டெர்ம் இன்சூரன்ஸ் பாலிசியை ஆன்லைன் மூலம் எப்படி வாங்குவது?

டெர்ம் பாலிசி என்பது ஒரு தூய ஆயுள் காப்பீட்டுக் திட்டம் ஆகும். மேலும் இதை நீங்கள் ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் ஆகிய இரண்டு தளங்களிலும் வாங்கலாம். ஆஃப்லைன் தளத்தில் இந்தக் காப்பீடு திட்டத்தை வாங்க ஒரு முகவர் அல்லது தரகரின் சேவை உங்களுக்குத் தேவைப்படும்.

ஆன்லைனில் இதை எவ்வாறு மிக எளிதாக வாங்குவது என்பதை உங்களுக்கு மிக எளிதாக விளக்கும் செயல்முறை விளக்கம் இங்குக் கொடுக்கப்பட்டுள்ளது.

வலைத்தளத்தைப் பார்வையிடுதல்

வலைத்தளத்தைப் பார்வையிடுதல்

காப்பீட்டு நிறுவனத்தின் வலைத்தளம் அல்லது ஒரு ஆயுள் காப்பீட்டு திட்டங்களின் ஒருங்கிணைப்பாளரின் வலைத்தளம் மூலம் ஒரு ஆன்லைன் டெர்ம் ப்ளானை வாங்க முடியும். காப்பீடு திட்டங்களின் ஒருங்கிணைந்த வலைத்தளம், வாடிக்கையாளருக்கான விதிமுறைகள், நன்மைகள், ரைடர்ஸ் மற்றும் பல்வேறு காப்பீட்டாளர்களின் பிரீமியம் ஆகியவற்றை ஒப்பிடுவதற்கு அனுமதிக்கும்.

அடிப்படை விவரங்கள்

அடிப்படை விவரங்கள்

வாடிக்கையாளர் பெயர், பிறந்த தேதி, புகைபிடித்தல் பழக்கம், தொடர்பு விவரங்கள், நீங்கள் எதிர்பார்ர்கும் ஆயுள் காப்பீடு தொகை மற்றும் உங்களின் அடிப்படை வருவாய் போன்ற அடிப்படை விவரங்களை வலைத்தளத்தில் பூர்த்திச் செய்ய வேண்டும். இந்த அடிப்படை விபரங்கள் சேகரிக்கப்பட்ட பின்னர், உங்களுக்கான காப்பீடு திட்டங்களின், அம்சங்கள், சலுகைகள் மற்றும் பிரீமியம் ஆகியவற்றுடன் உங்களுக்குப் பொருத்தமான டேர்ம் ப்ளான் காட்டப்படும். அனைத்து பாலிசியின் அம்சங்களையும் பார்வையிட்ட பின்னர், ஒரு வாடிக்கையாளர் தனக்கு விருப்பமான திட்டத்தை வலைத்தளத்தில் க்ளிக் செய்வதன் மூலம் பரிந்துரைக்கலாம்.

பிரீமியம் செலுத்துதல்

பிரீமியம் செலுத்துதல்

தனக்கு விருப்பமான திட்டத்தைத் தேர்ந்தெடுத்த பின்னர், வாடிக்கையாளர் அந்தத் திட்டத்திற்கான ப்ரீமியத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். கட்டண முறை வாடிக்கையாளர் தேர்ந்தெடுத்த கால இடைவேளிப்படி இருக்கும். கட்டணத்தை வெற்றிகரமாகச் செலுத்திய பின்னர், வாடிக்கையாளரின் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு உறுதிப்படுத்தும் தகவல் அனுப்பப்படும்.

முன்மொழிவு படிவம்

முன்மொழிவு படிவம்

பிரீமியம் செலுத்தப்பட்டவுடன், வாடிக்கையாளர் ஒரு விரிவான ஆயுள் காப்பீட்டு திட்டத்திற்கான முன்மொழிவு படிவத்தை நிரப்ப வேண்டும். தனிப்பட்ட விவரங்கள், சுகாதார விவரங்கள், வாடிக்கையாளரின் வசம் இருக்கும் காப்பீடு தொகை போன்ற அடிப்படைத் தகவல்களை அந்தப் படிவத்தில் நிரப்ப வேண்டும்.

தேவையான ஆவணங்கள்

தேவையான ஆவணங்கள்

முன் மொழிவு படிவத்தை நிரப்பிய பின்னர், வாடிக்கையாளரின் அடையாள அட்டை, முகவரி ஆதாரம் மற்றும் சுகாதாரத் தொடர்பான ஆவணங்கள் மற்றும் அறிக்கைகள் போன்றவற்றைப் பதிவேற்ற வேண்டும். பதிவேற்றப்பட வேண்டிய ஆவணங்களின் பட்டியல் படிவத்தைப் பூர்த்திசெய்யும் பொழுது வாடிக்கையாளருக்குத் தெரிவிக்கப்படுகிறது.

மருத்துவப் பரிசோதனை

மருத்துவப் பரிசோதனை

காப்பீடு நிறுவனத்தால் கட்டாயப்படுத்தப்பட்டால், வாடிக்கையாளர் அந்த நிறுவனத்தினால் பரிந்துரைக்கப்பட்ட மருத்துவ மையத்தில் ஒரு மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அந்த மருத்துவ மையம் நேரடியாகக் காப்பீட்டு நிறுவனத்திடம் மருத்துவ அறிக்கையை அனுப்பிவிடும்.

காப்பீடு பத்திரம்

காப்பீடு பத்திரம்

வாடிக்கையாளரின் முன்மொழிவு வடிவம் மற்றும் மருத்துவ அறிக்கை சரிபார்ப்பின் பின்னர்க் காப்பீட்டு நிறுவனம் ஆயுள் காப்பீட்டுப் பத்திரத்தை வெளியிடலாமா அல்லது இல்லையா என்பதைத் தீர்மானிக்கும். காப்பீடு திட்டம் வழங்க ஒப்புக் கொள்ளப்பட்டால், காப்பீட்டை உறுதிப்படுத்தும் மற்றும் கொள்கை ஆவணங்கள் வாடிக்கையாளருக்கு அனுப்பப்படும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+