பிஎப் கணக்கை மேலும் எளிமை ஆக்கும் விதமாகவும், சமுகப் பாதுகாப்பு அளிக்கவும், ஓய்வு காலத்தில் ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி திட்டம் பயனளிக்கும் விதமாகவும் ஒரு வேலையில் இருந்து மற்றொரு வேலைக்கு மாறும் போது பிஎப் கணக்கும் மாறிவிடும் என்று மத்திய அரசு நேற்றா அறிவித்தது. மேலும் இந்தத் திட்டம் வரும் மாதம் முதல் அமலுக்கு வர இருக்கின்றது.
பிஎப் மாற்றத்தில் இருந்த பல பிரச்சனைகள் இந்தப் புதிய முறையினால் தீரும் என்று வல்லுகர்கள் கூறுகின்றனர். முன்பு பிஎப் கணக்கை மாற்றப் பல சிக்கல்கள் இருந்தன.
பொதுவாக முன்பு புதிய நிறுவனத்தில் வேலை மாற்ற செய்த உடன் புதிய பிஎப் கணக்கை திறந்து அதில் பழைய பிஎப் கணக்கை இணைக்க விண்ணப்பம் ஒன்றைச் சமர்ப்பிக்க வேண்டும். இந்த முறை மிகவும் கடினமாக இருப்பதாகவும் அதனால் பலர் பணத்தினைத் திருப்பி எடுக்கவே முயல்கின்றனர்.
எளிமையாக டிரான்ஸ்பர் செய்யலாம்
வருங்கால வைப்பு நிதி ஆணையத்தின் இந்தப் புதிய முறையினால் பிஎ பணத்தினை எளிமையாக டிரான்ஸ்பர் செய்யலாம் மேலும் இதனால் பிஎ பணத்தினைத் திரும்பிப் பெறுவது குறைக்கப்படும். அவர்களின் வருங்காலமும் பாதிக்கப்படாது.
சமூகப் பாதுகாப்புக்கு சிறந்த திட்டம்
தானாகப் பிஎ பணத்தினை டிரான்ஸ்பர் செய்யும் திட்டம் மூலம் பழைய பிஎப் கணக்கை மூட வேண்டும் என்ற அவசியம் இல்லை. எனவே இது ஊழியர்களின் வருங்காலத்தினைப் பெறும் அளவில் பாதுகாப்பாக வைக்கும். மேலும் ஓய்வு பெறும் வரை ஒரே கணக்கில் தங்களது பிஎ பங்களிப்பை செலுத்திப் பெறும் தொகையினைப் பெற முடியும்.
ஆதார் கார்டுடன் இணைத்தல்
தற்போது பிஎப் கணக்கு துவங்க ஆதார் கார்டு கட்டாயம் ஆகும். இதனால் பிஎப் கணக்கில் உள்ள பணத்தினைப் பிறரால் மோசடி செய்து எடுக்க முடியாது. எனவே ஆதார் எண்ணை பயன்படுத்திப் பழைய பிஎப் கணக்குடன் எளிமையாகப் புதிய நிறுவனத்திற்கு மாற்றிக்கொள்ள முடியும். அதுவும் இதற்கு எந்த விண்ணப்பமும் இல்லாமல்.
பழைய கணக்கை கண்டறிய முடியும்
முன்பு பல பிஎப் கணக்குகள் செயல்பாடா நிலையில் உள்ளது. பல ஊழியர்கள் இதனைத் திரும்பப் பெறவும் முயலவில்லை. யூனிவர்சல் கணக்கு எண் அறிமுகம் செய்த பிறகு இதில் பல கணக்குகள் செயல்படத் துவங்கினாலும் பழைய பிஎப் கணக்கை கண்டறிய முடியவில்லை. பிஎப் எண்ணைத் தொலைத்துவிட்டால் அதனைக் கண்டறியவும் முடியாது. இப்போது பிஎப் கணக்கை ஆதார் எண்ணுடன் இணைத்து மாற்ற முயல்வதினால் வேலை மாற்றம் செய்யும் போது கைமுறையாகச் செய்யும் பணிகள் குறையும்.


Click it and Unblock the Notifications