ஆன்லைனில் ஆதார் எண்-ஐ லாக் செய்வது எப்படி?

ஆதார் அட்டையின் பயோமெட்ரிக் தகவல்களின் முக்கியத்துவத்தைப் பற்றி நாம் எல்லோரும் அறிவோம். ஆதார் தகவல்களில் செய்யப்படும் எந்த சிறு சமரசமும் சாத்தியமான தவறான பயன்பாடு அல்லது மோசடிக்கு வழிவகுக்கும். உங்கள் ஆதார் அட்டையை ஆன்லைனில் பூட்டுவதன் மூலம் உங்கள் பயோமெட்ரிக் தகவல்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதை தவிர்க்கலாம்.

பயோமெட்ரிக்ஸ் எனப்படும் உங்கள் உயிரியியல் அளவுகள் ஆன்லைனில் பூட்டப்பட்ட பிறகு, பயோமெட்ரிக்ஸை சான்றுறுதிக்காகப் பயன்படுத்த முடியாது. இது மறைமுக தவறானப் பயன்பாடுகளை தடுக்கிறது.

இப்போது ஆதார் அட்டையை ஆன்லைனில் எப்படி பூட்ட வேண்டும் என்று பார்ப்போம்:

ஓடிபி

ஓடிபி

உங்கள் ஆதார் அட்டையை ஆன்லைனில் பூட்டி விடலாம். பூட்டுவதைத் தொடங்குவதற்கு முன் உங்களிடம் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் இருக்கிறதா என்று உறுதி செய்துக் கொள்ளுங்கள்.

இந்த செயல்முறையின் போது யுஐடிஏஐ உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு ஒரு முறை கடவுச்சொல்லை (ஓடிபி) அனுப்பும்.

 

 ஆதார் அட்டையை பூட்டுவது எப்படி?

ஆதார் அட்டையை பூட்டுவது எப்படி?

ஆன்லைனில் ஆதார் அட்டையை பூட்டுவது எப்படி என்பதற்கான செயல்முறையை பார்க்கலாம் வாருங்கள்:

படிநிலை 1

படிநிலை 1

யுடிஏஐ ஆதார் பயோமெட்ரிக் பூட்டுதல் இணைய இணைப்பிற்கு செல்லவும். https://resident.uidai.gov.in/biometric-lock

உங்கள் தனித்தன்மையான 12 இலக்க ஆதார் எண்ணையும் அதற்கு அடுத்ததாகக் கிடைக்கப்பெறும் குறியீட்டையும் உள்ளிடவும்,

 

படிநிலை 2

படிநிலை 2

‘ஓடிபி ஐ அனுப்பவும்' என்கிற தேர்வின் மீது சொடுக்கவும்.

யுடிஏஐ உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு ஒரு ஓடிபி ஐ அனுப்பும். இந்த ஓடிபி 30 நிமிடங்கள் மட்டுமே செல்லுபடியாகும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். கொடுக்கப்பட்ட இடத்தில் இந்த ஓடிபி ஐ உள்ளிட்டு ‘உள் நுழை' என்கிற தேர்வினை சொடுக்க வேண்டும்.

 

படிநிலை 3

படிநிலை 3

‘இயலச் செய்' என்கிற தேர்வினை சொடுக்கி, ஆதார் பயோமெட்ரிக்கை பூட்டுவதற்கு அதற்கு பக்கத்தில் கிடைக்கப்பெறும் குறியீட்டை உள்ளிட வேண்டும். பின்னர், ஆதார் பயோமெட்ரிக் வெற்றிகரமாகப் பூட்டப்பட்டதற்கான குறுஞ்செய்தி உங்களை வந்தடையும்.

 பூட்டைத் திறக்கும் காலம்

பூட்டைத் திறக்கும் காலம்

ஒருமுறை நீங்கள் பூட்டிவிட்டால் பின்னர், 10 நிமிடங்களுக்கு மட்டுமே பூட்டைத் திறக்க முடியும். இந்தத் தற்காலிகப் பூட்டைத் திறக்கும் காலத்திற்கு பிறகு, யுடிஏஐ 10 நிமிடங்களில் தானாகவே உங்கள் ஆதாரைப் பூட்டிவிடும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+