தீபாவளி சமயத்தில் இந்திய வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் பல்வேறு விதமான கடன் திட்டங்கள் மற்றும் சலுகைகளை அறிவித்து வருகின்றன. இந்தச் சலுகைகளை எல்லாம் பார்க்கும் போது நன்றாக இருந்தாலும் கடனின் முக மதிப்பைப் பார்க்காமல் கடன் பெறுவது சிறந்தது அல்ல.
சலுகைகளைப் பார்த்து உற்சாகத்தில் கடன் வாங்காமல் கணக்கு போடு பொருத்தமான கேள்விகளைக் கேட்டு கடன் பெறுதல் நல்லது. எனவே இங்கு வங்கிகள் பொதுவாக கடன் வாங்கும் போது அளிக்கும் சலுகைகள் பற்றி விளக்கமாகப் பார்ப்போம்.
ஈஎம்ஐ-ல் தள்ளுபடி
ஈஎம்ஐ எனப்படும் தவனை குறைவு அல்லது தள்ளுபடி. 20 வருட தவணையில் வீட்டு கடனை ஆக்சிஸ் வங்கியில் பெறும் போது 4வது, 8வது மற்றும் 12வது ஆண்டுகளில் 4 தவனை என்ன மொத்தம் 12 ஈஎம்ஐ-ல் இருந்து விலக்கு அளித்துள்ளது. எனவே 4 வருடத்திற்குள் கடனை அடைக்க விரும்பினால் உங்களால் முடியாது. அடுத்து குறைந்தபட்சம் 20 வருடம் வரை தவணையினை செலுத்தி வர வேண்டும். அதற்கு முன்பு மொத்த கடனையும் அடைக்க விரும்பினால் இந்தச் சலுகைகள் கிடைக்காது. அதுமட்டும் இல்லாமல் கடனின் செயலாக்கக் கட்டணம் அதிகம்.
நிதி சார்ந்த கடன் விகிதம் மீதான கடன் மதிப்பில் மாற்றம் இல்லை
சில வங்கிகள் மார்க்-அப் அல்லது நிதி சார்ந்த கடன் விகிதம் மீதான கடன் மதிப்பு பரவலை மாற்றது. இது நல்ல சலுகையாக தெரியலாம் ஆனால் MCLR மதிப்பை முதலில் சரிபார்க்க வேண்டும்.
பூஜ்ஜியம் அல்லது குறைந்த செயலாக்கக் கட்டணம்
சில வங்கிகள் செயலாக்க கட்டணம் இல்லை என்றும் குறைவு என்றும் கூறும். இது நல்ல சலுகை என்றாலும் பிற கட்டணங்கள் அதாவது சட்ட மற்றும் தொழில்நுட்ப கட்டணங்கள் எவ்வளவு என்று தெரிந்துகொள்ளுங்கள். செயலாக்கக் கட்டணம் ஒன்றும் கடன் பெறுவதை முடிவு செய்வதற்கான காரணம் இல்லை.
0% வட்டி விகிதம்
வேறு ஏதும் கூடுதல் கட்டணம் இல்லாமல் 0%-ல் கடன் அளிக்கும் திட்டமானது உண்மையானதாக இருக்கும். எனவே, விளம்பர விகிதம் எவ்வளவு என்பதைத் தவிர்த்து பயனுள்ள வட்டி விகிதம் எவ்வளவு என கவனம் செலுத்துங்கள்.
கேஷ் பேக் ஆஃபர்
ஐசிஐசிஐ வங்கி 15 வருடம் முதலான வீட்டு கடனை பெறும் போது 36வது தவனை முதல் ஒவ்வொரு 12 தவனை முடிந்த பிறகு 1 தவனை கேஷ் பேக் அளிக்கும். அந்த பணம் உங்களுக்கு வங்கி கணக்கின் மூலம் அளிக்கப்படும் அல்லது தவணையாகவும் செலுத்தலாம். ஆனால் இங்கு குறைந்தது 15 வருடம் வரை கடன் தவணையினை செலுத்தினால் மட்டும் தான் சலுகையின் நன்மையினை பெற முடியும்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications