உங்கள் வீட்டுக் கடனை வேறொரு வங்கிக்கு மாற்றும்போது நீங்கள் எதிர்கொள்ளக்கூடிய 13 தடைகள்..!

உங்களுக்குத் தற்போது கடன் வழங்கியுள்ள வங்கி, சந்தையில் நிலவக்கூடிய குறைந்த பட்ச வட்டி விகிதத்தை வழங்கவில்லை என்று நீங்கள் எண்ணினாலோ அல்லது வேறு ஏதேனும் காரணத்திற்காக உங்கள் கடனை மற்றொரு வங்கிக்கு மாற்ற முனைந்தாலோ, அது தொடர்பான அனைத்து நடைமுறைகளையும் நன்கு அறிந்து கொள்ள முயலுங்கள்.

ஏனெனில், இவை பற்றிய அறியாமை உங்கள் திட்டங்களைப் பாழாக்குவதோடு, மிக அதிகக் கட்டணம் செலுத்தும் நிலைக்கும் உங்களை ஆளாக்கிவிடக்கூடும்.

1. ஃபோர்க்ளோஸர் (foreclosure) கடிதத்தைக் கேட்டு வாங்குங்கள்:

1. ஃபோர்க்ளோஸர் (foreclosure) கடிதத்தைக் கேட்டு வாங்குங்கள்:

உங்களுக்குத் தற்போது கடன் வழங்கியுள்ள வங்கிக்கு, அக்கடனை முன்கூட்டியே முடித்துக் கொள்ளும் உங்கள் எண்ணத்தை நீங்கள் முறையாகத் தெரிவித்து விட்டதற்கான அத்தாட்சி.

இதன் விளைவாக, உங்களுக்குக் கடன் வழங்கியுள்ள நிறுவனத்திற்கு, குறைவான வட்டி விகிதம் வழங்கும் வாய்ப்பு அல்லது உங்களைக் கவரக்கூடிய சிறப்பான சலுகை ஒன்றை வழங்க முன்வருவதற்கான வாய்ப்புக் கிடைக்கும்.

எனவே, அவர்கள் எத்தகைய சலுகையை வழங்க முன்வருகிறார்கள் என்பதை அறிந்து கொள்ளாமல் விடுவது பிற்காலத்தில் உங்களை வருத்தமடையச் செய்யலாம். அதே சமயம், உரிய நேரத்தில் முறையாகத் தெரிவிக்கப்படவில்லை என்று காரணம் காட்டி, கடன் கொடுத்த நிறுவனம் உங்களின் க்ளோஸர் தொகையை ஏற்காமல் தப்பிக்க முடியாது.

 

2. ஃபோர்க்ளோஸர் தொகை தவிர்த்து, அனுதின வட்டி விகித்தைக் குறிப்பிட வேண்டும்:

2. ஃபோர்க்ளோஸர் தொகை தவிர்த்து, அனுதின வட்டி விகித்தைக் குறிப்பிட வேண்டும்:

சில நேரங்களில், புதிய வங்கி உங்கள் கடன் கோரிக்கையைப் பிராசஸ் செய்வதற்குக் கூடுதலாக நேரம் எடுத்துக் கொள்ளலாம். அதனால் ஃபோர்க்ளோஸர் தேதியையும் அது கவனிக்கத் தவறியிருக்கலாம். உதாரணமாக, கடிதத்தில் நவம்பர் 30, 2017 அன்று ஒரு குறிப்பிட்ட தொகை (X) செலுத்தப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருப்பின், கடன் வழங்கிய பழைய வங்கிக்கு அத்தொகை டிசம்பர் 2, 2017 அன்று கிடைக்குமாறு பார்த்துக்கொள்ளப்படும்.

இடையில் இருக்கும் இரு நாட்களுக்கான வட்டித்தொகை மிகவும் முக்கியம். ஒரே ஒரு ரூபாய் நிலுவையில் இருந்தாலும், கடனை முடிக்க முடியாது. எனவே, கடனை முடிக்கும் நாளில் செலுத்த வேண்டிய வட்டித் தொகையைத் துல்லியமாகக் கணிப்பதற்குத் தின அடிப்படையிலான வட்டி உதவிகரமாக இருக்கும். இதற்கு மாற்றாக, உங்கள் சொந்த நிதியிலிருந்து இந்த இரு நாட்களுக்கான மேலதிக வட்டித்தொகையைச் செலுத்த நீங்கள் தயார்படுத்திக் கொள்ளலாம்.

 

3. இந்த லோன் மற்ற ஏதேனும் லோனுடன் இணைக்கப்பட்டுள்ளதா என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்:

3. இந்த லோன் மற்ற ஏதேனும் லோனுடன் இணைக்கப்பட்டுள்ளதா என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்:

கடன் வழங்கிய நிறுவனம் நீங்கள் வாங்கியுள்ள வீட்டுக்கடனை வேறு ஏதேனும் லோனுக்கு "நிபந்தனை" அடிப்படையில் இணைத்திருப்பின், முன்கூட்டியே முழுக் கடன் தொகையையும் நீங்கள் செலுத்தினாலும் கூட உங்களை அக்கடனிலிருந்து முழுமையாக விடுவிக்காது.

இது, அடுத்து உங்களுக்குக் கடன் வழங்கவிருக்கும் நிறுவனத்திற்கு மிகப் பெரிய பிரச்சினையை உருவாக்கும். எனவே, எவ்வித தளைகளுடனும் முடிச்சிடப்படவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். உதாரணத்திற்கு, நீங்கள் சுமார் 7 வருடங்களுக்கு முன் இந்த வீட்டு லோனை பெற்றிருக்கிறீர்கள் என்றும், மேலும் ஒரு லோனை கடந்த வருடம் பெற்றிருக்கிறீர்கள் என்றும் வைத்துக் கொள்வோம்.

இரண்டாவது சொத்து வாங்கும்போது, உங்களுக்குத் தேவைப்படும் தொகை, மதிப்பீட்டு அறிக்கையில் பரிந்துரைக்கப்படாத பட்சத்தில், தற்போது விலையேற்றம் கண்டிருப்பதோடு, கடந்த ஏழு வருடங்களில் ஓரளவுக்கு முதலீட்டுத் தொகை செலுத்தப்பட்டிருப்பதுமான, உங்கள் முதல் சொத்தின் சந்தை மதிப்பை கணக்கில் கொண்டு இரண்டாவதற்கான அத்தொகையை வழங்கியிருப்பர். எனவே இவ்விரு லோன்களும் இணைக்கப்பட்டிருக்கும். இவற்றுள் ஒன்றை மட்டும் முடிக்க அனுமதி கிடைக்காது.

 

4. கோ-பாரோயரின் ஒப்புதல் தேவையா என்பதை அறிந்து கொள்ளுங்கள்:

4. கோ-பாரோயரின் ஒப்புதல் தேவையா என்பதை அறிந்து கொள்ளுங்கள்:

சில கடன் நிறுவனங்கள் ஏகப்பட்ட கெடுபிடிகளைக் கடைபிடித்து வருகின்றன. கடனை முடிப்பதற்குக் கோ-பாரோயரின் கையெழுத்துடன் கூடிய ஒப்புதலைக் கேட்பது, சில நேரங்களில் கடனை முடிக்கும் நிகழ்வின் போது கோ-பாரோயர் நேரில் வரமுடியாத பட்சத்தில் அவரிடமிருந்து பவர் ஆஃப் அட்டர்னி கேட்பது வரை எந்த எல்லைக்கும் செல்வர். பெரும்பாலான கடன் நிறுவனங்கள் இது போன்ற கெடுபிடிகள் எதையும் மேற்கொள்ளாமல், க்ளோஸர் தொகையை ஏற்றுக் கொள்கின்றன; என்றாலும், உங்கள் கோ-பாரோயர் வேறு நகரம் ஒன்றில் வசிப்பவராகவோ அல்லது பயணம் மேற்கொண்டோ இருக்கலாம். எதற்கும் தயாராக இருப்பதில் தவறொன்றுமில்லை!

5. ஒரிஜினல் டைட்டில் பேப்பர்களை மாற்றுவதற்கான நடைமுறையை ஆராய மறக்காதீர்கள்:

5. ஒரிஜினல் டைட்டில் பேப்பர்களை மாற்றுவதற்கான நடைமுறையை ஆராய மறக்காதீர்கள்:

பொதுவாக ஒரிஜினல் டைட்டிலானது, ஒரு கடன் நிறுவனத்திடமிருந்து மற்றொரு நிறுவனத்துக்கு மாற்றப்படுவது தான் நடைமுறை, என்றாலும் பெரும்பாலான நிறுவனங்கள் டாகுமெண்டுகளைக் கடன் வாங்குபவருக்கே திருப்பி அனுப்பி வைப்பதும் நடக்கிறது. அவ்வாறு அனுப்பி வைக்கும் போது அவை காணாமல் போவதும் உண்டு. எனவே கூரியர் மூலம் டாகுமெண்டுகள் அனுப்பி வைக்கப்படும் போது அவற்றின் ட்ராக்கிங் டீடெய்ல்களைக் கேட்டு வைத்துக் கொள்ளுங்கள். சில நிறுவனங்கள் நீங்கள் அவர்களின் கிளை அலுவலகத்துக்கு நேரில் வந்து தான் ஒரிஜினல் டாகுமெண்டுகளை வாங்க வேண்டும் என்றும் நிர்ப்பந்திக்கின்றன. அதுவும் உங்கள் வேலை நேரத்தில் செல்ல வேண்டுமென்பது உங்களை எரிச்சலடையச் செய்யும். இவை எல்லாவற்றுக்கும் மேலாக, சில கடன் நிறுவனங்கள் உங்கள் கோ-பாராயோருடன் தான் வர வேண்டும் என்றும், அவ்வாறு அவரைக் கூட்டி வர இயலாத பட்சத்தில், உங்களுக்குச் சாதகமான பிஓஏ -வை அளித்தால் தான் ஒரிஜினல் டாகுமெண்டுகளை உங்களுக்கு வழங்குவோம் என்றும் கட்டாயப்படுத்துகின்றன. எதற்கும் தயாராக இருங்கள்.

 6. அனைத்து டாகுமெண்டுகளும் பத்திரமாக உள்ளனவா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள மீண்டும் எல்ஓடி எடுப்பது நலம்:

6. அனைத்து டாகுமெண்டுகளும் பத்திரமாக உள்ளனவா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள மீண்டும் எல்ஓடி எடுப்பது நலம்:

அனைத்து எம்என்சி கடன் நிறுவனங்களும் லோன் தொகை பட்டுவாடா செய்யப்பட்டவுடனேயே டாகுமெண்டுகளின் பட்டியலையும் (எல்ஓடி) வழங்கி விடுகின்றன. ஆனால், தனியார் கடன் நிறுவனங்கள் அத்தகைய பட்டியலை வழங்குவதில்லை. முதலில் கூறியது போல் பட்டியல் வழங்கப்பட்டிருக்கும் பட்சத்தில், மேற்கூறிய காரணத்தின் பொருட்டு, கடனை மாற்றுவதற்கு முன் மீண்டும் ஒருமுறை அப்பட்டியலைக் கேட்டு வாங்குவது நல்லது. தனியார் கடன் நிறுவனங்களைப் பொறுத்தவரை, நீங்கள் கடன் வாங்கும்போதும், பின் அக்கடனை மாற்ற முனையும் போதும் எல்ஓடியைக் கேட்டு வாங்கிக் கொள்வது நலம். அவ்வாறு செய்வது அனைத்தும் ஒழுங்கான முறையில் உள்ளனவா என்பதைச் சரிபார்த்துக் கொள்ள உதவும்.

 7. புதிய நிறுவனத்தின் பணப் பட்டுவாடா தேதியை முன்கூட்டியே திட்டமிடுங்கள்:

7. புதிய நிறுவனத்தின் பணப் பட்டுவாடா தேதியை முன்கூட்டியே திட்டமிடுங்கள்:

பணப் பட்டுவாடா தேதி ஒன்றை புதிய நிறுவனத்துடன் ஆலோசித்து நிர்ணயித்துக் கொள்ளுங்கள். இதன் மூலம் நீங்கள் பயணம் ஏதேனும் மேற்கொண்டிருக்கும் போது, நேரடியாக நீங்கள் வர முடியாததைக் காரணம் காட்டி பழைய நிறுவனம் புதிய நிறுவனத்திடமிருந்து கடன் தொகையை வாங்கிக் கொள்ள மறுக்கும் பட்சத்தில், இருமடங்கு வட்டித் தொகை செலுத்துவதைத் தவிர்க்கலாம். இவை அனைத்தும் உங்களை விரக்தியடைய வைத்து, கடனை மாற்றும் திட்டத்தைக் கைவிட வைப்பதற்கான உத்திகளே. எனவே புத்திசாலித்தனமாகப் புதிய நிறுவனத்துடன் ஆலோசித்துப் பரஸ்பரம் சாதகமானதொரு தேதியை நிர்ணயித்துக் கொண்டு உங்கள் கடனை நீங்களே இருந்து முடிக்கப் பாருங்கள்.

8. கடனை முடிக்கத் தேர்ந்தெடுத்திருக்கும் தேதியை முன்கூட்டியே உங்கள் முந்தைய கடன் நிறுவனத்துக்குத் தெரிவியுங்கள்:

8. கடனை முடிக்கத் தேர்ந்தெடுத்திருக்கும் தேதியை முன்கூட்டியே உங்கள் முந்தைய கடன் நிறுவனத்துக்குத் தெரிவியுங்கள்:

ஃபோர்க்ளோஸர் தொகையைக் கேட்பதன் மூலம், கடனை மாற்ற முனையும் உங்கள் எண்ணத்தை மறைமுகமாக அந்நிறுவனத்துக்கு நீங்கள் உணர்த்தியிருந்தாலும், உங்கள் ரிலேஷன்ஷிப் மானேஜர் அல்லது கோ-ஆர்டினேட்டரிடம் கடனை இந்தத் தேதியில் முடிக்கவிருக்கிறேன் என்று தெரிவிப்பதில் பிழை ஒன்றுமில்லை. இவ்வாறு கூறுவது வாடிக்கையாளர் ஒருவரை இழக்கும் அதிர்ச்சியை அவர்களுக்கு அளிக்காதிருப்பதுடன் அவர்கள் உங்களை அங்கிமிங்கும் அலைய விட்டு அவதிக்குள்ளாக்குவதிலிருந்து காத்து, நேரத்தையும் கணிசமாக மிச்சப்படுத்தும்.

9. நீங்கள் செலுத்த வேண்டிய தொகை எதுவும் நிலுவையில் உள்ளதா என்பதைச் சரிபார்த்துக் கொள்ளுங்கள்:

9. நீங்கள் செலுத்த வேண்டிய தொகை எதுவும் நிலுவையில் உள்ளதா என்பதைச் சரிபார்த்துக் கொள்ளுங்கள்:

நீங்கள் செலுத்த வேண்டிய தொகை எதுவும் பாக்கி இருப்பின், அது தொடர்பான தகவல்களை முன்கூட்டியே தெரிந்து கொண்டு, அதனைச் செலுத்துவதற்குத் தயாராக இருங்கள். லோனை முடிக்கப் போகும் போது கையோடு செக் புத்தகத்தைக் கொண்டு செல்லுங்கள்.

10. க்ளோஸர் தொகையை மூன்றாம் நபர் மூலமாக முந்தைய நிறுவனம் ஏற்றுக் கொள்ளுதல்:

10. க்ளோஸர் தொகையை மூன்றாம் நபர் மூலமாக முந்தைய நிறுவனம் ஏற்றுக் கொள்ளுதல்:

சில நேரங்களில், லோன் தொகையை முடிப்பதைத் தவிர்க்கும் பொருட்டு, கடன் நிறுவனங்கள் இது போன்ற செயல்களில் ஈடுபடுவதோடு, அவரால் நேரில் வர இயலாது என்பதை நன்கு அறிந்திருந்தும் கடன் வாங்கியவரை நேரில் வரச் சொல்லி வற்புறுத்தி அவரை விரக்தியடைச் செய்கின்றன, ஆச்சரியமூட்டும் வகையில், இதே நிறுவனம் லோன் வழங்கும் போது உட்கார்ந்த இடத்திலிருந்து உங்களை அசைய விடாமல் மிக எளிதாக வழங்குகின்றன. கிளை அலுவலகத்துக்குச் சென்று, அங்கு நீண்டிருக்கும் க்யூவில் நிற்பதற்கான நேரமோ, பொறுமையோ உங்களுக்கு இருக்காது. உங்கள் ஆஃபீஸ் பாய் அல்லது லோன் ஏஜென்ட் இதனை உங்களுக்காகச் செய்ய வேண்டும் என்று நீங்கள் விரும்பலாம். ஆனால் அவர்களின் கிளை அலுவலகத்திற்கு நீங்கள் நேரில் சென்று சந்திக்க வேண்டும் என்ற அவர்தம் எதிர்பார்ப்பிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வரை இது சாத்தியமில்லை. உங்களால் நேரில் வர சத்தியப்படாது என்பதை அவர்களிடம் உறுதியாகத் தெரிவியுங்கள். ஆனால் அவர்களுக்குத் தேவைப்படும் அனைத்து ஆத்தரைஸேஷன்களுக்கும் ஒப்புக்கொள்ளுங்கள்.

 11.கடன் தொகையைச் சமர்ப்பித்தபின் லோனை அடைப்பதற்கு எத்தனை நாட்கள் தேவைப்படும்:

11.கடன் தொகையைச் சமர்ப்பித்தபின் லோனை அடைப்பதற்கு எத்தனை நாட்கள் தேவைப்படும்:

கடன் தொகையைக் கட்டுவதோடு உங்கள் முந்தைய கடன் நிறுவனத்துக்கு வட்டி கட்டுவது முடிவுக்கு வந்து விட்டதாக எண்ணி மகிழ்ச்சி அடையாதீர்கள். சில கடன் நிறுவனங்கள் க்ளியரன்ஸுக்கான டிமாண்ட் டிராஃப்ட் அனுப்புவதற்கும், வெவ்வேறு ஃப்யூட்டைல் க்ளாஸஸைக் காட்டுவதற்கும் சுமார் 8 முதல் 9 நாட்கள் வரை எடுத்துக் கொள்கின்றன. எவ்வளவு விரைவாகப் பே-ஆர்டரை பாங்க் செய்ய முடியுமோ அவ்வளவு விரைவாகச் செய்து லோனை முடித்துத் தர வேண்டும் என்ற உங்கள் அறிவுறுத்தலில் உறுதியாக இருங்கள். அவர்களுக்கு டிடி அனுப்பியவுடன் உங்கள் லோன் முடிக்கப்பட்டிருக்கும் என்று நீங்களாக எண்ணிக் கொள்ளாதீர்கள்.

 12. முந்தைய கடன் நிறுவனத்திடமிருந்து எப்போது உங்களுக்கு

12. முந்தைய கடன் நிறுவனத்திடமிருந்து எப்போது உங்களுக்கு "நோ டியூ லெட்டர்" கிடைக்கப்பெறும்:

உங்களின் அவசரமான அலுவல்களுக்கிடையே இக்கடிதத்தை நீங்கள் வாங்க மறந்து விடக்கூடும். அவ்வாறு நீங்கள் மறந்து விட்டால் ஐந்து வருடங்களுக்குப் பின் மறுபடியும் நீங்கள் கடன் வாங்க முனையும் போது மிகுந்த அவதிக்குள்ளாக நேரிடும். கடன் வழங்கிய நிறுவனம் கிரெடிட் ப்யூரோவில் இத்தகவலை பதிவு செய்ய மறந்து விடலாம். அத்தகைய சூழலில், நீங்கள் லோனை அக்குறிப்பிட்ட காலகட்டத்தில் அடைத்திருக்கிறீர்கள் என்பதை நிரூபிப்பதற்கான எந்த டாகுமெண்ட் ஆதாரமும் இல்லாமல் போய்விடும். முந்தைய கடன் நிறுவனத்திடம் சென்று அவர்கள் கிரெடிட் நிறுவனங்களுக்கு அளித்த ரிப்போர்ட்டை மாற்றச்செய்வதென்பது அலுப்புத் தரக்கூடியது என்பதோடு லோன் பெறுவதற்கான உங்கள் வாய்ப்பும் அதற்குள் கணிசமாகக் குறைந்து விடும்.

 13. இசிஎஸ் -ஐ முடிப்பதற்கான நடைமுறை என்ன:

13. இசிஎஸ் -ஐ முடிப்பதற்கான நடைமுறை என்ன:

பெரும்பாலும் அனைத்து கடன் நிறுவனங்களும் ஒவ்வொரு மாதமும் உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து இஎம்ஐ தொகையை டெபிட் செய்து கொள்கின்றன. போஸ்ட்-டேட்டட் செக்குகள் (பிடிஸி) வழங்கும் முறை முன்பு புழக்கத்தில் இருந்து வந்தது. ஆனால் தற்போது அம்முறை முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு இசிஎஸ் வழங்கப்படுகிறது. லோனை முடித்த பின்னும் இஎம்ஐ கட்டுவதைத் தவிர்க்க, லோனை முடித்து விட்டதாக உங்கள் பேயிங் பேங்கில் மறக்காமல் தெரிவியுங்கள் (லோனை முடித்து விட்டதற்கான ஆதாரத்தை அவர்கள் கோரலாம்). முந்தைய கடன் நிறுவனம் தங்களுக்குரிய வசூல் நிறுவனங்களிடம் இத்தகவலை முறையாகத் தெரிவிக்க மறந்து விடுவதன் காரணமாக இத்தகைய தவறுகள் அடிக்கடி நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன.

இதுவரை கூறிய விஷயங்கள் அனைத்தும் உங்களைச் சிறப்பாகத் தயார்படுத்திக் கொள்ள உதவும் என்று நாங்கள் நம்புகிறோம்!

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+