இக்கரைக்கு அக்கரை பச்சை என்பது மிகப் பழமையான முதுமொழி - உங்கள் அலுவலகத்தின் தனியறையில் நாள் முழுவதும் உட்கார்ந்து கொண்டு பயணங்கள் மேற்கொள்ளும் வேலையிலிருக்கும் உங்கள் நண்பரைப் பார்த்து நீங்கள் பொறாமைப்படுகிறீர்கள். ஆனால் இதேதான் அவர் மனதிலும் இருக்கும்.
இப்போது, எப்பொழுதும் நிறையப் பயணத்தில் ஈடுபடும் வேலை வேண்டும் என்கிற கனவினை உடையவரா நீங்கள்? அப்படியென்றால், அத்தகைய ஒரு வேலைவாய்ப்பை ஏற்றுக் கொள்வதில் உள்ள ஐந்து அசௌகரியங்களைப் பற்றித் தெரிந்துக்கொள்ளுகள்.
1. உங்களுக்கு விரைவில் வயதாகிவிடும்
ஆரோக்கியமற்ற காற்று, ஹோட்டல் உணவு, மோசமான தூக்கப் பற்றாக்குறை மற்றும் போதிய உடற்பயிற்சியின்மை ஆகியவை உங்களுக்கு வேகமாக வயதை அதிகரிக்கச் செய்கிறது. ஒவ்வொரு வாரமும் நீங்கள் மும்பையிலிருந்து டெல்லிக்குப் பயணம் செய்து திரும்பும் போதும் அல்லது ஒவ்வொரு 2 மாதங்களுக்கொருமுறை மும்பையிலிருந்து நியூயார்க் பயணம் சென்று திரும்பும் போதும் வெப்பக் கதிர்வீச்சின் வெளிப்பாட்டிற்கு உள்ளாகும் போது பாதுகாப்பு வரம்புகள் மீறப்படுவது உங்களுக்குத் தெரியுமா?
2. மிக அதிக அளவு மன அழுத்தம்
நீங்கள் பயணம் செய்யும் போது உங்கள் அலுவலக இயக்கம் நிற்காது. தொடர்ந்து வேலைகள் நடைபெறும். எனவே நீங்கள் எப்பொழுதும் மின்னஞ்சல்களையும் மற்றும் அலைபேசி அழைப்புகளையும் பெற்று பதிலளிக்க வேண்டியிருக்கும். இத்தகைய வேலைப் பளுவினால் மன அழுத்தம் அதிகரிக்கிறது.
3. குடும்பத்திற்காகச் செலவிடும் நேரம் குறைகிறது
நீங்கள் அடிக்கடி பயணம் மேற்கொள்ள வேண்டி இருப்பதால், குடும்ப நிகழ்வுகள், குடும்பத்தினர் யாராவது நோயுற்றால் அங்கே இருந்து கவனித்துக் கொள்வது அல்லது குடும்பத்தினரில் ஒருவருடன் நேரடியான உரையாடல்கள் போன்ற சந்தர்ப்பங்களில் வெகு அரிதாகப் பங்கேற்பீர்கள்.
4. வேலை உங்களைத் தனிமைப்படுத்தி விடுகிறது
இத்தகைய பயணம் செய்யும் வேலையால், உடல்நலம் மற்றும் குடும்பத்துடன் முக்கிய இடங்களுக்குச் செல்லுதல், சமூகத் தொடர்புகள் போன்ற நடவடிக்கைகள் புறந்தள்ளப்படுகின்றன. பழைய நட்புகள் மங்கிப் போகின்றன. புதிய நட்புகள் மிக அரிதாகச் செய்யப்படுகின்றன. நீங்கள் தனிமையாக்கப்படுகிறீர்கள்.
5. அதிகரித்த செலவுகள்
தொடர்ந்து அடிக்கடி பயணம் செய்தல் நேரம் மற்றும் பணத்தைச் சேமிப்பதற்கு இடையேயான சமரசமாகும். பயணத்தில் லக்கேஜ்களைத் தொலைத்தல், புதிய நகரத்தில் நோயில் விழுதல், விமானத்தைத் தவறவிடுதல் போன்றவை உங்கள் பட்ஜெட்டின் செலவுகள் பக்கத்தில் சேர்க்கப்படும்.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது



Click it and Unblock the Notifications