இந்தியாவில் அண்மைக்காலமாக வேகமாக வளர்ந்து வரும் ஒரு முதலீடு திட்டம் என்றால் அது மியூச்சுவல் ஃபண்டு ஆகும். ஆனால் இந்திய சந்தையில் அதிகப்படியான மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களால் எதில் முதலீடு செய்வது என்பதில் மக்கள் குழம்பிவிடுகின்றனர்.
மியூச்சுவல் ஃபண்டு திட்டத்தில் முதலீடு செய்த பலருக்கு இருக்கும் ஒரு கேள்வி என்றால் தான் சரியான திட்டத்தில் முதலீடு செய்துள்ளனா மற்றும் நல்ல லாபம் அளிக்குமா என்பது ஆகும்.
ஆனால் அவர்கள் கேட்கும் கேள்விக்குப் பதில் அளிப்பது கடினம் ஆகும். ஏன் என்றால் மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களில் முதலீடு செய்வது என்பது சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது.
சந்தை அபாயங்கள் என்ற உடன் பயப்பட வேண்டாம். பேருந்தில் செல்லும் போது விபத்து நேர்கின்றது என்ற காரணத்திற்காகப் பயணம் செய்யாமலா இருக்கின்றோம். இல்லை அல்லவா? அதே போன்று தான் மியூச்சிவல் ஃபண்டுகளிலும். சில திட்டங்கள் லாபம் அளிக்கும், சில நட்டம் அளிக்கும்.
எனவே இங்கு உங்களுக்காக 2017 ஆம் ஆண்டு முதலீடு செய்வதற்கு ஏற்ற 10 மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களை இங்குப் பட்டியலிட்டுள்ளோம்.
Scheme | Category | NAV | Asset Size (in crore) | Returns (In %) | ||
---|---|---|---|---|---|---|
1yr | 3yr | 5yr | ||||
Birla Sun Life Top 100 Fund | Large Cap Fund | 56.278 | 2,262.79 | 15.7 | 13 | 19.9 |
SBI BlueChip Fund | Large Cap Fund | 36.795 | 10,099.40 | 12.9 | 14.4 | 20.1 |
Birla Sun Life Frontline Equity Fund | Large Cap Fund | 212.25 | 13,116.39 | 14 | 13.1 | 19.7 |
ICICI Pru Value Discovery Fund | Diversified Fund | 135.71 | 14,747.30 | 6.2 | 10.9 | 21.8 |
HDFC Balanced Fund | Balanced Fund | 142.398 | 9,818.56 | 15.4 | 13.9 | 19.3 |
Birla Sun Life Advantage Fund | Diversified Fund | 432.38 | 3,112.29 | 20.4 | 20.5 | 25.2 |
DSPBR Small and Midcap Fund | Small and Midcap Fund | 52.855 | 3,537.72 | 19.1 | 20.2 | 25.4 |
Franklin India Smaller Companies Fund | Small and Midcap Fund | 56.506 | 4,579.29 | 17.8 | 20.2 | 31.5 |
Mirae Asset Emerging Bluechip Fund | Small and MidCap Fund | 47.716 | 3,306.87 | 26.5 | 25 | 31.9 |
HDFC Midcap Opportunities Fund | Small and MidCap Fund | 53.518 | 14,625.43 | 16.4 | 19.1 | 26.3 |
குறிப்பு
கிரெனியம் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட், அதன் துணை நிறுவனங்கள், கூட்டாளிகள் மற்றும் எழுத்தாளர் இந்தக் கட்டுரையில் தகவலின் அடிப்படையில் ஏற்படும் நஷ்டங்கள் மற்றும் / அல்லது பாதிப்புகளுக்குப் பொறுப்பு அல்ல. ஆசிரியரும் அவரது குடும்பத்தினரும் மேலே குறிப்பிட்டுள்ள பங்குகளில் பங்குகளை வைத்திருக்கவில்லை. முதலீடு செய்யும் முன்பு சந்தையின் நிலையினை ஆராய்ந்து முதலீடு செய்வது பாதுகாப்பானது.