மத்திய அரசு இன்சூரன்ஸ் திட்டங்களுடன் ஆதார் எண்ணை இணைப்பது காட்டாயம் என அறிவித்துள்ளது. இதற்கான காலக்கெடு 2017 டிசம்பர் 31 ஆகும். இந்த இணைப்பினை செய்வதன் மூலம் மோசடியாகக் காப்பீடு தொகையினைப் பெறுவது குறையும் என்றும், வேகமாக முதிர்வு தொகையினை அளிக்கம் முடியும் என்றும் கூறப்படுகிறது.
இதற்காகக் காப்பீடு நிறுவனங்கள் பாலிசிதார்களுக்கு எஸ்எம்எஸ் மற்றும் கடிதம் மூலமாகத் தகவல் அளித்து வருகின்றன.
இணையதள இணைப்பு
காப்பீடுதார்கள் இன்சூரன்ஸ் பாலிசியுடன் இணையதளம் மூலமாக இணைக்கலாம். இதற்குக் காப்பீடு செய்துள்ளவர்கள் வாடிக்கையாளர் சேவை தளத்தில் உள்நுழைய வேண்டும். பின்னர் அவர்களது ஆதார் விவரங்களைச் சமர்ப்பிக்கலாம்.
தேவையான விவரங்கள்
இணையதளம் மூலமாக இன்சூரன்ஸ் பாலிசியில் ஆதார் எண்ணை இணைக்கப் பின் வரும் ஆவணங்கள் எல்லாம் தேவைப்படும்.
1. பாலிசி எண்
2. பிறந்த தேதி
3. பான் எண்
4. மின்னஞ்சல் முகவரி
5. மொபைல் எண்
4. ஆதார் எண்
ஒரு முறை கடவுச் சொல் சரிபார்ப்பு
மேலே கூறிய விவரங்களை எல்லாம் நீங்கள் காப்பீடு செய்துள்ள நிறுவனத்தின் இணையதளத்தில் அளித்த பிறகு உங்கள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணிற்கு ஒரு முறை கடவுச் சொல் அளிக்கப்படும். அதனை உள்ளிட்ட பிறகே ஆதார், இன்சூரன்ஸ் பாலிசி இணைப்பு வெற்றிகரமாக முடியும்.
குறிப்பு
ஆதார் எண்ணில் மொபைல் எண் இணைக்கப்பட்டு இருந்தால் மட்டுமே இணையதளம் மூலமாக இன்சூரன்ஸ் பாலிசியை ஆதார் எண்ணுடன் இணைக்க முடியும். மேலும் இணைப்பின் போது பான் எண்ணும் கட்டாயம் தேவை


Click it and Unblock the Notifications