மத்திய அரசு வெளியிட்டுள்ள உத்தரவின் படி இன்சூரன்ஸ் பாலிசி எடுத்துள்ளவர்கள் அதனுடன் பான் மற்றும் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். எனவே இந்தியாவின் மிகப் பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி நிறுவனமும் தங்களது இணையதளமான www.licindia.in மூலமாகவும் ஆதார் மற்றும் பான் எண் இணைப்பைச் செய்வதற்கான சேவையினை வழங்கியுள்ளது.
பண மோசடி சட்டம் 2017-ன் கீழ் காப்பீடு திட்டங்களுக்கு ஆதார் மற்றும் பான் எண் இணைப்பு என்பது கட்டாயம் என்றும் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையமும் கூறியுள்ளது.
அறிவிப்பு
எல்ஐசி நிறுவனம் தாங்கள் எஸ்எம்எஸ் சேவை மூலம் ஆதார் இணைப்பினை வழங்குவதாகச் சமுக வலைதளங்களில் பரவி வரும் சேவை குறித்த விவரங்கள் தவறானது என்றும் இணையதளம் மூலமாகவோ அல்லது எல்ஐசி மினி ஆப்பிஸ் மற்றும் எல்ஐசி கிளைகள் மூலமாக மட்டுமே இணைப்பைச் செய்யவும் என்றும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
எனவே எல்ஐசி இணையதளம் மூலமாகப் பாசியுடன் ஆதார் கார்டினை எப்படி இணைப்பது என்று விளக்கமாகப் பார்ப்போம்.
தேவையானவை
எல்ஐசி பாலிசியுடன் ஆதார் மற்றும் பான் எண்ணை இணைக்க முதலில் ஆதார் கார்டு, பான் கார்டு மற்றும் எல்ஐசி பாலிசி விவரங்களைக் கைகளில் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.
எல்ஐசி இணையதளம்
www.licindia.in என்ற இணையதளத்திற்குச் சென்று ‘ஆதார் மற்றும் பான் கார்டு இணைப்பதற்காக இனைப்பு' என்ற பொத்தானை கிளிக் செய்யவும்.
மொபைல் எண்
உங்கள் ஆதார் கார்டில் மொபைல் எண் இணைக்கப்படவில்லை என்றால் அருகில் உள்ள எல்ஐசி கிளையின் மூலம் இணைப்பைச் செய்யவும். இணையதளம் மூலமாக இணைப்பினை செய்ய ஆதார் கார்டுடன் மொபைல் இணைக்கப்பட்டு இருக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே ஒரு முறை கடவுச் சொல் மூலமாக இணைப்புச் சாத்தியம் ஆகும்.
தொடர்தல்
மேலே கூறிய விவரங்கள் எல்லாம் சரியாக இருப்பின் ‘தொடர்க' என்ற பொத்தானை அழுத்தவும்.
விண்ணப்பம்
தொடர்க பொத்தானை அழுத்திய பிறகு உங்களுக்குத் தோன்றும் விண்ணப்பித்தன பூர்த்திச் செய்து எஸ்எம்எஸ் மற்றும் மின்னஞ்சல் ஒரு முறை கடவுச்சொல்லை எல்லாம் அளித்த பிறகு வெற்றிகரமாக இணைப்பு முடிந்துவிடும். இதனை உறுதி செய்ய எல்ஐசி நிறுவனம் சில நாட்கள் எடுத்துக்கொள்ளும்.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!



Click it and Unblock the Notifications