இந்தியாவில் முதலீடு செய்ய ஏற்ற 7 ஸ்மால் கேப் பங்குகள்!

பால் சாமுவேல்சன் ஒருமுறை கூறினார், "முதலீடு செய்வதென்பது சுவரில் தீட்டப்பட்ட வண்ணம் காய்வதை அல்லது புல் வளர்வதைப் பார்ப்பதைப் போன்றது. உங்களுக்கு அதிக உற்சாகம் வேண்டுமென்றால், 800 அமெரிக்க டாலர்களை எடுத்துக் கொண்டு லாஸ் வேகாஸ் செல்லுங்கள்."

இதன் சாராம்சத்தின் அர்த்தம் என்னவென்றால் நீங்கள் நீண்ட காலத் திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும் என்பதாகும். நீங்கள் பங்கு விலைகளில் விரைவான எழுச்சியைப் பார்க்க விரும்பினால், அது தாக்கப்பட்ட பெயர்களிலிருந்து வரலாம். நீண்ட கால வரையறையில் செல்வத்தை உருவாக்கும் சில ஸ்மால் கேப் பங்குகளைப் பற்றி இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

 ரிலையன்ஸ் வீட்டு நிதி

ரிலையன்ஸ் வீட்டு நிதி

இந்தப் பங்குகள் எதனால் சிறந்த பந்தயமாக இருக்கின்றது. இந்தப் பங்குகள் பெருமளவில் லாபகரமாக இருக்கின்றது, ஏனென்றால், இந்தப் பிரிவு கொண்டிருக்கும் மிகப் பெரிய திறனாற்றலால். வீட்டு நிதிப் பகுதி 20 சதவிகித விகிதத்தில் வளர்ந்து வருகிறது மேலும் பொருளாதாரத்தில் இதரப் பிரிவுகளை விட அதிவேகமாக வளரும் பிரிவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரிலையன்ஸ் வீட்டு நிதியைத் தனது கடன் புத்தகத்தில் வரவிருக்கும் வருடங்களில் குறைந்தபட்சம் ரூ. 50,000 கோடியாக அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் மொத்த செயல்படாத சொத்துக்கள் அதன் முன்தொகையை விட 0.80 மடங்காகும். அது ஒன்றும் மோசமான அளவல்ல. சந்தை நிலவரங்கள் சற்று பின்தங்கியுள்ளன எனவே ரிலையன்ஸ் வீட்டு நிதிகளும் அப்படித்தான் இருக்கிறது. பெரும்பாலான தரகு நிறுவனங்கள் இந்த நிறுவனத்தின் பங்கு விலைகளை சுமார் ரூ. 115 க்கு பட்டியலிட எதிர்பார்த்தது. இருந்தாலும் ரூ. 113 க்கு பட்டியலிடப்பட்ட இந்தப் பங்குகள் இதுவரை ரூ. 99 க்கு சரிந்துள்ளது. இது வாங்கி நீண்ட காலத்திற்கு வைத்திருக்கக் கூடிய சிறந்த ஸ்மால் கேப் பங்குகளில் ஒன்றாகும்.

 

ரிலையன்ஸ் வீட்டு நிதிகள்

ரிலையன்ஸ் வீட்டு நிதிகள்

ரிலையன்ஸ் வீட்டு நிதிகள் ரிலையன்ஸ் மூலதனத்திலிருந்து உருவாக்கப்பட்டவை மேலும் கடந்த சில வாரங்களுக்கு முன் பட்டியலிடப்பட்டுள்ளது. ரூ. 115 க்கு பட்டியலிடப்பட்ட இதன் பங்குகள் இப்போது ரூ. 99 என்கிற நிலைக்குச் சரிந்துள்ளது. இது ஒரு கூரிய வீழ்ச்சியாகும். ரிலையன்ஸ் கேப்பிடல் நிறுவனத்தில் முதன்மையான 51 சதவிகிதப் பங்குகளை வைத்துள்ளது. ரிலையன்ஸ் ஹோம் ஃபைனான்ஸ் என்பது இருப்பதிலேயே மிக மலிவாகக் கிடைக்கப்பெறும் வீட்டு நிதி நிறுவனப் பங்காகும். உதாரணமாக, இந்த நிறுவனத்தின் ஏட்டு மதிப்பு விலை வெறும் 2.5 மடங்காகும். ஒப்பிடும் போது ஹெச்டிஎஃப்சி யோடு 4 மடங்கும், கான்ஃபின் ஹோம்ஸ்சோடு 5 மடங்கும், ரெப்கோ ஹோம் ஃபைனான்சோடு 3.1 மடங்கும், பிஎன்பி ஹவுசிங்கோடு 4.4 மடங்கும், க்ருஹ் ஃபைனான்சோடு 14.9 மடங்கும் ஆகும்.
இந்த நிறுவன நிர்வாகத்தின் கீழ் சுமார் ரூ.13,000 கோடி சொத்துக்கள் இருக்கின்றன.

போடால் கெமிக்கல்ஸ்

போடால் கெமிக்கல்ஸ்

போடால் கெமிக்கல்ஸ் என்பது சாயப் பொருட்கள் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள ஒரு நிறுவனமாகும். ஜூன் 30, 2017 இல் முடிவடைந்த காலாண்டில் எண்ணிக்கை மிகப்பெரியதாக இல்லை, இருப்பினும், தொடர்ந்து நம்பிக்கையுடன் இருப்பதற்கான காரணம் உள்ளது. அதற்கான ஒரே காரணம் நிறுவனம் மேற்கொள்ளவிருக்கும் பெரும் திறன் விரிவாக்கமாகும். உதாரணமாக இந்த சாயப் பொருட்களின் திறனளவு தற்போதுள்ள 8,000 எம்டிபிஏ விலிருந்து 25,000 எம்டிபிஏ வாக விரிவாக்கப்படும். ஒட்டுமொத்த நிதியளிப்பு உள்ளார்ந்த நிதித் தொகுப்புகளின் வழியே நடைபெறும். இதன் இணை நிறுவனமான 42 சதவிகிதத்தைக் கொண்டிருக்கும் ட்ரையான் கெமிக்கல்ஸ் ஒரு கலவையை உருவாக்கும். இது நீச்சல் குளங்களுக்கான கிருமிநாசினிகள், பாசிக் கொல்லிகள் மற்றும் பாக்டீரியா கொல்லிகளை தயாரிக்கும் நிறுவனமாகும். இந்நிறுவனம் லைனர் அலிகில் பென்சீன் சல்ஃபோனிக் அமிலத்திற்கான ஒரு தொழிற்சாலை ஒன்றைத் துவக்கியது, திரவ சாய பொருட்களின் அளவும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

போடால் சிறந்த பங்காதாயங்களைப் பெறவுள்ளது

போடால் சிறந்த பங்காதாயங்களைப் பெறவுள்ளது

போடால் கெமிக்கல்ஸ் விரிவாக்கம் காரணமாக வரவிருக்கும் வருடங்களில் நல்ல பங்காதாயங்களை பெறவிருக்கிறது. இதைத் தவிர, புதிய சந்தைகளில் நுழைந்து புதிய வாடிக்கையாளர்களை கைவசப்படுத்த இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மேலும் இந்நிறுவனம் தற்போதைய குறைந்த நிலை பங்குக் கடனை தொடர்ந்து பராமரிக்க திட்டமிட்டுள்ளது. ஜுன் 30, 2017 முதல் காலாண்டின் இறுதியில் இந்த நிறுவனம் கடந்த ஆண்டை விட குறைந்த ஈபிஎஸ் ஐ அறிவித்துள்ளது. இருந்தாலும் கடந்த இரண்டு வருடங்களாகக் கண்காணித்ததில் பங்குகள் மலிவாக உள்ளன. உதாரணமாக, இந்த நிறுவனம் 2108- 19 நிதியாண்டில் ரூ. 14 க்கு ஈபிஎஸ் ஐ தெரிவிக்கலாம். அது தற்போதைய சந்தை நிலவரத்தை விட 11 மடங்கு அதிகமாகும். இது இரண்டு ஆண்டுகளுக்கான சிறந்த தொலைநோக்கு திட்டமாகும். மற்றொரு நல்ல விஷயம் என்னவென்றால் விளம்பரதாரர்கள் இந்த நிறுவனத்தில் தொடர்ந்து மிகப் பெரிய அளவாக 64 சதவிகிதப் பங்கை வைத்திருக்கிறார்கள். தேசிய பங்கு பரிமாற்றத்தில் போடால் கெமிக்கல்ஸ் இன் பங்குகள் தற்போது ரூ. 161 க்கு விற்பனையாகிறது.

இந்தோ கவுண்ட் தொழில் நிறுவனம்

இந்தோ கவுண்ட் தொழில் நிறுவனம்

இந்தோ கவுண்ட் நாட்டின் மிகச்சிறந்த ஜவுளி உற்பத்தியாளர்களில் ஒருவராக இருக்கிறார், இது படுக்கை விரிப்புகள், பேஷன் படுக்கை மற்றும் பயன்பாட்டு படுக்கை ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க இருப்பைக் கொண்டுள்ளது.
இந்த நிறுவனம் உலகெங்கிலும் அலுவலகங்களைக் கொண்டுள்ளது, இப்போது தன் சொந்தமான உற்பத்திகளில் சந்தையில் கணிசமான வீரனாக உள்ளது. விரிவாக்கம் தொடர்பான முன்கூடிய செயல்பாடுகள் காரணமாக லாப விகிதம் குறைந்து கடந்த சில காலாண்டுகளாக நிறுவனத்தின் செயல்திறன் சற்று அடங்கியுள்ளது.

எப்படி இருந்தாலும், லாப விரிவாக்கம் மற்றும் திறன் விரிவாக்கத்தின் அடிப்படையில் இனி மேற்கொண்டு நிறுவனத்தின் செயல்பாடுகள் சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. செயல்திறனின் திறன் 68m மீட்டர் முதல் 90 மீட்டர் வரை கிட்டத்தட்ட 11 சதவீதம் செயலாக்க திறன் அதிகமாக இருக்கும். நிறுவனம் நெசவுத் திறனை மேலும் அதிகரிக்கிறது, ஆனால் அது பலன் கொடுக்கச் சிறிது காலம் பிடிக்கும்.

 

இதோ கவுண்ட்: நியாயமாக விலையிடப்பட்டுளதாகத் தெரிகிறது

இதோ கவுண்ட்: நியாயமாக விலையிடப்பட்டுளதாகத் தெரிகிறது

அடிப்படையில் இந்தப் பங்குகள் பாராட்டுகளுக்கு இடமளித்துள்ளது. நிதியாண்டு 2016 - 17 க்கு இந்தோ கவுண்ட் தொழிற்துறை ரூ. 11.55 க்கு ஈபிஎஸ் ஐ அறிவித்துள்ளது. இது தற்போதைய சந்தை விலையான ரூ. 99 ஐ 8 மடங்கு தள்ளுபடி செய்கிறது. அடுத்த சில வருடங்களில் நிறுவனம் ஈபிஎஸ் வரம்பை 10 முதல் 15 சதவிகிதத்திற்கு தொடர்ந்து அதிகரித்து வந்தால், பங்குகளில் அதிக விலை இலக்குகளை நாம் காணலாம்.

ஏற்கனவே இந்த நிறுவனத்தின் பங்குகள் உயர்ந்த நிலையான ரூ. 208 லிருந்து தற்போதைய சந்தை விலையான ரூ. 99 க்கு வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால் இனிவரும் நாட்களில் இதன் பங்குகள் பாராட்டுதல்களைப் பெற வாய்ப்பிருக்கிறது. ஆனால் சுமார் 3 வருட கால வரையறைக்குள் ஒரு பங்கு என்பது மிகவும் குறைவு.

 

ஃபோர்ஸ் மோட்டார்ஸ்

ஃபோர்ஸ் மோட்டார்ஸ்

ஃபோர்ஸ் மோட்டார்ஸ் பிரபலமான ‘டெம்போ டிராவலர்ஸ்' பேருந்து அணிவரிசைத் தயாரிப்பாளர்கள் ஆவர். மேலும் மெர்சிடிஸ் மற்றும் பி.எம்.டபிள்யூ நிறுவனங்களுக்கான ஆற்றல் மின்கல உபகரணங்களை வழங்கும் ஒரே நிறுவனமாகும்.
ஃபோர்ஸ் மோட்டார்ஸ் 2017-18 ஆம் நிதியாண்டைப் பெரிய குறிப்புடன் தொடங்கவில்லை.

சரக்கு மற்றும் சேவை வரிகளை அமல்படுத்தியதன் காரணமாக விற்பனையாளர்களால் மேற்கொள்ளப்பட்ட சரக்கை திருப்பியளித்ததால் இது அதிகரித்தது.
இருந்தாலும், வரவிருக்கும் காலாண்டுகளில் ஃபோர்ஸ் மோட்டார்ஸ் க்கு சாதகமாக சில விஷயங்கள் நடக்கும்.
முதலாவதாக, ஜிஎஸ்டி யை தொடர்ந்து விலைகளில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதால் மெர்சிடிஸ் பிஎம்டபள்யூ போன்ற நிறுவனங்களின் ஆடம்பர கார் பிரிவு நன்கு வளர்ச்சி அடையும். எல்.சி.வி பிரிவில் புதிய மாறுபட்ட தொழிலில் ஃபோர் மோட்டார்ஸ் நன்கு செயல்படும் என்று தெரிகிறது. எனவே ஏற்கனவே இந்நிறுவனம் அதில் தன் நிதிகளை முதலீடு செய்துள்ளது.

 

அடிப்படையில் வலுவானது

அடிப்படையில் வலுவானது

இந்நிறுவனம் ஒரு மிக சிறிய பங்கு மூலதனத்தைக் கொண்டிருக்கிறது மேலும் இலாபங்களில் எந்த சிறிய லாபங்களும் ஈபிஎஸ் அதிகரிக்க வழிவகுக்கும். இந்நிறுவனம் 2018 -19 நிதியாண்டில் குறைந்தபட்சம் ரூ. 240 க்கு ஈபிஎஸ் ஐ அறிவிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். நீங்கள் 20 முறை ஒரு பங்குக்கான லாபத்தைச் சேர்த்தால் பங்குகள் குறைந்தபட்சம் ரூ. 4800 முதல் ரூ. 5000 வரை விற்கப்படலாம். ரூ. 3764 விலையில் இந்தப் பங்குகள் இன்னமும் விலையேற்றத்திற்கான மறைமுகத் திறனைக் கொண்டுள்ளது.

இருந்தாலும் முதலீட்டாளர்களுக்கு முதலீடு செய்வதற்கு முன் சிறிதளவு பொறுமை வேண்டும். மற்றவற்றை விட வாங்குவதற்குச் சிறந்த ஸ்மால் கேப் பங்குகளாக இருந்த போதிலும், இது பிஎஸ்ஈ இல் மட்டுமே பட்டியலிடப்பட்டுள்ளது.

 

பொறுப்பு துறப்பு

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரை நிதிப் பத்திரங்கள் அல்லது இதர நிதித் திட்டங்களை வாங்கவோ விற்கவோ தூண்டுவதற்காக வெளியிடப்பட்டதல்ல. கிரேனியம் தகவல் தொழில்நுட்ப தனியார் கட்டுப்பாட்டு நிறுவனம், அதன் துணை நிறுவனங்கள், கூட்டாளிகள் மற்றும் இக்கட்டுரையின் எழுத்தாளர் போன்ற எவரும் இந்தக் கட்டுரையை அடிப்படையாகக் கொண்டு இழப்புகள் மற்றும்/அல்லது பாதிப்புகள் ஏற்பட்டால் அந்தக் குற்றச்சாட்டை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+