அக்ரூவல் கடன் நிதிகள் என்றால் என்ன?

சமீபத்தில் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை குறைத்த பின்பு வணிக வங்கிகள் அனைத்தும் சேமிப்பு கணக்கு மற்றும் வைப்பு நிதி ஆகியவற்றின் வட்டி அதிகளவில் குறைந்துள்ளது.

இதன் மூலம் ஆய்வாளர்கள் தற்போது நிலையான வருமான முதலீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்ய முதலீட்டாளர்களுக்கு அக்ரூவல் நிதித் திட்டங்களுக்கு மாறுமாறு ஆலோசனை கூறுகிறார்கள்.

அக்ரூவல் கடன் நிதிகள் என்றால் என்ன?

இந்த நிதித் தேர்வைப் பற்றிய விவரங்களை இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்:

அக்ரூவல் நிதிப் பத்திரங்கள்

இந்த பத்திரங்களின் மீது ஈட்டப்படும் கூப்பன் வட்டி மீது முக்கியமாக கவனத்தைச் செலுத்துகின்றனர். மூலதன ஆதாயங்களும் சிறிது வருவாயை வழங்குகின்றன.

ஆனால் அக்ரூவல் கடன் நிதிகளில் வட்டி விகிதங்கள் ஒட்டுமொத்த வருவாயோடு ஒப்பிடும் போது மிகக் குறைவாக உள்ளது. மாறாக, இதர வகை கடன் நிதிகள், நீண்ட கால வரையறை நிதிகள் போன்றவை மூலதன ஆதாயத்திலிருந்து வருமானத்தை வழங்க முனைகின்றன, இது வட்டி விகிதங்கள் குறையும் சூழ்நிலை ஏற்பட வழிவகுக்கின்றன.

மேலும், அக்ரூவல் கடன் நிதிகளைப் பொறுத்தவரை வர்த்தக அளவு மிகக் குறைவாக இருக்கிறது. இது வங்கி சில காலம் வைத்திருக்கும் ஆணையுடன் வருகிறது. எது எப்படியிருப்பினும், இந்த நிலை கால வரையறை நிதிகளில் ஒரே மாதிரியாக இருக்காது. ஏனென்றால் இவை இந்த நிதிகளைக் கையாளும் நிர்வாகக் குழுவின் பார்வையில் உள்ள வட்டி விகிதங்களின் அடிப்படையில் வர்த்தகம் செய்யப்படுகின்றன.

அக்ரூவல் நிதிகளின் வகைகள்
1. கடன் வாய்ப்பு நிதிகள்
2. நிறுமப் பத்திர நிதிகள்

கடன் வாய்ப்பு நிதிகள் அல்லது க்ராப் நிதிகள் பத்திர மதிப்பீடு மற்றும் அதன் அடிப்படை விதிகளின் மீது கவனம் செலுத்துகிறது. எனவே, நிதி மேலாளரின் ஆய்வின்படி பத்திரம் மேம்படுத்தப்பட்டு அதனால் மூலதனத்திலிருந்து லாபம் ஈட்டும் வாய்ப்புக்கள் உள்ளன. அதே சமயம் க்ராப் முதலீடுகளோடு ஒப்பிடும் போது இதரப் பிரிவுகள் பாதுகாப்பானதாகும். ஏனெனில் அவை உயர்தர ஆவணங்களில் முதலீடு செய்யப்படுகிறது மேலும் எந்த விதமான கூடுதல் அபாயங்களையும் எடுப்பதில்லை.

தற்போதைய சூழ்நிலையிலும் கூட, விலை குறைப்புகள் உருவாகும் நிலை இல்லாத போதும், இந்த நிதி வகைகள் வட்டி வருமானத்தை தரும் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். நடப்பு ஆட்சியைப் பார்க்கும் போது, முதலீட்டாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு பார்த்தால், நிலையற்ற தன்மைக் கொண்டிருப்பதால் வட்டி விகிதங்களின் மீது மிகப் பெரிய தொகைகளை முதலீடு செய்து பந்தயங்களை மேற்கொள்ளாமல் இருப்பதும் மற்றும் அவர்களுடைய பணத்தை வெவ்வேறு கடன் திட்டங்களில் பரவலாக முதலீடு செய்வதும் அவர்களுக்கு நல்லது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+