இந்தியாவின் மிகப் பெரிய வாலெட் செயலியான பேடிஎம்-ஐ 200 மில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் உபயோகித்து வருகின்றனர், அதுமட்டும் இல்லாமல் பேடிஎம் நிறுவனமும் பல விதமான பாதுகாப்பு வசதிகளை அளிக்கின்றது. அதில் முக்கியமான ஒன்று வாலெடி இன்சூரன்ஸ் ஆகும்.
வாலெட் இன்சூரன்ஸ்
வல்லெட் இன்சுரன்ஸ் உங்கள் மொபைல் போன் தொலைந்து போகும் போது அல்லது முறைகேடாக யாராவது பயன்படுத்தும் போது மற்றும் திருடு போனால் காப்பீடு அளிக்கும். இதற்காகக் கூடுதல் கட்டணம் ஏதும் செலுத்த தேவையில்லை. அனைத்துப் பேடிஎம் பயனர்களுக்கும் இந்தக் காப்பீடு கிடைக்கும்.
தங்களது பயனர்களைப் பாதுகாக்க பேடிஎம் அளிக்கும் பாதுகாப்பு வசதி இதுவாகும். இதனால் பேடிஎம் பயனர்கள் பாதுகாப்பான டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையைச் செய்ய முடியும்.
இந்தக் காப்பீட்டிற்குள் எதுவெல்லாம் அடங்கும்?
மொபைல் போன் காணாமல் போகும் போது முறைகேடாக உங்களது வாலெட்டில் உள்ள தொகை பயன்பட்டு இருந்தால் 20,000 ரூபாய் வரை காப்பீடு கிடைக்கும். முறைகேடாக நடைபெற்றுள்ள பரிவர்த்தனையில் இருந்து 20,000 ரூபாய் வரை எது குறைவான தொகையோ அவ்வளவு காப்பீடு தொகையாகக் கிடைக்கும். ஆனால் 12 மாதத்திற்கு ஒரு முறை தான் காப்பீடு கிடைக்கும்.
காப்பீட்டைப் பெறுவது எப்படி?
உங்கள் போன் திருடு போனால் அல்லது காணல் போனால் உடனே பேடிஎம் இணையதளத்தில் அல்லது வாடிக்கையாளர் சேவை மையத்தில் 12 மணி நேரத்திற்குள் புகார் அளிக்க வேண்டும். 12 மணி நேரத்தினைக் கடந்தால் புகார் எடுத்துக்கொள்ளப்படாது. பின்னர் 24 மணி நேரத்திற்குள் காவல் நிலயத்தில் புகார் அளிக்கப்பட்ட முதல் தகவல் அறிக்கையின் நகலைச் சமர்ப்பிக்க வேண்டும். அளிக்கப்பட்ட தகவல் அனைத்தும் உறுதி செய்யப்பட்டுச் சரியாக இருந்தால் 5 நாட்களில் காப்பீடு பணம் கிடைக்கும். பேடிஎம் வாலெட் கணக்கை பயன்படுத்த தடை விதிக்கப்படும்.
முறைகேடான பரிவர்த்தனைகள்
இதுவே உங்களது போனை வேறு யாரவது எடுத்துப் பயன்படுத்தி முறைகேடாகப் பரிவர்த்தனை செய்து இருக்கும் போது 12 மணி நேரத்தில் இணையம் மூலமாக அல்லது பேடிஎம் வாடிக்கையாளர் சேவை வழியாகப் புகார் அளிக்க வேண்டும். அளிக்கப்பட்ட தகவல் அனைத்தும் உறுதி செய்யப்பட்டுச் சரியாக இருந்தால் 5 நாட்களில் காப்பீடு பணம் கிடைக்கும். பேடிஎம் வாலெட் கணக்கை பயன்படுத்த தடை விதிக்கப்படும்.
எதுவெல்லாம் இந்தக் காப்பீட்டிற்குள் அடங்கும்?
தெரியாமல் போன் களவு போனால், அப்போது மட்டுமே இந்தக் காப்பீடு கிடைக்கும். ஒருவேலை மொவைல் எண் தவராக உள்ளிட்டு அதன் மூலம் நடைபெறும் பரிவர்த்தனைகளுக்குக் காப்பீடு அளிக்கப்படாது. மேலும் பேடிஎம் மூலமாக டெபிட் கார்டு, கிரெட்டி கார்டு பரிவர்த்தனைகளில் ஏற்படும் முறைகேடுகளுக்கும் பேடிஎம் காப்பீடு அளிக்காது.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications