ப்ரீபெய்ட் கார்டுகள் என்பவை கிரெடிட் கார்டுகள் போன்றவையே ஆகும். இதிலிருக்கும் ஒரே ஒரு வித்தியாசம் என்னவென்றால், ப்ரீபெய்ட் கார்டுகளை பயன்படுத்துவதற்கு முன்பு அதில் நீங்கள் பணத்தை நிறைத்து பின்னர் தேவைப்படும்போது அதை செலவழித்துக் கொள்ளலாம்.
நீங்கள் ஷாப்பிங் செய்யும் போது ப்ரீபெய்ட் கார்டுகள் கிரெடிட் கார்டுகளைப் போலவே வேலை செய்கின்றன. ப்ரீபெய்ட் கார்டுகளைப் பயன்படுத்தும்போது பணத்தைக் கடனாக வாங்குவதற்குப் பதிலாக உங்கள் சொந்தப் பணத்தையே உபயோகிக்கிறீர்கள்.
ப்ரீபெய்ட் கார்டுகள் வழக்கமான கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளைப் போலவே தோற்றமளிக்கிறது. ப்ரீபெய்ட் கார்டுகள் என்பவை காந்த வரிகளைக் கொண்ட ப்ளாஸ்டிக் கார்டுகளாகும்.
ப்ரீபெய்ட் கார்டில் பணம் செலவழிப்பதற்கு முதலில் ஒரு வாடிக்கையாளர் அந்த கார்டை பணத்தால் நிரப்பும் முன் ப்ரீபெய்ட் கார்டை பயன்படுத்துவதிலுள்ள சிக்கல்களைத் தெரிந்துக் கொள்ளுங்கள்.
நுகர்வோர் பாதுகாப்பு
ப்ரீபெய்ட் கார்டுகள் நுகர்வோருக்கு கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் வழங்குவதைப் போன்ற பாதுகாப்பை வழங்குவதில்லை.
ஒரு வேளை மோசடி நடவடிக்கைகள் நிகழ்ந்தால் அந்த நேரங்களில் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளில் கிடைக்கும் அதே நிலை பாதுகாப்பை நீங்கள் பெறுவதில்லை.
கட்டணங்கள்
ப்ரீபெய்ட் கார்டுகள் அதிக கட்டணங்களை விதிக்கிறது. கீழே பட்டியலிடப்பட்ட கட்டணங்களை உங்கள் ப்ரீபெய்ட் கார்டுகள் விதிக்கலாம்.
தொடக்கக் கால நிறுவுதல் கட்டணம்
மாதாந்திர பராமரிப்பு கட்டணம்
ஏ.டி.எம் பயன்படுத்துவதற்கான கட்டணம்
பணத்தை கார்டில் மீண்டும் நிரப்புவதற்கான கட்டணம்
உங்கள் நிலுவைத் தொகையை சரிப்பார்ப்பதற்கான கட்டணம்
ஒவ்வொரு முறையும்
ஒவ்வொரு முறையும் இந்த கார்டைப் பயன்படுத்தும்போது கட்டணம் செலுத்த வேண்டி வரும் அல்லது வாடிக்கையாளர் சேவை மையத்தில் பேச வேண்டி வரும். அத்துடன் சில ப்ரீபெய்ட் கார்டுகள் மாதாந்திர பராமரிப்பு கட்டணத்தையும் வசூலிக்கின்றன.
கடந்த கால கடன் வரலாறுகள் இல்லை.
ப்ரீபெய்ட் டெபிட் கார்டுகள் பணப் பரிமாற்றக் கார்டுகள் ஆகும். ப்ரீபெய்ட் கார்டுகள் வலுவான பழைய கடன் வாங்கிய வரலாறுகளை கட்டுமானிக்க உங்களுக்கு உதவாது. ப்ரீபெய்ட் கார்டுகளைப் பயன்படுத்தும்போது நீங்கள் கடன் சார்பு தொடரை பயன்படுத்துவதில்லை. மேலும் கடனை திருப்பி செலுத்துவதற்காக மாதாந்திர பில்களை செலுத்த வேண்டியதில்லை. உங்கள் நடவடிக்கைகள் கடன் அறிக்கை ஏஜென்சிகளுக்கு அறிவிக்கப்படுவதில்லை.
சேமிப்பு இல்லை
ப்ரீபெய்ட் கார்டுகள் பணத்தை செலவழிப்பதை எளிதாக்குகிறது. ஆனால் உங்களுக்கு ஒரு வங்கிக் கணக்கு இருந்தாலொழிய பணத்தை சேமிப்பது கடினமாகும். வங்கிக் கட்டணமாக சிறிதளவு கூடுதல் பணத்தை நீங்கள் செலுத்தினாலும் கூட நீங்கள் ஆண்டு முழுவதும் சேமிப்பைச் சேர்க்கிறீர்கள் என்று பொருள்.
உங்களை சேமிப்பில் ஈடுபடுத்திக் கொள்ள இது ஒரு மனத் தந்திரம் என்றாலும் கூட அநேகமாக அந்த செலவிற்கு மதிப்புடையதாக இருக்கிறது.
அதிகப் பற்று
ப்ரீபெய்ட் கார்டுகள் உங்கள் பணத்தை பயன்படுத்த ஏற்படுத்தப்பட்டது. கடன் கொடுப்பவர்களுக்காக அல்ல. இதன் யோசனை என்னவென்றால் உங்களிடம் பணம் இல்லாதபோது இதை பயன்படுத்துவதை நீங்கள் நிறுத்திவிடலாம் என்பதாகும்.
ஆனால் சில கார்டுகள் அதிகப் பற்றுகளை அனுமதிப்பதன் மூலம் உங்களிடம் இருப்பதைவிட அதிக பணத்தை செலவழிக்க ஊக்குவிக்கிறது. (செங்குத்தான கட்டணங்கள்) நீங்கள் உங்கள் கார்டை பணம் போட்டு நிரப்பவில்லை என்றால் - நீங்கள் அதை உங்கள் வரி வருவாயில் முன்பணமாகப் பெற்றுக் கொண்டால், உதாரணமாக நீங்கள் பணத்தைக் கடனாக வாங்கி அவ்வாறு செய்ததற்காக பணத்தைத் திருப்பி செலுத்துவீர்கள்.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications