சிக்கல் இல்லாமல் ஆயுள் காப்பீட்டு திட்டத்தில் உள்ள பணத்திற்கு உரிமைகோருவது எப்படி?

ஒருவர் தனக்கு ஆயுள் காப்பீடு செய்திருக்கின்றார் எனில், அவர் தன்னுடைய குடும்பம் தன்னுடைய காலத்திற்குப் பின்னரும் கஷ்டப்படக்கூடாது என நினைக்கின்றார். அவ்வாறு அதிக அக்கறையுடன் திகழும் அந்த நபர், தான் எடுத்த காப்பீடுப் பணம் எந்த வித சிக்கலும் இல்லாமல் தன்னுடைய அன்பிற்குரியவர்களுக்குப் போய்ச் சேர வேண்டும் என்பதிலும் சிறிது கவனத்துடன் இருக்க வேண்டும்.

காப்பீடு திட்டங்களின் முன்மொழிவுப் படிவங்களில் தெரிவிக்கப்பட்ட விபரங்களில் ஏதேனும் பிழை இருப்பின், அந்தக் காப்பீட்டின் பலன் அதற்கு உரிய நபருக்குக் கிடைப்பதில் ஏகப்பட்ட சிக்கல்கள் தோன்றலாம். காப்பீட்டின் பலனை மிகவும் எளிதாகப் பெறுவதற்குக் காப்பீடு திட்டங்களின் முன்மொழிவுப் பத்திரங்களில் நீங்கள் தெரிவிக்கும் விபரங்களில் சிறிது கவனத்துடன் இருப்பது மிகவும் முக்கியம்.

ஆயுள் காப்பீட்டு திட்டங்களின் பலா பலன்களை உங்களின் அன்பிற்குரிவர்கள் மிகவும் எளிதாகப் பெறுவதற்கு, உங்களுக்கு உதவும் நோக்கில் நாங்கள் சில முக்கியக் குறிப்புகளைக் கொடுத்துள்ளோம். இவற்றைக் கவனத்துடன் படித்து மனதில் நிலை நிறுத்திக் கொள்ளுங்கள்.

முன்மொழிவு படிவம்

முன்மொழிவு படிவம்

உங்களுடைய முகவரைப் படிவத்தைப் பூர்த்திச் செய்ய அனுமதிக்க வேண்டாம். இவ்வாறு செய்வதன் காரணமாக, உங்களுடைய காப்பீடு திட்டத்தின் முழு விபரங்கள் உங்களுக்குத் தெரிவதுடன், காப்பீடு திட்டத்தை வாங்கிய பின்னர் உங்களுக்கு ஏற்படும் எதிர்பாராத அதிர்ச்சிகளைகயும் நீங்கள் தவிர்க்கலாம். எனவே, உங்கள் காப்பீடு திட்டத்தின் முன்மொழிவு படிவத்தைக் கண்டிப்பாக நீங்கள் மட்டுமே நிரப்ப வேண்டும். இவ்வாறு செய்வதால் உங்களுடைய காப்பீடு திட்டத்தின் கொள்கை விவரங்களை நீங்கள் முழுவதும் அறிந்து கொள்ள முடியும். மேலும் இது, நீங்கள் உங்களுடைய பாலிசி ஆவணங்களைக் பெறும் பொழுது அதைச் சரிபார்க்கவும் உங்களுக்கு உதவும். காப்பீடு திட்டங்களின் ஆவணங்களில் ஏதேனும் பிழை இருப்பின் அதைப் பெற்ற 15 நாட்களுக்குப் பின் பாலிசியை இரத்து செய்யும் உரிமை உங்களுக்கு இல்லை. இந்த 15 நாட்கள் இலவச-தோற்ற காலம் என அழைக்கப்படுகிறது.

சரியான ஆவணங்கள்

சரியான ஆவணங்கள்

காப்பீட்டுப் பத்திரங்களில் உள்ள ஒழுங்கற்ற தன்மை, உங்களுடைய இழப்பீட்டுத் தொகையின் மீதான உங்களுடைய உரிமையைத் தொந்தரவு செய்யலாம். எனவே, நீங்கள் சரியான வயது நிரூபணச் சான்று மற்றும் மருத்துவ விவரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். நீங்கள் தவறான ஆவணங்களைச் சமர்ப்பித்திருந்தால், உங்களுடைய காப்பீட்டுத் தொகையானது, நீங்கள் உரிமை கோரும் நேரத்தில் மறுக்கப்படலாம்.

வெளிப்பாடுகள்

வெளிப்பாடுகள்

ஆபத்துத் தேதியிலிருந்து மூன்று ஆண்டுகளுக்குள் அல்லது அதனுடைய புதுப்பிக்கும் தேதிக்குள் உங்களுடைய க்ளெயம் வந்தால், காப்பீட்டு நிறுவனங்கள் உங்களுடைய காப்பீட்டு கோரலை பொதுவாக முந்திய இறப்புக் கோரிக்கையாக வகைப்படுத்தி விடும். இத்தகைய சந்தர்ப்பங்களில் காப்பீட்டு நிறுவனங்கள் ஒரு விரிவான விசாரணையை முன்னெடுக்கின்றன. 3 ஆண்டுகளுக்குள் செய்யப்பட்ட உரிமைகோரல்கள், வெளிப்பாடு மற்றும் தவறான விளக்கத்தின் அடிப்படையில் நிராகரிக்கப்படலாம். அல்லது கூடுதல் ஆவணங்கள் கோரப்பட்டு உங்களுடைய க்ளெய்ம் நீங்கள் காப்பீடு செய்த நேரத்தில் உண்மைகளை மறைக்கவில்லை என்பதை உறுதிப்படுத்தலாம். எனவே, ஏற்கனவே உள்ள மருத்துவ நிலைமைகள் அல்லது நீங்கள் வைத்திருக்கும் மற்ற ஆயுள் காப்பீட்டுக் கொள்கைகள் போன்ற எந்தவொரு தகவலையும் மறைக்காதீர்கள். ஏற்கனவே உள்ள நோய்களைப் பற்றி மட்டுமல்ல, உங்களுடைய புகையிலை மற்றும் மதுபானம் நுகர்வு அளவைப் பற்றியும் நீங்கள் உண்மையாக இருக்க வேண்டும்.

சீராகப் பிரீமியம் செலுத்தவும்

சீராகப் பிரீமியம் செலுத்தவும்

உங்களுடைய காப்பீடு திட்டம் நடைமுறையில் இருப்பதற்கு, நீங்கள் தொடர்ந்து உங்களுடைய ப்ரீமியக் கட்டணத்தைச் செலுத்துவது மிகவும் முக்கியம். ஒரு பாலிசிதாரர் பிரீமியத்தைச் செலுத்தாமல் இருந்து, பாலிசி காலாவதியாகி விட்டிருந்தால், காப்பீட்டு நிறுவனத்திற்கு உங்களுடைய முழுக் காப்பீட்டு தொகையையும் செலுத்த வேண்டிய கட்டாயம் கிடையாது. எனினும், இத்தகைய காலாவதியான காப்பீடு திட்டத்திற்குப் பிரீமியம் செலுத்தி உயிரூட்டலாம்(பாரம்பரிய திட்டங்களின் விஷயத்தில்).

வாரிசுதாரரை நியமிக்கவும்

வாரிசுதாரரை நியமிக்கவும்

வாரிசுதாரரின் விவரங்களை நிரப்ப வேண்டிய கட்டாயமில்லை. எனினும் வாரிசுதாரர்களின் விபரங்கள் நிரப்பப்பட்டால், அது உங்களைப் பல்வேறு பிரச்சனைகளில் இருந்து காப்பாற்றும். எடுத்துக்காட்டாகக் காப்பீட்டு நிறுவனங்கள், நீங்கள் வாரிசு விபரங்களைத் தெரிவிக்கவில்லை எனில் உங்களிடம் பரிந்துரை சான்றை பெற்றுக் கொள்ளும். ஒரு வாரிசு சான்றிதழை பெறுவதற்கான செயல்முறை மிகவும் சிக்கலானது மற்றும் அதிக நேரத்தை நேரத்தை எடுத்துக் கொள்ளும். மேலும், காப்பீடு ஆவணங்களை நாம் எங்கு வைத்திருக்கின்றோம் என்பதைப் பற்றிய விபரங்களை வாரிசுகளிடம் தெரிவிப்பது மிகவும் முக்கியம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+