ஈஎல்எஸ்எஸ் என்பது பங்குகளுடன் இணைக்கப்பட்ட சேமிப்புத் திட்டம் என்பதே அதன் விரிவாக்கம் ஆகும். இவை வரிகளை சேமிக்கும் பரஸ்பர நிதித் திட்டங்களாகும்.
இத்திட்டத்தில் நீங்கள் பிரிவு 80சி இன் கீழ் 1.5 இலட்சம் வரை வருமான வரியை சேமிக்கப் பயன்படுத்தலாம். ஈஎல்எஸ்எஸ் நிதிகளின் பூட்டுக்காலம் 3 வருடங்களாகும். மேலும் அதன் பெருமளவு நிதிகளை பங்குச்சந்தையில் முதலீடு செய்கின்றன.
ஈஎல்எஸ்எஸ் நிதிகளில் நான் எப்படி முதலீடு செய்வது?
நிதி நிறுவனத்தின் இணையதளத்தின் வழியே நீங்கள் ஈஎல்எஸ்எஸ் திட்டத்தில் முதலீடு செய்யலாம். முதலீடுகள் மிகப்பெரிய தொகைகளில் செய்யப்படலாம். ஆனால் பரிந்துரைக்கப்படும் வழி முறைப்படுத்தப்பட்ட முதலீட்டு திட்டங்கள் (சிப்) ஆகும். இது உங்களை முதலீட்டின் சராசரியை கணக்கிட அனுமதிக்கிறது மேலும் சந்தையின் உச்சநிலையைப் பிடிப்பதிலிருந்து உங்களைக் காக்கிறது.
ஒவ்வொரு சிப்பும் ஒரு புதிய முதலீடாகக் கருதப்படுகிறது மேலும் ஒவ்வொரு தனிப்பட்ட சிப்பும் 3 வருட பூட்டுக் காலத்தை சுமக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
சிறந்த வரி சேமிப்பு பரஸ்பர நிதிகள் யாவை?
சந்தையில் ஏராளமான ஈஎல்எஸ்எஸ் நிதிகள் இருக்கின்றன, ஆனால் நாங்கள் பரிந்துரைக்கும் சிறந்த செயல்திறன் கொண்ட நிதிகள், ஐசிஐசிஐ ஃப்ருடென்ஷியல் வரித் திட்டம், பிர்லா சன் ஆயுட்கால வரி நிவாரண 96 திட்டம் மற்றும் ஆக்சிஸ் நீண்ட கால சமபங்குத் திட்டம் ஆகியனவாகும்.
ஈஎல்எஸ்எஸ் திட்டங்கள் அபாயகரமானவையா?
ஈஎல்எஸ்எஸ் நிதிகள் வருமானத்திற்கு உத்தரவாதமளிக்காது ஏனென்றால், அவை பங்குச் சந்தை முதலீடுகளிலிருந்து வருவாயை ஈட்டுகின்றன.
இருப்பினும், சிறப்பாகச் செயல்படும் இந்த நிதிகள் பணவீக்கத்தை தாக்கும் வருவாயை நீண்டகால வரையறையில் உருவாக்கும் தனது திறனை வெளிப்படுத்தியுள்ளது. இதைப் போல நிலையான வருமான வரி சேமிப்பு முதலீடுகளான பிபிஎஃப் மற்றும் எஃப்டி போன்றவற்றால் செய்ய முடியாது.
ஈஎல்எஸ்எஸ் இன் முதலீட்டுக் கட்டுப்பாடு என்ன?
ஒரு ஈஎல்எஸ்எஸ் முதலீட்டைக் குறைந்தபட்சத் தொகையாக ரூ.500 ஐ கொண்டு தொடங்கலாம். நீங்கள் ஈஎல்எஸ்எஸ் நிதிகளில் எவ்வளவு முதலீடு செய்கிறீர்கள் என்பதற்கு மேல் வரம்பு இல்லை, ஆனால், அதிகபட்சத் தொகையாக வருடத்திற்கு ரூ. 1.5 இலட்சத்தின் மீது மட்டுமே வரி சேமிப்பை பெற முடியும்.
ஈஎல்எஸ்எஸ் நிதிகளின் வரிப்பயன்கள் என்ன?
ஈஎல்எஸ்எஸ் நிதிகளில் 1.5 இலட்சம் வரை செய்யப்படும் முதலீடுகளுக்கு ஒவ்வொரு வருடமும் பிரிவு 80 சி இன் கீழ் வரித் தள்ளுபடிகளை ஈட்டுகிறது. 3 வருட பூட்டுக்காலம் நிறைவடைந்த பிறகு முதலீட்டிலிருந்து உருவாக்கப்பட்ட வருவாயும் கூட முதலீட்டாளரின் கைகளை வந்தடையும் போது வரிகளற்றதாக வந்து சேரும்.
சிப் முதலீடுகளாக இருந்தால், முதலில் நுழைந்து முதலில் வெளியேறும் அடிப்படையில் மீட்டெடுப்புக்கள் செய்யப்படும். எனவே, ஒவ்வொரு தனிப்பட்ட சிப் திட்டமும் 3 வருட பூட்டு காலத்தைக் கொண்டிருக்கின்றன.
ஈஎல்எஸ்எஸ் முதலீட்டு காலம் என்றால் என்ன?
ஈஎல்எஸ்எஸ் நிதிகள் 3 வருட பூட்டு காலத்தைக் கொண்டிருக்கின்றன. ஆனால் நீங்கள் இதில் முதலீடு செய்துவிட்டு மேற்கொண்டு பங்களிப்புகள் செய்தோ அல்லது செய்யாமலோ நீங்கள் எவ்வளவு நீண்ட காலத்திற்கு விரும்புகிறீர்களோ அவ்வளவு காலம் வரை திட்டத்தில் நிலைத்திருக்கலாம்.
மேலும் நீங்கள் ஈஎல்எஸ்எஸ் சிப் திட்டத்தை எந்தக் கட்டத்தில் வேண்டுமானாலும் நிறுத்திக் கொள்ளலாம். ஆனால் முதலீடு செய்யப்பட்டத் தொகையை 3 ஆண்டுகளுக்குப் பிறகு மட்டுமே வெளியே எடுக்க முடியும்.
ஈஎல்எஸ்எஸ் நிதிகளில் யார் முதலீடு செய்யலாம்?
தனிநபர்கள் மற்றும் ஹெச்யுஎஃப் எனப்படும் கணவன், மனைவி மற்றும் குழந்தைகள் அடங்கிய இந்து பிரிக்கப்படாத குடும்பத்தினரும் வரி சேமிப்பு பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்யலாம்.
தற்போது, பெரும்பாலான பரஸ்பர நிதி நிறுவனங்கள் என்ஆர்ஐ க்களான அமெரிக்க மற்றும் கனடிய குடிமக்களிடமிருந்து முதலீடுகளை ஏற்றுக்கொள்வதில்லை. இதர நாடுகளில் வசிக்கும் என்ஆர்ஐ க்கள் ஈஎல்எஸ்எஸ் நிதிகளில் முதலீடு செய்யலாம்.
ஈஎல்எஸ்எஸ் நிதிகளிலிருந்து நான் விலகிக் கொள்ள முடியுமா?
ஈஎல்எஸ்எஸ் நிதிகள் 3 வருட பூட்டுக்காலம் நிறைவடைவதற்கு முன்பு முன்கூட்டிய முதிர்வடையா பணமீட்புகளை அனுமதிக்காது.
எனது ஈஎல்எஸ்எஸ் நிலுவைத் தொகையை நான் எப்படி சரிபார்க்க வேண்டும்?
பரஸ்பர நிதி நிறுவனங்கள் ஈஎல்எஸ்எஸ் முதலீட்டாளர்களுக்கு அவர்களது முதலீட்டின் செயலாக்கம் பற்றிய காலாண்டு அறிக்கைகளை அனுப்பும். நீங்கள் பரஸ்பர நிதி நிறுவனத்தின் ஆன்லைன் வசதிகளைப் பயன்படுத்தியும் கூட உங்கள் முதலீட்டு மதிப்பை பார்வையிடலாம்.
நான் தெரிந்து கொள்ள வேண்டியது வேறு ஏதேனும் இருக்கிறதா?
ஈஎல்எஸ்எஸ் நிதிகள் இரண்டு திட்டத் தேர்வுகளைக் கொண்டிருக்கிறது: அவை வளர்ச்சி மற்றும் பங்காதாயம். வளர்ச்சித் தேர்வு நீண்ட கால வரையறையில் செல்வத்தை உருவாக்க பரிந்துரைக்கப்படும் திட்டமாகும். பங்காதாயத் திட்டத்தின் கீழ் முதலீட்டாளர், பங்காதாயத்தைச் செலுத்துதல் அல்லது பங்காதாயத்தை மறுமுதலீடு செய்தல் ஆகிய தேர்வுகளுக்கிடையே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.
பெறப்படும் பங்காதாயத்திற்கு வரி விதிப்பு இல்லை. நீங்கள் பங்காதாய மறுமுதலீட்டைத் தேர்ந்தெடுத்தால், அது புதிய முதலீடாகக் கருதப்படும் அத்துடன் நீங்கள் அதன் மீது வரிப்பயனுக்கும் தாக்கல் செய்யலாம்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications