இந்தியர்களே குறைந்த முதலீட்டில் இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படித் தெரியுமா?

Written By: Tamilarasu
Subscribe to GoodReturns Tamil

இணையதளத்தில் ஆர்வமுள்ள மக்கள் கேட்கும் பொதுவான கேள்விகளில் ஒன்று "பணத்தை இணையத்தில் எப்படிச் சம்பாதிக்க வேண்டும்" என்பதாகும். இன்று இந்தப் பதிவின் உதவியுடன், நாம் சில கருத்துக்களைப் பகிர்ந்துகொள்கிறோம். மேலும் இணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி என்பதைக் காட்டப்போகிறோம்.

நான் சொந்தமாக ஒரு வேலையைச் செய்வதற்காக 2012-ல் முழுநேர பணியை நான் விட்டுவிட்டேன். அது ஏற்ற இறக்கங்கள் கொண்ட ஒரு பயணமாக இருந்தது. கடந்த சில ஆண்டுகளில் என்னால் ஒரு கோடிக்கும் மேல் சம்பாதிக்க முடிந்தது.

எனவே இணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி என்று எனக்கு ஒரு யோசனை உள்ளது. பல்வேறு மக்கள் தங்கள் தொழில் வாழ்க்கையைப் பலவிதங்களில் அணுகினர். அதிகரித்து வரும் இணைய வளர்ச்சி இணையத்தில் பணம் சம்பாதிக்கப் பல வழிகளைத் திறந்து விட்டுள்ளது.

எனவே இணையத்தில் பணம் சம்பாதிக்க எது உங்களைத் தடுக்கிறது?

இந்தப் பதிவில், நீங்கள் காணப்போவது:

1. இணையத்தில் எப்படிப் பணம் சம்பாதிப்பது?
2. குறைந்த முதலீட்டில் இணையத்திலிருந்து பணம் சம்பாதிப்பது எப்படி
3. பூஜ்யத்திலிருந்து எப்படித் தொடங்குவது
4. நீங்கள் இன்றே தொடங்கக் கூடிய இந்தியாவில் செயல்படுத்தக்கூடிய வேலைகள்
5. இணையத்தில் இருந்து ஒரு நிலையான வருமானம் பெறுவது எப்படி

பணத்தை இணையத்தில் பெறுவதற்கான யோசனைகளைச் சரிபார்க்கலாம் வாருங்கள்

இந்த யோசனைகள் குறைந்த முதலீட்டில் ஆரம்பிக்கக் கூடிய மற்றும் இணையத்தில் பணம் சம்பாதிப்பதற்காகப் பல மக்கள் என்ன அடிப்படையைப் பயன்படுத்துகிறார்கள் என்பதைப் பற்றியது.

 

1) ஒரு முக்கிய வலைப்பதிவு தொடங்குங்கள்

வலைப்பதிவைக் கொண்டு மாதத்திற்கு 20 லட்சத்திற்கும் அதிகமாகச் சம்பாதிக்கும் ஹர்ஷ அகர்வால், ஜிதேந்திர வாஸ்வானி போன்ற இந்திய வலைப்பதிவாளர்களைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? நிச்சயமாக அந்த நிலையை அடைவது ஒரு எளிதான பணி அல்ல. ஆனால் அர்ப்பணிப்பு மற்றும் செயற்படுத்துதல் மூலம் அடைய முடியும்.

நீங்கள் வலைப்பதிவு தொடங்கும்போது உங்களுக்கு லாபகரமான முக்கியத்துவத்தைப் பற்றி எழுதத் தெரிந்து கொள்ளுங்கள். நீங்கள் அறிந்திருக்கும் ஒன்று, உங்களிடம் உள்ள ஆர்வம் பற்றி, உங்களைப் பற்றிப் பல ஆண்டுகளாக எழுதுவதை நீங்கள் காணலாம். அது உணவு முதல் பயணம் வரை ஏதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

மிக முக்கியமாகச் சரியான டொமைனைத் தேர்ந்தெடுத்து உங்கள் வலைப்பதிவை உங்கள் இலக்கு பார்வையாளர்களுக்குப் பொருத்தமான மற்றும் நேரத்திற்குத் தகுந்தாற் போல உள்ள உள்ளடக்கத்துடன் வடிவமைக்கவும். ஒரு முறை அது புகழடையும் வரை சிறிது நேரம் எடுத்துக் கொள்ளும் போதும் சற்று பொறுமையுடன் இருக்க வேண்டியது அவசியமாகும். நீங்கள் விளம்பர இடத்தையும் மின்புத்தகங்களையும் விற்கலாம் அல்லது உங்கள் நிபுணத்துவத்தின் அடிப்படையில் ஒரு சந்தா படிப்பை உருவாக்கலாம்.

இருப்பினும் ஒரு எச்சரிக்கை வார்த்தையாகச் சொல்வதானால் பல வலைப்பதிவு வருவாய் ஆதாரங்களைக் கொண்டிருங்கள். ஒரே ஒரு வலைப்பதிவில் அதிகமான நம்பகத்தன்மை கூடாது. வலைப்பதிவு தொடங்குவதற்கு, நீங்கள் ஒரு டொமைன் மற்றும் ஹோஸ்டிங் கொண்டிருக்க வேண்டும். (இரண்டுக்கும் மாதத்திற்கு 200 ரூபாய்க்கும் குறைவாகச் செலவாகும்)

 

2) ஆன்லைன் சந்தைகளைத் தழுவுங்கள்


இந்தியாவில் இந்த நாட்களில் இணையத்தில் பொருட்களை எங்கே வாங்குவது?

பிளிப்கார்ட், அமேசான்,பேடிஎம், ஸ்னாப்டீல், மின்டரா அல்லது வேறு சில முக்கிய வலைத்தளங்களில் ஒன்றாக இருக்கலாம். ஒரு மொத்த உற்பத்தியாளரிடமிருந்து ஒரு பொருளை தருவித்து நீங்கள் சந்தையில் விற்பனையைத் தொடங்கலாம். இந்தப் பொருட்கள் பொம்மைகள், கலைபொருட்கள் மற்றும் நீங்கள் பெயரிடும் ஆடை போன்ற எளியப் பொருட்களாக இருக்கலாம்.

சந்தையில் இந்தத் தயாரிப்புகளை நீங்கள் பட்டியலிட்டுள்ளீர்கள் என்றால், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிவிட்டர் மற்றும் பிற சமூக வலைத்தளங்களில் இலவசமாக விளம்பரப்படுத்தலாம். எனினும், நீங்கள் உங்கள் தயாரிப்புகளை விற்க எஃப்பிஏ (அமேசான் மூலம் நிறைவேற்றப்பட்டது) போன்ற ஒரு தொழில்முறை விற்பனை தளமாக மாற்ற முடியும்.

நீங்கள் ஒரு தயாரிப்பு உருவாக்க வேண்டிய அவசியமில்லை. உங்கள் வீட்டில் அடைந்து கிடக்கும் பயனற்ற பழைய பொருட்கள், மரச்சாமான்கள் மற்றும் துணிகளையும் விற்கலாம்.

 

3) ஒரு பகுதி நேர எழுத்தாளர் வேலை

உங்களிடம் எழுதுவதற்கு நாட்டமும் பொருத்தமான திறமைகளும் உள்ளதா?

நல்லது. உங்கள் எழுத்துப் பொழுதுபோக்கை ஒரு கணிசமான சம்பளமாக மாற்ற வழி வகுக்கும் பல தளங்கள் உள்ளன. பகுதிநேர எழுத்துப் பணி உலகம் முழுவதும் கடினமானது. ஆனால் நீங்கள் ஒரு தரமான மற்றும் நம்பகமான உள்ளடக்கத்தை உருவாக்குபவர் என்ற நற்பெயரை உருவாக்கைவிட்டீர்களேயானால், உங்கள் வருமானம் கூரை வழியாகக் கொட்டும்.

ஃபைவர், அப்ஒர்க், ஃப்ரீலான்சர் மற்றும் ஐரைட்டர் ஆகிய இணையதளங்கள் எழுதுவதற்கான வேலைகளைத் தரும் சிறந்த தளங்களாகும். இருப்பினும் பகுதி நேர எழுத்து வேலையில் தொடக்கத்தில் நன்றாகச் சம்பாதிக்க முடியாது. இயற்கையாகவே ஒரு நல்ல பெயர் உருவாக்க நேரம் எடுக்கும்.

எனவே நீங்கள் அதிகக் கவனம் செலுத்த ஆரம்பிக்கும் போது பணம் சம்பாதிப்பதை விடத் தரம் மற்றும் உயர்ந்த நிலைக்கு முன்னுரிமைக் கொடுக்க வேண்டும்.

 

4) சந்தைப்படுத்தல் தொடர்பாளர்

பல நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளையும் வியாபாரக் குறியீட்டையும் ஊக்குவிப்பதற்காக இணைய விற்பனையாளர்களைத் தேடி வருகின்றன.

ஒரு தொடர்பாளரின் வேலை உற்பத்தி பொருட்களைப் பார்வையாளருக்குக் கொண்டு செல்வதாகும். பரிந்துரை இணைப்புகளிலிருந்து பெறப்படும் வருவாயிலிருந்து ஒரு பங்கை சம்பாதிக்கலாம்.

நீங்கள் கணிசமான சமூக ஊடக இருப்பை அல்லது மிகவும் வெற்றிகரமான வலைப்பதிவை வைத்திருந்தால் சந்தைப்படுத்தல் தொடர்பாளர் பணி பயன் தரும்.

நீங்கள் தகுதி பெற பெரும் பின்தொடர்பாளர்கள் இருக்க வேண்டிய அவசியமில்லை. அதற்காகவே சில நிறுவனங்கள் இருக்கின்றன. அவை ஈபேட்ஸ், ஷேர்சேல் மற்றும் ஸ்டைலின்ட்டி ஆகும்.

 

5) ஒரு யூ ட்யூப் சானலைத் தொடங்குங்கள்

பணம் சம்பாதிக்க யூ ட்யூப் ஒரு புதுமையான வேடிக்கையான வழியை வழங்குகிறது. நீங்கள் ஒரு திறமையையோ, கலையையோ, அல்லது அசாதாரணமான ஏதாவது ஒரு விஷயத்தையோ அல்லது மக்களுக்கு அதிகப் பரிச்சயமில்லாத ஒரு அம்சத்தைப் பற்றிய தொடர்வரிசை பயிற்சிகளைப் பற்றியோ காட்சிப்படுத்தும் காணொளிகளைப் பதிவேற்றம் செய்து அதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம்.

அது கவர்ச்சிகரமானதாக இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை, அது மக்களின் கவனத்தைக் கவரும் எளிமையான ஒரு வீட்டு விற்பனை அல்லது பள்ளி பாடங்களைப் பற்றிய ஒரு பொதுவான சிக்கலான பகுதியாகவும் இருக்கலாம்.

உங்கள் காணொளிகளைப் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையை அதிகரித்து வருமானத்தை அதிகரிக்க வழக்கத்திற்கு மாறாகச் சிந்தித்துப் புதுமையான ஆக்கப்பூர்வமான மற்றும் ஈடுபாடு மிகுந்த காணொளிகளை உருவாக்குங்கள்.

நிதியுதவி அளிக்கப்பட்ட விளம்பரங்கள், சந்தைப்படுத்தும் தொடர்பு மற்றும் விளம்பரங்கள் மூலம் யூ டியூப் வழியாக நீங்கள் பெருமளவு பணம் சம்பாதிக்கலாம்.

மேலும் ஒருமுறை உங்கள் சேனல் முன்னேற்றமடையத் தொடங்கி விட்டால், ஒரு யூ டியூப் பங்குதாரராக நீங்கள் பாராட்டு வருமானத்தையும் பெறலாம் அல்லது உயர்தரச் சேவை தளத்தின் மூலம் பணம் ஈட்டலாம்.

 

6) ஒரு மெய்நிகர் பணியாளராக இருங்கள்

மேம்பட்ட இந்த இணையம் யுகத்தில் வேலைவாய்ப்புக் காட்சிகள் பெருமளவில் புரட்சிகரமாகியுள்ளது இதன் விளைவாக மக்கள் தொலைதூரத்திலிருந்தே மெய்நிகர் ஊழியர்களாகப் பணியாற்றக்கூடிய புதிய பணிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

மிகப் பொதுவான சில மெய்நிகர் பணிகளில் வாடிக்கையாளர் சேவை பாத்திரங்கள் மற்றும் தரவுகளை உள்ளிடும் வேலைகள் ஆகியன அடங்கும். உங்களுக்கு வாடிக்கையாளர் சேவையில் ஒரு மெய்நிகர் பணியாளர் வேலையைச் செய்யப் பிடிக்குமென்றால் டெலிடெக், அமேஜான், லைவ்ஓப்ஸ், சதர்லேண்ட் மற்றும் ஒர்க்கிங் சொல்யூஷன்ஸ் போன்ற நிறுவனங்களை முயற்சித்துப் பாருங்கள்.

தரவு தகவல்களை உள்ளிடுதல் மெய்நிகர் வேலைவாய்ப்பில் மிக எளிமையான வடிவம் ஆகும். ஏனெனில் இதில் நீங்கள் வெறும் தகவல்களை உள்ளிட வேண்டும் அவ்வளவு தான்.

இருந்தாலும் இணை கடமைகளான தரவுகளைச் சரிபார்த்தல், குறியீடுகளைக் கைப்பற்றுதல், வடிவமைத்தல் போன்றவையும் இதில் அடங்கும். அக்கு டிரான் குளோபல், இன்வென்சிஸ் மற்றும் கேபிடல் டைபிங் ஆகஜியநிறுவனங்கள் தரவுகளை உள்ளிடும் வேலைக்கு அற்புதமான தேர்வுகளாகும்.

 

7) டிஜிட்டல் சந்தைப்படுத்தும் உதவியாளராகப் பணி செய்யுங்கள்.

இணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி என்னும் பழைய காலக் கேள்விக்கு டிஜிட்டல் சந்தைப்படுத்தும் உதவியாளராகப் பணியாற்றுதல் மற்றுமொரு பதிலாகும்.

நிறுவனங்களும் தர முத்திரைகளும் பொதுவாகக் கைவசம் அதிக நேரத்தைக் கொண்டிருக்க மாட்டார்கள். எனவே அத்தகைய நிறுவனங்கள் அடிப்படையில் அவர்களுடைய வியாபாரத்திற்கு அதிக லாபம் தரும் டிஜிட்டல் சந்தைப்படுத்தும் தீர்வுகளைக் கண்டறியும் யாரேனும் ஒருவருக்காகத் தேடுதல் வேட்டையில் இருக்கிறார்கள்.

பேஸ்புக், லிங்க்ட் இன, மற்றும் டிவிட்டர் போன்ற சமூக ஊடகங்கள் தொடர்பான அடிப்படை விவரங்கள் பற்றி நீங்கள் நன்கு அறிந்தவராக இருந்தால் அப்வொர்க் போன்ற அத்தகைய எண்ணற்ற வேலைகளைக் கொண்ட தளங்களை நீங்கள் முயற்சி செய்து பார்க்கலாம்.
எஸ்இஓ வேலைவாய்ப்பு ஆலோசனை மையம் குறிப்பாக டிஜிட்டல் சந்தைப்படுத்தலில் உதவியாளராக நிபுணத்துவம் பெற்றவர்களைப் பாராட்டுகிறது ஏனென்றால் இங்கே நிறைய நிறுவனங்கள் ஒரு எஸ்இஓ க்காக வரிசைக்கட்டி நிற்கின்றன.

 

8) உங்கள் சொந்த ஈ – வர்த்தகக் கடை அல்லது தர அடையாள நிறுவனத்தை உருவாக்கிடுங்கள்

உங்கள் தயாரிப்பு விற்பனையை வேறொருவர் கையாளுவதை நீங்கள் விரும்பவில்லை என்றால் நீங்களே ஏன் கடை உரிமையாளர் பாத்திரத்தை எடுத்துக் கொள்ளக் கூடாது?

நீங்கள் ஷாப்பி ஃபை ஈ- காமர்ஸில் உங்கள் சொந்த கடையை உருவாக்குவதன் மூலம் அதைச் செய்யலாம்.
இது நீங்கள் வர்த்தகம் செய்ய மிகச் சரியான அரங்கை உங்களுக்கு வழங்குகிறது இதை விட அதிகமாக உங்களுக்கு வேறென்ன வேண்டும், மேலும் உங்களிடம் திட்டங்களுக்குப் பஞ்சமென்றால் இந்தத் தளம் உங்களுக்கு ஏராளமான எளியத் தயாரிப்புகளைப் பரிந்துரைக்கிறது.

மிக முக்கியமாக ஷாப்பிஃபை ஈ-வர்த்தகம் உங்கள் சொந்த தனிப்பயனாக்கப்பட்ட தர நிறுவனத்தை நிறுவ ஒரு உந்து விசைப் பலகையாகச் செயல்படும்.

உங்கள் அனைத்து விநியோகத் தேவைகளுக்கும் புகழ்பெற்ற மற்றும் அனுபவமிக்கத் தயாரிப்பாளர்களைச் சுலபமாகப் பட்டியலிடலாம் மேலும் எளிதாக ஒரு மென்மையான நவநாகரிகமான அடையாளக் குறியீட்டை உருவாக்கி பயன்படுத்த தயாராக இருக்கும் தயாரிப்புகளை வழங்கலாம்.

 

9) விளம்பரங்களைச் சொடுக்குதல் மற்றும் கருத்தாய்வு செய்தல்

இதை விட எளிமையான இணைய வேலை வேறொன்று இல்லை. இதன் பெயர் குறிப்பிடுவதைப் போல இந்த வேலை அடிப்படையில் சில நிதி ஊக்கத்தொகைகளைப் பெறும் நோக்கத்துடன் விளம்பரங்களைப் பார்த்தல் மற்றும் சொடுக்குதல் போன்ற வேலைகளாகும்.

இணையத்தில் பணம் சம்பாதிக்கும் இந்தக் குறிப்பிட்ட வழிமுறையில் அதன் இதர எதிரிணை வேலைகளைப் போல அதிகப் பணம் ஈட்ட முடிவதில்லை எனினும் நியோபக்ஸ், பெய்ட்வெர்ட்ஸ் மற்றும் க்ளிக்சென்ஸ் போன்ற சொடுக்கினால் பணம் செலுத்தும் தளங்களில் உள்நுழைவதன் மூலம் கணிசமான வருமானத்தைப் பெறலாம்.

அதே போலச் சர்வே டவுன்லைன், இன்பாக்ஸ் டாலர்ஸ், மற்றும் ஸ்வாக்பக்ஸ் போன்ற பணம் செலுத்தும் கருத்தாய்வு வேலைகள் வலைத்தளங்களில் ஏராளமாகக் கொட்டிக் கிடக்கின்றன.
இந்தக் கருத்தாய்வுகள் பொதுவாக எளிமையானவை அரசியல் முதல் விளையாட்டு வரை மற்றும் அதற்கு இடைப்பட்ட பல தலைப்புகளை உள்ளடக்கியவை. மேலும் இத்தகைய வலைத்தளங்கள் இதர பணம் ஈட்டும் வளாகங்களில் சிறப்புச் சலுகைகள் மற்றும் பணிகளின் வடிவில் வாய்ப்புகளை உள்ளடக்கி இருக்கின்றன.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

How to Make Money Online in India With Low Investment

How to Make Money Online in India With Low Investment
Story first published: Monday, November 27, 2017, 13:38 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns