அந்நியச் செலாவணி அட்டை (forex card) வெளிநாடு பயணம் செய்யும் போது எடுத்துச் செல்ல ஒரு பாதுகாப்பான வழி.
இது பயணக் காலத்தில் பரிமாற்ற விகித ஏற்ற இறக்கங்களுக்கு எதிராக பாதுகாக்கிறது. ஃபாரெக்ஸ் அட்டை பெறுவது மிகவும் எளிதானது மற்றும் எந்த ஒரு அங்கீகரிக்கப்பட்ட டீலர் அல்லது வங்கியில் இருந்து வாங்க முடியும்.
படிவம்
பரிந்துரைக்கப்பட்ட படிவத்தை பயணிகள் பூர்த்தி செய்ய வேண்டும். இது வங்கி / டீலர் வலைத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது அருகில் இருக்கும் கிளையிலிருந்து பெற்றுக்கொள்ளலாம். அந்நியச் செலாவணி அட்டைகளுக்கான ஆன்லைன் விண்ணப்பத்தை சில வங்கிகளும் வழங்குகின்றன.
அட்டைகள் வகை
மல்டி கரன்சி கார்டுகள் ஒன்றுக்கு மேற்பட்ட கரன்சிக்களை ஏற்ற அனுமதிக்கிறது. மாணவர் அட்டை, கல்விப் பொருள் மீதான காப்பீடு மற்றும் தள்ளுபடிகள் ஆகியவற்றை தருகிறது. உங்கள் தேவைகளுக்கு ஏற்ப கார்டைத் தேர்வு செய்யவும்.
தகவல்
பயணிகளின் தனிப்பட்ட விவரங்கள், பயணத்தின் தேதிகள், பாஸ்போர்ட் எண், பான், அட்டையில் ஏற்றப்படும் வெளிநாட்டு கரன்சி வகைகள் ஆகியவை பூர்த்தி செய்யப்பட வேண்டும்.
கட்டணம்
அட்டை வழங்கல் கட்டணம் அவ்வப்போது பரிந்துரைக்கப்படும் வட்டி விகிதத்தில் வங்கி வசூலிக்கலாம்.
ஆவணங்கள்
விண்ணப்பத்துடன் ஒரு பாஸ்போர்ட் நகல் அளிக்கப்பட வேண்டும். விமான டிக்கெட்டின் ஒரு நகலும் தேவைப்படலாம். கட்டணத்துடன் ஏற்றப்பட வேண்டிய தொகையை ஒரு காசோலை அல்லது டெபிட் ஆணை மூலம் சமர்ப்பிக்க வேண்டும். தனிப்பயனாக்கப்பட்ட ஃபாரெக்ஸ் கார்டுகளை செயல்படுத்த மற்றும் பெற 4 -5 நாட்கள் தேவைப்படுகிறது.
அட்டை மீண்டும் லோட் செய்தல்
ரீலோட் படிவத்தை நிரப்புவதன் மூலம் கூடுதல் ஃபாரெக்ஸ் கார்டை மீண்டும் ரீலோட் செய்யலாம் மற்றும் தேவையான தொகைக்கு ஒரு காசோலை அல்லது டெபிட் ஆணை சமர்பிக்க வேண்டும்.
கவனிக்க வேண்டிய குறிப்புகள்
1. ஃபாரெக்ஸ் கார்டை பெற ஏற்கனவே இருக்கும் வங்கி கணக்கு தேவையில்லை.
2. வங்கிகள் ஆன்லைன் அறிக்கையை பார்வையிட மற்றும் ஆன்லைனில் ஃபாரெக்ஸ் கார்டை ஏற்றவும் வசதி அளிக்கின்றன


Click it and Unblock the Notifications