பான் என்று அழைக்கப்படும் நிரந்தரக் கணக்கு எண்ணானது வருமான வரித் துறையினரால் விண்ணப்பதாரரின் பிறந்த தேதி, பெயர் போன்றவற்றைப் பயன்படுத்தித் தனிநபர் ஒருவருக்காக வழங்குவதாகும்.
தனிநபருக்கு நியமிக்கப்படும் பான் எண்ணானது 10 இலக்க எண் மற்றும் எழுத்துக்களால் உருவாக்கப்பட்டது ஆகும். இதனை அனைத்து நிதி பரிவர்த்தனைகளுக்கும், வரி செலுத்துவதற்கும், வருமான வரி தாக்கல் மற்றும் சொத்து வரி தாக்கல் செய்யும் போது இணைக்க வேண்டும்.
பான் எண்ணானது வரி துறையினரால் ஒருவரின் நிதி ஆதாரங்களை ஆராய்வதற்காகப் பயன்படுத்தப்படுகின்றது. ஆனால் ஒருவர் தான் இருக்கும் மாநிலத்தில் இருந்து வேறு மாநிலத்திற்கு நிரந்தரமாக மாறும் போது பான் கார்டின் அசசிங் அலுவலரை மாற்றவேண்டும். புதிய முகவரியுடன் அசசிங் அலுவலரை மாற்ற வேண்டும்.
எனவே பான் கார்டை மைகிரேட் செய்வது எப்படி என்று விளக்கமாக இங்குப் பார்ப்போம்.
யாரை அணுக வேண்டும்?
அசசிங் ஆப்பிசர் எனப்படும் ஏஓ-ஐ மாற்ற தற்போது நீங்கள் பயன்படுத்தும் பான் கார்டின் ஏஓ யார் என்று கண்டறிந்து அவருக்கு எந்த ஏஓ-க்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைக்க வேண்டும்.
உங்களது ஏஓ அல்லது புதிய ஏஓ யார் என்று எப்படிக் கண்டறிவது எப்படி?
ஏஓ யார், முகவரி, தொடர்பு எண் என்ன என்பதை வருமான வரித் துறை இணையதளம் மூலம் கண்டறியலாம். இதுவே ராணுவத்தில் வேலை செய்பவர்கள் தாங்கள் வேலை செய்யும் இடத்தினைப் பொருத்து பான் கார்டு பெறுவார்கள். இதுவே அவர்கள் வேறு மாநிலங்கள் அல்லது ஓய்வு பெறும் போது ஏஓ-ஐ மாற்ற வேண்டும். இது வேலை பார்க்கும் இடத்தில் பான் கார்டு பெறும் அனைவருக்கும் பொருந்தும்.
பான் மைகிரேஷனுக்கு விண்ணப்பித்த பிறகு என்ன ஆகும்?
ஏஓ உங்களது டிரான்ஸ்ஃபர் கோரிக்கையை ஏற்றுக்கொண்டால் பான் டிரான்ஸ்ஃபர் கோரிக்கையானது வருமான வரித் துறை கமிஷனரிடம் செல்லும். இவர் அனுமதி அளிக்கவில்லை என்றால் டிரான்ஸ்ஃபராகாது. கமிஷனர் அனுமதி அளித்த பிறகு தான் புதிய ஏஓ-இடம் உங்களது வருமான விவரங்கள் அளிக்கப்பட்டு வரி தாக்கல் செய்ய முடியும்.
ஏஓ மாற்றப்பட்டதா என்பதை எப்படிக் கண்டறிவது?
தற்போது உங்கள் பான் எந்த ஏஓ-ன் கீழ் இருக்கின்றது என்பதையும் வருமான வரித் துறை இணையதளத்திற்குச் சென்று ‘உங்கள் ஏஓ-ஐ தெரிந்துகொள்ளுங்கள்' என்ற தெரிவை கிள்க் செய்து தெரிந்துகொள்ளலாம்.
பான் மைகிரேஷன் செய்யச் செயலி ஏதேனும் உள்ளதா?
பான் மைகிரேஷன் செய்யச் செயலி ஏதேனும் உள்ளதா?
பான் மைகிரேஷன் செய்வதற்கான தெரிவுகள் ஐடி துறையின் புதிய மொபைல் செயலியான ஆயகார் சேது மூலம் செய்ய முடியும். பான் மைகிரேஷன் செய்ய ‘காட் ஏ பிராபளம்' என்ற தெரிவை தேர்வு செய்தால் பான் மைக்ரேஷனுக்கான தேர்வு இருக்கும். அதனைத் தட்டுவதன் மூலம் பான் மைக்ரேஷன் விவரங்கள் உங்களுக்கு அளிக்கப்படும்.
More From GoodReturns

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!



Click it and Unblock the Notifications