உங்கள் எல்ஐசி பாலிசிக்கு எதிராக இணையதளம் மூலம் கடன் பெறுவது எப்படி?

Written By: Tamilarasu
Subscribe to GoodReturns Tamil

இது வரை, உங்கள் எல்ஐசி பாலிசியிலிருந்து உங்களுக்குக் கடன் தேவைப்பட்ட போதெல்லாம் நீங்கள் சேவை கிளைக்கு வருகை தந்து விண்ணப்பிக்க வேண்டியிருந்தது. இருப்பினும், எல்ஐசி இப்போது எல்ஐசி பாலிசிக்கு எதிராகக் கடனுக்கு விண்ணப்பிப்பதற்கு ஆன்லைன் செயலாக்கத்தைத் தொடங்கியுள்ளது.

பாலிசிக்கு சொந்தமான நபர் ஒரே இருப்பிடத்தில் தங்காதவராக இருந்தால் இது அவருக்கு மிகத் தொந்தரவான ஒரு செயல்முறை ஆகும். சமீபத்தில் எல்ஐசி ஆன்லைனிலேயே பாலிசிக்கு எதிராகக் கடனுக்கு விண்ணப்பிக்கவும் மற்றும் கடன் பெறவும் வசதிகளைத் துவங்கியுள்ளது. இதைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கு முன்னால், எல்ஐசி திட்டங்களின் கடன் அம்சங்களைப் பற்றி பார்க்கலாம் வாருங்கள்.

எவ்வளவு கடன் பெற முடியும்?

பாலிசியின் கீழ் கிடைக்கும் கடன் தொகை பாலிசியின் சரண்டர் மதிப்பில் 90% ஆகும். (வருவாய் செலுத்தப்பட்ட பாலிசிகளாக இருந்தால் 85%) இதில் போனஸின் பண மதிப்பும் அடங்கும்.

கடனுக்கு தகுதி உடைய பாலிசிகள் எது?

அனைத்து பாலிசிகளும் கடனுக்குத் தகுதியுடையவை அல்ல (நீண்ட கால காப்பீடுகள் போன்றவை) எனவே, நீங்கள் அதன் தகுதியை பரிசோதிக்க வேண்டும். (வழக்கமாக பாலிசி பத்திரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும்). அரையாண்டுக்கு ஒரு முறை கடன் மீது வட்டி செலுத்தப்படுகிறது.

கடனைத் திருப்பி செலுத்தக் கால அளவு எவ்வளவு?

கடனை வழங்குவதற்கான குறைந்தபட்ச காலம் அது செலுத்தப்பட்ட தேதியிலிருந்து 6 மாதங்கள் ஆகும். இந்த கால கட்டத்திற்குள் கடனை திருப்பிச் செலுத்த விரும்பினால் குறைந்தபட்ச காலமான ஆறு மாதத்திற்கான வட்டி செலுத்தப்பட வேண்டும்.

கடன் பெற்ற பிறகு இறந்துவிட்டால் என்ன ஆகும்?

கடன் வழங்கப்பட்டத் தேதியிலிருந்து ஆறு மாதக் காலத்திற்குள் முதிர்வு அல்லது பாலிசிதாரரின் மரணம் காரணமாக பாலிசி தாக்கல் செய்யப்பட்டால் கடன் வழங்கப்பட்ட தேதியிலிருந்து முதிர்வு/மரணம் அடைந்த தேதி வரை மட்டுமே வட்டி விதிக்கப்படும்.

கடன் செலுத்துவதற்கான முறைகள்

நீங்கள் கடனை வட்டியுடன் செலுத்தலாம், அல்லது தொடர்ந்து வட்டியை மட்டுமே செலுத்தலாம் மேலும் கடன் அசலை இறுதியில் தாக்கல் செய்யும் பணம் கிடைக்கும் போது அதிலிருந்து கழித்துக் கொள்வதற்கு அனுமதிக்கலாம்.

எத்தனை ஆண்டுகள் வரை பிரீமியம் செலுத்தினால் கடன் கிடைக்கும்?

கடன் கிடைக்கப் பெறுவதற்கு நீங்கள் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் ப்ரீமியம் செலுத்த வேண்டும்.

பத்திரத்தினை அடைமானம் வைக்க வேண்டுமா?

நீங்கள் பாலிசியை எல்ஐசி யிடம் பாதுகாப்பு பத்திரமாக ஒதுக்க வேண்டும் மேலும் அவர்கள் அசல் பத்திரத்தை அவர்களிடம் வைத்திருப்பார்கள்.

தவணைத் தேதியிலிருந்து 30 நாட்களுக்குள் வட்டி செலுத்தவில்லை என்றால் என்ன ஆகும்?

தவணைத் தேதியிலிருந்து 30 நாட்களுக்குள் வட்டித் தொகை செலுத்தப்படவில்லை எனில் எல்ஐசி க்கு பாலிசிக்கு முற்றுப்புள்ளி வைத்து நடைமுறைக்கு எதிராகக் கடன் தொகையைத் தீர்த்து வைக்கும் உரிமையுள்ளது. இருந்தாலும் இப்படி முன்கூட்டி பாலிசியை மூடுதல், முழுமையாக பணம் செலுத்தப்பட்ட அல்லது நடைமுறையில் உள்ள பாலிசிக்கு பொருந்தாது.

வட்டி பணம் எப்போது செலுத்த வேண்டும்?

அடுத்த பாலிசி ஆண்டு நிறைவு அல்லது அடுத்த பாலிசி ஆண்டுக்கு 6 மாதங்களுக்கு முந்தைய தேதியில், இதில் எது முதலில் வருகிறதோ அந்தத் தேதியில் முதல் வட்டிப் பணம் செலுத்தப்பட வேண்டும். அதன் பிறகு, ஒவ்வொரு அரையாண்டுக்கு ஒருமுறை நீங்கள் வட்டி செலுத்த வேண்டும்.

இரண்டு கடன் பெற முடியுமா?

முதல் கடன் தொகை திருப்பிச்ச செலுத்தப்படாத போதே நீங்கள் அதே பாலிசிக்கு எதிராக இரண்டாவது கடனைப் பெறலாம். இருப்பினும், ஒருங்கிணைந்த தொகைக்கு மூலதனத்தின் சரண்டர் மதிப்பில் 90 % பொருந்தும்.

எல்ஐசி பாலிசுக்கு எதிராக வங்கிகளில் கடன் பெற முடியுமா?

நீங்கள் எல்ஐசி பாலிசிக்கு எதிராக இதர வங்கி நிறுவனங்களிலிருந்தும் கடனைப் பெறலாம் (வங்கி போன்றவற்றில்). இருப்பினும், கிடைக்கும் கடனின் அளவு குறைவாக இருக்கலாம் மேலும், அவர்கள் எல்ஐசி யை விட அதிக வட்டி விகிதத்தை விதிக்கலாம்.

எல்ஐசி பாலிசிக்கு எதிராகக் கடன் – ஆன்லைனில் விண்ணப்பித்துப் பெறுவது எப்படி?

நான் ஏற்கனவே மேலே குறிப்பிட்டது போல எல்ஐசி சமீபத்தில் எல்ஐசி பாலிக்கு எதிராகக் கடன் பெறும் வசதியை ஆன்லைனில் தொடங்கியுள்ளது. இத்துடன் நீங்கள் ஆன்லைன் தளத்தைப் பணன்படுத்தி வட்டியை அல்லது கடனின் அசல் பகுதியைத் திருப்பிச் செலுத்தலாம்.
அதற்கான படிநிலைகள் பின்வருமாறு:

முகப்பு பக்கம்

எல்ஐசி முகப்புப் பக்கத்திற்கு வருகை தாருங்கள். ஆன்லைன் சேவைகள் என்ற தலைப்பின் கீழ் கிடைக்கப்பெறும் ஆன்லைன் கடன் என்கிற பொத்தானை சொடக்குங்கள். இங்கே உங்களுக்கு இரண்டு தேர்வுகள் கிடைக்கும். ஒன்று வட்டியை அல்லது அசலை ஆன்லைனில் திருப்பிச் செலுத்துவதற்கானது (இரண்டும் பதிவு செய்து அல்லது பதிவு இல்லாமல்) மற்றொன்று உங்கள் உள்நுழை வசதியைப் பயன்படுத்தி கடனுக்கு விண்ணப்பித்தல்.

கடன் யார்க்கு கிடைக்கும்?

நான் ஏற்கனவே மேலே கூறியது போல ஆன்லைனில் கடனுக்கு விண்ணப்பிப்பதற்கு நீங்கள் எல்ஐசி யின் வாடிக்கையாளராக இருக்க வேண்டும். இருப்பினும், வட்டியையோ அல்லது அசலையோ உள்நுழைந்து அல்லது உள்நுழையாமல் திருப்பிச் செலுத்திக் கொள்ளலாம்.

வங்கி விவரங்கள்

மேலும், என்னுடைய பார்வையில், ஆன்லைனில் கடன் வசதியைப் பெறுவதற்கு உங்கள் வங்கி விவரங்களை புதுப்பித்து வைத்திருக்க வேண்டும். அப்படி நீங்கள் புதுப்பித்து வைத்திருந்தால், கடன் தொகை நேரடியாக உங்கள் வங்கி வைப்புக் கணக்கில் வைக்கப்படும்.

எல்ஐசி பாலிசிக்கு எதிராகக் கடன் பெறுவதில் உள்ள அனுகூலங்கள்

# அவசர காலங்களில் விரைவாக அணுகலாம்.
# தற்போது இந்த ஆன்லைன் கடன் வசதி மூலம் முன்பு முகப்பு கிளைகளுக்கு நேரடியாகச் சென்று செய்த நடைமுறைகளை விட எளிமையாக்கப்பட்டுள்ளது என்று நான் நினைக்கிறேன்.
# உங்கள் தனிப்பட்டக் கடன் வட்டி விகிதத்தை விடவும் இதற்கு வட்டி விகிதம் மிகக் குறைவு.
# வட்டித் தவணைகளை மட்டும் திருப்பிச் செலுத்துதல், அசலை முதிர்வு காலத்திற்கு முன் எந்தக் காலகட்டத்தில் வேண்டுமானாலும் திருப்பிச் செலுத்தலாம் என்பது போன்ற தளர்த்தப்பட்ட விதிமுறைகள். இத்தகையைத் தளர்த்துதல் தனிப்பட்டக் கடனில் இல்லை.
# இதில் நீங்கள் பாலிசி ஆவணத்தை மட்டுமே சான்றாதாரமாக அடகு வைக்கிறீர்கள். ஆனால், மற்ற கடன்களில், கடன் தகுதி உங்கள் கடன் மதிப்பீட்டைப் பொறுத்துள்ளது மேலும் நீங்கள் சொத்துக்களை அடைமானம் வைக்கிறீர்கள்.

எல்ஐசி பாலிக்கு எதிராகக் கடன் பெறுவதில் உள்ள பாதகங்கள்

# உங்களுக்கு உண்மையில் அதிகக் கடன் தேவைப்படும் போது இதில் சரண்டர் மதிப்பிற்குள்ளாக வரையறுக்கப்பட்ட தொகை இந்தக் கடன் மதிப்பு குறைவானதாக ஆக்குகிறது. ஏனென்றால் நான் மேற்கூறியது போல கடனின் அளவு சரண்டர் தொகையின் மதிப்பைப் பொறுத்து அமைகிறது. இந்த சரண்டர் தொகையின் மதிப்பு பொதுவாக பாலிசி காலத்தின் தொடக்க ஆண்டுகளில் மிகக் குறைவாக இருக்கும். பாலிசி முடிவடையும் சமயம் வரும்போது சரண்டர் தொகை மதிப்பு அதிகரிக்கிறது, அதே போல உங்கள் கடன் பெறும் தகுதியும் அதிகரிக்கிறது.
# அசல் அல்லது வட்டியை திருப்பிச் செலுத்தும் போது வரிப்பயன்கள் இல்லை.
# ஒருவேளை நீங்கள் அகால மரணமடைந்தால், இறுதியில் நீங்கள் குறைவான காப்புறுதித் தொகையைப் பெறுவீர்கள். ஏனென்றால், கடன் நிலுவையில் இருக்கும் போது காப்பீட்டுதாரர் இறந்து விட்டால், தற்போதுள்ள கடனின் அசல் மற்றும் வட்டியை விட குறைவான ஆயுள் காப்பீட்டுத் திட்டப் பயன்களை நியமனப்பட்டவர் பெறுவார்.

நிறைவுரை

குறைவான காப்பீட்டுக் காப்புறுதி மற்றும் நீண்ட கால வரைமுறையில் குறைவான வருவாயைக் கொண்டுள்ளதால், நான் எல்ஐசி யின் மரபான திட்டங்களுக்கு ரசிகன் அல்ல. இருப்பினும், எல்ஐசி பாலிசிக்கு எதிரான கடன் என்கிற அம்சம் நெருக்கடி நிலைகளில் உள்ளவர்களுக்குக் கைக்கொடுக்கும். மேலும், தனிப்பட்டக் கடன் என்கிற தேர்விற்கு செல்வதை விட, எல்ஐசி பாலிக்கு எதிராகக் கடன் வாங்கும் திட்டத்தைத் தேர்ந்தெடுப்பது சிறந்ததாகும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

How to get a loan through the online under your LIC policy?

How to get a loan through the online under your LIC policy?
Story first published: Tuesday, October 10, 2017, 12:02 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns