மாத சம்பளத்துடன் கூடுதலாக வருமானம் வேண்டுமா? இதை படிங்க?

Written By: Tamilarasu
Subscribe to GoodReturns Tamil

ஒரு மாதாந்திர சம்பளம் பெறுவதில் நீங்கள் திருப்தியடைவில்லையா? சிறிது அதிகப் பணம் உங்கள் கைகளில் இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கின்றீர்களா? வேலைக்கு அப்பால் சென்று தங்கள் நிதி தேவைகளைப் பூர்த்திச் செய்ய ஒரு பக்க வருவாய் வேண்டுமா?

நீங்கள் ஒரு முழுநேர வேலையைச் செய்திருந்தாலும், சில கூடுதல் பணத்தை உருவாக்க இந்த வழிகளை நீங்கள் முயற்சி செய்யலாம்.

1. பயிற்சி ஆசிரியர்

உங்களுக்குப் போதனையில் ஆர்வம் இருந்தால், எந்தவொரு பாடத்திலும் அல்லது கலைகளிலும் நிபுணராக இருந்தால், நீங்கள் ஆன்லைனில் ஆசிரியராக முடியும். ஆன்லைநில் ஆசிரியரைத் தேடும் பல மாணவர்கள் உள்ளன. TutorVista அல்லது Tutor.com போன்ற பல வலைத்தளங்கள் உங்களுக்கு உதவக் கிடைக்கின்றன. உங்களுக்குத் தேவையான ஒரே முதலீடு லேப்டாப் மற்றும் இணைய இணைப்பு ஆகும். மேலும் உங்கள் அலுவலக நேரத்தைக் குறுக்கிடாமல் ஒரு நேரத்தை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்

2. ஃப்ரீலான்ஸ் எழுத்தாளர்

நீங்கள் மிகவும் ஆக்கப்பூர்வமானவராகவும், எழுதுவதில் திறமை கொண்டவராய் இருந்தால் பத்திரிகைகளிலும், வலைத்தளங்களிலும் கட்டுரைகள் எழுதலாம். வார்த்தை உள்ளடக்கத்தின்படி ஒவ்வொரு கட்டுரைக்கும் அவர்கள் உங்களுக்குப் பணம் செலுத்துவார்கள். சில பல-மொழி வலைத்தளங்களுக்கும் மொழிபெயர்ப்பாளர்கள் தேவைப்படுகின்றனர். உங்களுடைய பிராந்திய மொழியில் அதன் அர்த்தத்தை இழக்காமல் உரை ஒன்றை மொழிபெயர்க்கும் திறமை உங்களுக்கு இருந்தால், மொழிபெயர்ப்பாளரின் வேலையை நீங்கள் முயற்சி செய்யலாம்.

3 .கார்களை வாஷ் செய்வது

உங்களுக்கு ஒரு கார் இல்லையென்றாலும், உங்கள் குடும்பத்தினர், நண்பர்கள், மற்றும் அண்டை வீட்டார் கார்களைச் சுத்தம் செய்து நீங்கள் பணம் சம்பாதிக்க முடியும். பல முயற்சிகள் இல்லாமல் நீங்கள் கூடுதல் பணம் சம்பாதிக்க முடியும். நீங்கள் ஒரு அபார்ட்மெண்ட் அல்லது பிளாட்டில் தங்கியிருந்தால் இந்த அவகாசம் அதிகமாக இருக்கும். இதில் முதலீட்டுச் செலவு எதுவும் இல்லை.

4. உங்கள் இடத்தை வாடகைக்கு விடுங்கள்

உங்களிடம் ஒரு கூடுதல் அறை, வீடு அல்லது இடம் இருந்தால் நீங்கள் பார்வையாளர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு அதை வாடகைக்கு விடுவதன் மூலம் கூடுதல் பணம் சம்பாதிக்க முடியும். ஒரு உரிமையாளராக இருப்பது எளிதான மற்றும் லாபகரமானது. Airbnb, RelayRides, மற்றும் பல நிறுவனங்கள் இப்போது தனிநபர்கள் படுக்கையறைகள், வாகனங்கள், மற்றும் கூடுதல் இடம் போன்ற விஷயங்களை வாடகைக்குக் கொடுப்பதில் உதவுகின்றன. இதைப் பயன்படுத்திக் குறைவான முயற்சியுடன் கூடுதல் வருமானத்தைச் சம்பாதிக்கவும்.

5. குழந்தை பராமரிப்பாளர்

பேபி சிட்டிங் ஆனது பெற்றோரின் சார்பாகக் குழந்தைகளைக் கவனித்துக்கொள்கிறது. மெட்ரோ நகரங்களில், இந்த வேலைக்குப் பெரிய வரவேற்பு உள்ளது. இந்த வேலை தேடுவதற்கு SitterCity-ஐ பயன்படுத்தலாம், மற்றும் குடும்பம், நண்பர்கள், அண்டை வீட்டாரையும் அல்லது பேபி சிட்டர் ஒருவரைத் தேடும் மற்ற குடும்பங்களை அறிந்து கொள்ளலாம். இது உங்கள் நேரத்தை அதிகமாக உறிஞ்சாது. நீங்கள் குழந்தைகளை விரும்பினால், இந்த வேலை உங்களுக்கு இன்பம் மற்றும் பணத்தை வழங்கும்.

6. உங்கள் சொந்த யூடியூப் சேனல்

நீங்கள் வீடியோக்களை உருவாக்க விரும்பினால், இது ஒரு நல்ல வருவாய் ஆதாரமாக இருக்கலாம். வீடியோ எடிட்டிங் மட்டும் உங்களுக்குத் தெரிந்தால், நீங்கள் யூடியூப் சேனலை முயற்சி செய்யலாம். உங்கள் யூடியூப் சேனலில் கூகுள் விளம்பரத்ல் இருந்து பணம் சம்பாதிக்கலாம். உங்கள் வீடியோக்களில் ஏதேனும் வைரளாகப் பாராவினால், அதிகப் பணம் சம்பாதிக்கலாம்.

7. உங்கள் ஹாபிக்களைப் பயன்படுத்தலாம்

உங்களுடைய புகைப்படத் திறமை, ஓவியங்கள், பாடல்கள் முதலியவற்றை விற்பனை செய்வதன் மூலம் கூடுதல் வருமானத்தை நீங்கள் சம்பாதிக்கலாம். உங்கள் சொந்த போர்ட்ஃபோலியோ தளத்தில் திருமணங்களுக்கு அல்லது பிற வணிக நிகழ்ச்சிகளுக்கு உங்கள் திறமைகளை விளம்பரம் செய்யலாம். நீங்கள் பல நிகழ்வு நிர்வாகக் குழுக்களை அணுகுவதன் மூலம் உங்கள் திறமைகளை வெளிப்படுத்தவும் பணத்தைச் சம்பாதிக்கவும் உங்களுக்கு வாய்ப்புகளைத் தருவார்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Here Are Smart Ways To Earn Extra Income With A Full time Job

Here Are Smart Ways To Earn Extra Income With A Full time Job
Story first published: Tuesday, July 4, 2017, 16:03 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns