என்ஆர்ஐ-களுக்கு எப்போதெல்லாம் பான் கார்டு தேவைப்படும்..?!

Written By: Tamilarasu
Subscribe to GoodReturns Tamil

நிரந்தரக் கணக்கு எண் எனப்படும் பான் கார்டு எண் இந்தியால் பல பணப் பரிவர்த்தனையின் போது கட்டாயம் தேவைப்படும் ஒன்றாக உள்ளது. வெளிநாட்டில் உள்ள ஒரு இந்தியர் அல்லது வெளிநாட்டிற்குச் செல்ல இருக்கும் ஒருவருக்குப் பங்கு சந்தையில் முதலீடு செய்வது, சொத்து வாங்குவது அல்லது கிரெடிட் கார்டு பயன்படுத்தும் போது கண்டிப்பாகப் பான் கார்டு தேவை.

எனவே எந்தக் காரணங்களுக்கு எல்லாம் என்ஆர்ஐ-க்கு கண்டிப்பாப பான் கார்டு தேவை என்பதை இங்குப் பார்ப்போம்.

வருமான வரி

இந்தியாவில் ஒருவர் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும் என்றால் அவருக்குக் கண்டிப்பாகப் பான் கார்டு தேவை. மேலும் இந்தியாவில் பான் கார்டு வைத்துள்ள லட்சக்கணக்கானவர்கள் வருமான வரி தாக்கல் செய்வது இல்லை. என்ஆர்ஐ ஒருவர் இந்தியாவில் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும் என்றால் அவருக்குக் கண்டிப்பாகப் பான் கார்டு தேவை. வருமான வரி தாக்கல் செய்வதற்கு என்ஆர்ஐ-க்கு இந்தியாவில் வரி செலுத்தும் அளவிற்கு வருமானம் தேவை.

டிடிஎஸ்

என்ஆர்ஐ பெறும் வருவாய்க்கு டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படுகின்றது என்றால் அப்போதும் பான் கார்டினை குறிப்பிட வேண்டும். டிடிஎஸ் பிடித்தம் செய்யும் போது என்ஆர்ஐ பான் கார்டினை குறிப்பிடவில்லை என்றால் 20% வரை டிடிஎஸ் பிடித்ததிற்கு உட்படுவார். இதுவே பான் கார்டு சமர்ப்பித்தால் 10 சதவீதம் மட்டுமே பிடித்தம் செய்யப்படும்.

பங்கு சந்தை முதலீடு

செபியின் புதிய விதிப்படி என்ஆர்ஐ ஆக இருக்கும் ஒருவரால் பங்கு சந்தையில் முதலீடு செய்ய வேண்டும் என்றால் பான் கார்டு எண்ணைக் கண்டிப்பாகச் சமர்ப்பிக்க வேண்டும். டிமேட் கணக்கைத் திறக்க பான் கார்டினை சமர்ப்பிக்க வேண்டும்.

மியூச்சுவல் ஃபண்டு

என்ஆர்ஐ மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய வேண்டும் என்றாலும் பான் கார்டு கட்டாயம் தேவை.

இடம் வாங்குவது

என்ஆர்ஐ ஒருவர் இந்தியாவில் இடம் வாங்க வேண்டும், அல்லது பிற சொத்து ஏதேனும் வாங்க வேண்டும் என்றாலும் பான் கார்டினை சமர்ப்பிக்க வேண்டும்.

பாண்டு பத்திரங்கள்

பாண்டு பத்திர திட்டங்கள் எதிலாவது என்ஆர்ஐ முதலீடு செய்ய வேண்டும் என்றால் அதற்குப் பான் கார்டினை சமர்ப்பிக்க வேண்டும்.

கிரெடிட் கார்டு

என்ஆர்ஐ-க்குக் கிரெடிட் கார்டு வேண்டும் என்றால் அப்போது பான் கார்டு எண்ணைச் சமர்ப்பிக்க வேண்டும். இல்லை என்றால் கிரெடிட் கார்டு அளிக்கப்படமாட்டாது.

எல்ஐசி

என்ஆர்ஐ ஒருவர் ஆயுள் காப்பீடு திட்டங்களில் முதலீடு செய்து வருகின்றார்கள் என்றால் அப்போதும் பான் கார்டினை செலுத்திய பிறகே பிரீமியம் தொகையினைச் செலுத்த முடியும்.

இந்தியாவில் என்ஆர்ஐ பான் கார்டு பெற விண்ணப்பிப்பது எப்படி?

என்ஆர்ஐ இந்திய குடிமகன் என்றால் படிவம் 49ஏ படிவத்தினைப் பூர்த்திச் செய்து பான் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம். பிற நாட்டுக் குடியுரிமை பெற்ற என்ஆர்ஐ 49ஏஏ படிவம் சமர்ப்பித்து விண்ணப்பிக்கலாம். இந்த விண்ணப்பித்தினை UTIITSL மற்றும் NSDL இரண்டு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

படிவத்தைச் சமர்ப்பிப்பதன் மூலம், ஒரு 15 இலக்க எண்ணுடன் ஒப்புகை நகல் உருவாக்கப்படுகிறது. இந்த நகல் மற்ற ஆவணங்களுடன் சேர்த்து நியமிக்கப்பட்ட முகவரிக்கு அனுப்பப்பட வேண்டும்.

 

தேவையான ஆவணங்கள்

என்ஆர்ஐ ஒருவார் பான் கார்டுக்கு விண்ணப்பிக்கும் போது பின் வரும் ஆவணங்கள் தேவை.

1) இரண்டு புகைப்படங்கள்
2) பாஸ்போர்ட் நகல்
3) எந்த நாட்டுக் குடியுரிமை வைத்துள்ளார்களோ அந்த நாட்டின் வங்கி கணக்கு அறிக்கை, என்ஆர்ஐ வங்கி கணக்கு அறிக்கை, அதிலும் கடைசி 6 மாதத்தில் 2 பரிவர்த்தனைகள் செய்து இருத்தல் வேண்டும்.

எனவே என்ஆர்ஐ ஆக இருந்தாலும் பான் கார்டு பெற்று இருப்பது நல்லது. முக்கியமானதும் கூட.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Do NRIs Need To Have A PAN Card? How to apply?

Do NRIs Need To Have A PAN Card? How to apply?
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns