என்பிஎஸ் அல்லது தேசிய ஓய்வூதிய திட்டத்தில் முதலீடு செய்து இருந்தால் ஆதார் எண்ணை ஓய்வூதிய கணக்குடன் இணைக்க வேண்டும்.
ஆதார் ஒரு 12 இலக்க எண்ணாகும், இதனை இந்தியாவின் தனிப்பட்ட அடையாள ஆணையம் தனிநபர் விவரங்கள், பையோமெட்ரிக் விவரங்களைப் பெற்றுக்கொண்டு வழங்குகின்றது.
தேசிய ஓய்வூதிய கணக்கு வைத்துள்ளவர்கள் ஆதார் எண்ணுடன் இணையதளம் மூலமாக இணைக்கலாம். ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PFRDA), தேசிய ஓய்வூதிய திட்டத்தினை நிர்வகிக்கும் அமைப்புடன் இணைந்து செயல்முறைகள் எளிமைப்படுத்த பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
எடுத்துக்காட்டாக, ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் ஆதார் சரிபார்ப்பு மற்றும் மின்னணு சரிபார்ப்பு மூலம் தேசிய ஓய்வூதிய கணக்கை திறப்பதற்கு ஒரு விண்ணப்பப் படிவத்தை அறிமுகம் செய்துள்ளது.
எனவே, நாம் ஆதார் எண்ணுடன் தேசிய ஓய்வூதிய வங்கி கணக்கை எப்படி இணைப்பது என்று பார்ப்போம்.
இணையதளம்
www.cra-nsdl.com என்ற இணையதளம் மூலமாக உங்களது தேசிய ஓய்வூதிய கணக்கில் உள்நுழைய வேண்டும்.
ஆதார் எண்ணைப் பதிவு செய்தல்
விவரங்களைப் புதுப்பிக்கவும் என்பதைக் கிளிக் செய்து ஆதார் எண்ணைச் சேர் அல்லது புதுப்பிக்கவும் என்ற தெரிவை தேர்வு செய்து ஆதார் எண்ணை உள்ளிடவும்.
கடவுச் சொல்
ஆதார் எண்ணை உள்ளிட்ட பிறகு ஒரு முறை கடவுச் சொல் அனுப்பு என்ற பொத்தானை கிளிக் செய்வதன் மூலமாக ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணிற்குக் கடவுச் சொல் அனுப்பப்படும். அதனை உள்ளிட்ட பிறகு நிரந்தர ஓய்வூதிய கணக்கு எண்ணுடன் ஆதார் இணைப்பு முழுமை அடையும்.
கட்டாயம் இணைக்க வேண்டும்
தேசிய ஓய்வூதிய திட்ட அமைப்பு ஆதார் எண்ணுடன் ஓய்வீதிய கணக்கை இணைப்பது கட்டாயம் என்றும், விண்ணப்பத்தின் போது ஆதார் விவரங்களை அளித்து இருந்தாலும் மீண்டும் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
ஓய்வூதிய நிதி ஒழுங்கமைப்பு ஆணையம்
நிரந்தர ஓய்வூதிய கணக்கு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் இரண்டிலும் பெயர், பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்கள் ஒன்றாகப் பொருந்தி இருக்க வேண்டும் என்று ஓய்வூதிய நிதி ஒழுங்கமைப்பு ஆணையம் கூறியுள்ளது.
திருத்தம் இருந்தால் என்ன செய்ய வேண்டும்
ஒருவேலைப் பெயரில் திருத்தம் இருந்தால் நிரந்தர ஓய்வூதிய கணக்கு எண் அட்டை மற்றும் ஆதார் கார்டு நகலில் கையொப்பம் இட்டு சமர்ப்பிக்க வேண்டும்.
அரசு சந்தாதார்கள்
அரசு சந்தாதார்கள் தங்களது நோடல் அலுவலகம் உதவியுடன் ஆதார் எண்ணை தேசிய ஓய்வூதிய கணக்குடன் இணைக்கலாம் என்று ஓய்வூதிய நிதி ஒழுங்கமைப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!



Click it and Unblock the Notifications