடியினால் கூடுதல் சலுகையை அனுபவிப்பதுடன், வீட்டின் சொந்த காரருக்கு வாடகை மூலம் வருமானம் இல்லாத நிலையை ஏற்படுத்துகிறது.

ரூ. 2 லட்சம் வரை

ரூ. 2 லட்சம் வரை

இருப்பினும், 2017-18 ம் ஆண்டின் நிதி நிலை அறிக்கை வீட்டுச் சொத்தில் ஏற்படும் இழப்புத் தொகையினை ரூ. 2 லட்சம் வரை என ஒரு இலக்கு நிர்ணயித்திருக்கிறது. இந்த அளவீடு நிலக்கிழார் அனுபவித்த அதிகப்படியான வருமான வரி சலுகையைக் குறைக்கும் விதமாக அமைகிறது.

இந்த அளவீடு வீட்டுச் சொந்தக்காரரே வீட்டை ஆக்கிரமிப்பதிலும், வாடகைக்கு விடுவதிலும் உள்ள வரிச் சலுகைகளைச் சமன்படுத்த உதவுகிறது.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+