பிக்சட் டெபாசிட் கணக்கை, டெபட் மியூச்சுவல் ஃபண்டு திட்டத்திற்கு எப்படி மாற்றுவது?

Written By: Tamilarasu
Subscribe to GoodReturns Tamil

கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்டு திட்டம் என்பது அபாயத்திற்குட்பட்டதானாலும், வரிச் சலுகைகளுடன் கூடிய நீண்ட கால லாபத்தினைத் தரவல்லது.

நிலையான வைப்புநிதிகளிலிருந்து கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்டு திட்டத்திற்கு மாறுவதற்கு முன்னர் நீங்கள் மனதில் கொள்ள வேண்டிய சில முக்கியத் தகவல்கள் இங்கே தரப்பட்டுள்ளன.

வட்டி குறைவு

2013 ஆம் ஆண்டில் 9% ஆக இருந்த நிலையான வைப்புநிதி ஆண்டு வட்டிவீதம் தற்போது 6.5% ஆகக் குறைந்துள்ளது. நீங்கள் 30% வரிக்கட்டும் அடைப்புக்குள் வருபவரானால் இந்த வட்டிவிகித குறைப்பு உங்களுக்கு வலி தரும் ஒன்றாக இருக்கலாம். ஏனென்றால் உங்களுக்கான பிடித்தம் எல்லாம் போக 4.55% ஆண்டு வட்டிவிகிதமே உங்கள் நிலையான வைப்புநிதிக்கு கிடைக்கக்கூடும்.

பணவீக்கம்

ஆகஸ்ட் 2017 ஆண்டில் சில்லறை பணவீக்கமானது 3.36% அளவின் நெருக்கமாக இருந்தது. பணவீக்கத்தில் ஏற்படும் சிறு மாறுதலானது நிலையான வைப்புநிதியில் எதிர்மறையான வரவையே தரும். குறைந்த வட்டிவிகித நிலையான வைப்புநிதியில் தொடர்வது முதலீட்டாளர்களுக்குக் கடினமான சூழ்நிலையாகும். ஆதலால் கடன் சார்ந்த பரஸ்பர நிதி போன்ற வேறு தளங்களை நாடத் தொடங்கிவிட்டனர்.

அபாயம்

கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்டு திட்டம் என்பது நிலையான வைப்புநிதியைக் காட்டிலும் அபாயகரமானது. அதே நேரம், நீண்டகால அளவில் சிறந்த வரவைத் தரும் வல்லமையுடையது.

நிலையான வைப்புநிதிகளிலிருந்து கடன் சார்ந்த பரஸ்பர நிதிகளுக்கு மாறுவதற்கு முன்னர் நீங்கள் மனதில் கொள்ள வேண்டிய சில முக்கியத் தகவல்களை இனி காண்போம்.

 

முதலீட்டு காலவரையைத் தீர்மானியுங்கள்

நீங்கள் நிலையான வைப்புநிதியிலிருந்து கடன் சார்ந்த பரஸ்பர நிதிக்கு மாறுவதற்கான மதிப்பீடு செய்யத் தொடங்குவீர்களேயானால் உங்கள் பணத்தை முதலீடு செய்ய முன்னுரிமை திட்டமாகக் கடன் பரஸ்பரநிதி திட்டம் இருக்க வேண்டும். இவை சமபங்கு மற்றும் தங்க பரஸ்பரநிதியை காட்டிலும் சிறந்தது.

வரியும், லாமபும்


3 வருட காலத்திற்குள் மீட்கப்பட்ட கடன் நீதியானது குறுகியகால முதலீடாகக் கருதப்பட்டு மூலதன ஆதாயத்திற்கு முதலீட்டாளரின் வரிக்கோட்டின்படி வரி கணக்கிடப்படும். 3 வருட காலத்திற்கு மேற்பட்ட கடன் நிதியானது நீண்டகால முதலீடாகக் கருதப்பட்டு, மூலதன ஆதாயத்திற்கு 20% வரி விதிக்கப்படும். (குறியீட்டு நன்மையுடன் சேர்த்து). நீங்கள் 3 வருடங்களுக்கு மேலான முதலீடு செய்தீர்கள் என்றால், கடன் நிதியானது நிலையான வைப்புநிதியை விட வரிச் சலுகைக் கொண்டது. மேலும் குறியீட்டு நன்மையுடன் பணவீக்க விகிதம் கணக்கிடப்படுவதால் குறைந்த வரிவிகிதமே விதிக்கப்படுகிறது. குறுகிய காலமேயானாலும், அதாவது 3 வருடங்களுக்குள்ளும் கடன் நிதி சிறந்த வரவைத் தரவல்லது.

முதலீட்டுக் கால அளவு

உங்கள் பொருளாதாரத் திட்டமிடலுக்கு ஏற்ப முதலீட்டு கால அளவைத் தீர்மானிக்கலாம். மேலும் குறுகிய மற்றும் நீண்டகால அளவாக முதலீட்டை இரண்டு அல்லது மூன்று வகையாகப் பிரித்துச் செய்யலாம். நிலையான வைப்புநிதி பகுதி மீட்பை அனுமதிப்பதில்லை. ஆனால் கடன் நிதி பகுதி மீட்பை அனுமதிப்பதோடு, மீட்கப்பட்ட அலகுகளுக்கு மட்டுமே வரி விதிக்கப்படுகிறது. நீங்கள் உங்கள் முதலீட்டை ஒற்றை நிதியாக வைத்துக்கொண்டு உங்கள் திட்டத்திற்கேற்ப விடுவித்துக்கொள்ளலாம்.

ஆனாலும் குறிப்பிட்ட காலத்திற்குள் மீட்கப்படும் கடன் நிதிக்கு வெளியேறும் தொகை விதிக்கப்படுகிறதா என்பதை உறுதி செய்துகொள்வது நல்லது.

 

நிதி வகைகள்

நீங்கள் தேர்வு செய்ய வேண்டிய கடன் நிதி வகைகள்
நிலையான வைப்பு நிதியிலிருந்து மாறும்போது சரியான கடன் நிதியைத் தேர்வு செய்வது முக்கியம். நீங்கள் 3 வருடங்களுக்குக் குறைவான முதலீடா அல்லது 3 வருடங்களுக்கு மேற்பட்ட முதலீடா என்பதைப் பொறுத்து கடன் நிதி வகையைத் தேர்வு செய்ய வேண்டும். சரியான கடன் நிதியில் முதலீடு செய்து, அந்நிதியிலிருந்து வருவாய் வரத்தொடங்கியவுடன், நீங்கள் முறையான திரும்பப்பெறுதல் திட்டத்தை (SWP) தேர்வு செய்யலாம். உதாரணத்திற்கு, நீங்கள் 3 வருடத்திற்குக் குறைவாக முதலீடு செய்தீர்கள் என வைத்துக்கொள்வோம் (2 வருடங்கள் என்க). நீங்கள் வருவாய் பெற மேலும் 6 மாதங்கள் காத்திருக்க வேண்டும். உங்கள் வருவாயைக் கணக்கிட்டவுடன் முறையான திரும்பப்பெறுதல் திட்டத்தில் (SWP) சேரலாம். உங்கள் நிதி 9% ஆண்டு வட்டிவிகித வருவாய்த் தருவதாக இருந்தால், நீங்கள் ஆண்டிற்கு 5%-6% தொகையைத் திரும்ப எடுத்துக்கொள்ளலாம். அதனால் உங்கள் நிதி வரி மற்றும் முறையான திரும்பப்பெறுதல் திட்டம் (SWP) போக வளரவே செய்யும்.

குறுகிய கால முதலீடு

குறுகிய கால முதலீட்டிற்கு, நீங்கள் குறுகிய காலக் கடன் நிதி அல்லது அல்ட்ரா குறுகிய காலக் கடன் நிதி வாய்ப்புகளை ஆய்வு செய்யலாம். மேலும் நீண்ட கால முதலீட்டிற்கு, நீங்கள் டைனமிக் கடன் நிதி மற்றும் நீண்ட காலக் கடன் நிதி வாய்ப்புகளை ஆய்வு செய்யலாம்.

கடன் சார்ந்த பரஸ்பர நிதியில் முதலீடு செய்வது எப்படி?

முறையான இடைவெளியில் தொடரும் நிலையான வைப்புநிதியில் முதலீடு செய்வது போலவே கடன் நிதியில் முறையான முதலீட்டு திட்டத்தின் (SIP) வாயிலாக முதலீடு செய்யலாம். உங்களது அனைத்து வைப்பு நிதி தொகையையும் கடன் நிதிக்கு மாற்ற விரும்பினால் நீங்கள் மொத்தத்தொகை முதலீட்டை தேர்வு செய்யலாம். நீங்கள் வைப்புநிதி முதலீட்டிலிருந்து வெளியேறும்போது, முன்பாக வெளியேற்றத்திற்கான அபராத தொகை அல்லது வட்டியில் ஏற்படும் நஷ்டம் ஆகியவற்றை ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

வரிப் பிடித்தம்

முக்கியமான விஷயம் என்னவென்றால், நீங்கள் கடன் நிதியிலிருந்து பெரும் வருவாயானது நீங்கள் வெளியேறாதவரை வரிப்பிடித்தம் செய்யப்படாது. ஆனால் நிலையான வைப்புநிதியில்,பெறப்படும் வட்டியானது மீண்டும் அதே வங்கியில் முதலீடு செய்யப்பட்டாலும் நீங்கள் வரிச் செலுத்தியாக வேண்டும். நீங்கள் சிறிய அளவிலான அபாயாகரமான முயற்சி எடுக்கத் துணிந்தால் நிலையான வைப்பு நிதியை விடக் கடன் நீதியானது அதிக அளவிலான வரி சலுகைகளையும், அதிக வருவாயை குறுகிய மற்றும் நீண்ட கால அளவில் தருகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

How To Switch From Fixed Deposits To Debt Mutual Funds

How To Switch From Fixed Deposits To Debt Mutual Funds
Story first published: Friday, October 20, 2017, 19:00 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns