உங்கள் குழந்தைகளுக்கு எந்த வயதில் எதை கற்றுக்கொடுக்க வேண்டும்: ஒரு நிதியியல் பார்வை

நாம் எப்போது நம் குழந்தைகளுக்கு மிகச் சரியாக நிதிக் கல்வியை அறிமுகப்படுத்துகிறோம்? உறவினர்களிடமிருந்து அவர்கள் பெறும் பணத்தை அவர்களையே வைத்திருக்க அனுமதிக்கும் போதா? அல்லது அவர்கள் தங்கள் நண்பர்களுடன் இரவு விருந்துக்குச் சென்று அனைத்துச் செலவுகளையும் அவர்களே சமாளித்துக் கொள்ளத் திட்டமிடும் போது அனுமதிக்கும் போதா?

எப்போது?

எப்போது?

உண்மையில் இதற்கெல்லாம் முன்பே அதை நாம் தொடங்கி விடுகிறோம். அவர்கள் நம்மிடம் ஒரு பொம்மையைக் கேட்கும் போது பெற்றோராக நாம் அதைவிட அதிக உற்சாகமான செயல் வேறு ஏதேனும் செய்யும் படி ஊக்குவிக்கும் போதே அதைத் தொடங்கிவிடுகிறோம். மேலும் அவர்கள் உணவை வீணாக்கும் போது அந்த உணவு கடின உழைப்பைக் கொண்டு பெற்றது எனவே அவர்கள் வீணாக்கக்கூடாது என்று சொல்லும் போதே தொடங்கிவிடுகிறோம். நாம் கற்றுத் தரும் இந்தச் சின்னச் சின்னப் பழக்கங்கள் குழந்தைப் பருவத்திலிருந்தே அவர்கள் மனதில் பணத்தின் மதிப்பை ஆழமாகப் பதியச் செய்து விடுகின்றன.
உங்கள் பிள்ளைகளை நிதி ரீதியாகப் புத்திசாலிகளாக்க உங்களுக்கு உதவக்கூடிய சில வழிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

3 முதல் 5 வயது வரை

3 முதல் 5 வயது வரை

நீங்கள் பண விஷயங்களை உங்கள் குழந்தைகளுக்கு இவ்வளவு விரைவிலேயே அறிமுகப்படுத்த வேண்டிய நேரம் இது என்பதை முதலில் நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். குழந்தைகள் மிக அழகாக இருக்கும் மற்றும் நாம் செல்லம் கொஞ்சும் வயது இது, ஆனால் அவர்கள் "வாங்குதல்" மற்றும் "பணம்" போன்ற கருத்துக்களைப் புரிந்து கொள்ளத் தொடங்கும் வயதும் இது தான்.

பொருட்களை வாங்க நமக்குப் பணம் தேவை, நாம் பணம் சம்பாதிக்கக் கடினமாக உழைக்க வேண்டும். இந்தச் செயல்பாட்டில் சில வேடிக்கைகளை நீங்கள் சேர்க்கும் போது அது எளிதானதாகி விடுகிறது. அவர்களுடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொள்ளுங்கள். அவர்களுக்கு ஒரு பெரிய பர்கரோ அல்லது டிஸ்னி இளவரசி உடையோ வேண்டுமென்றால் அவர்களுடைய நன்னடத்தையின் மூலம் உங்களைச் சந்தோஷப்படுத்தி மதிப்பெண்களைப் பெற வேண்டும். பர்கருக்கு 100 மதிப்பெண்களாகவும் உடைக்கு 500 மதிப்பெண்களாகவும் இருக்கலாம். பணத்தை அவர்களுக்கு எண்களை எண்ணுவதற்குக் கற்றுக் கொடுக்கப் பயன்படுத்தப்படலாம்.

 

6 முதல் 12 வயது வரை

6 முதல் 12 வயது வரை

அவர்கள் ஏற்கனவே ஆரம்பப் பள்ளி அல்லது மேனிலைப் பள்ளிக்குச் சென்று கொண்டிருப்பார்கள். அவர்களுக்குச் சலுகைப் பணம் தேவைப்படும் நேரமிது. இந்தக் காலகட்டத்தில் அவர்களுடைய தேவைகள் பெரிதாகிறது. அவர்களைச் சுற்றிலுமுள்ள விஷயங்கள் அவர்களை வெகுவாகப் பாதிக்கும். அவர்களுடைய தேர்வுகளையும் தான். இன்று பள்ளிகள் ‘சமூக ரீதியாக' போட்டியிடுவதற்குப் பெற்றோர்கள் மீது கொடுக்கும் மூர்க்கமான அழுத்தத்தின் அளவானது குழந்தையையும் சேர்த்தே பாதிக்கிறது. அவர்கள் பிராண்டட் ஆடைகளையோ அல்லது விலையுயர்ந்த பொருட்களையோ விரும்பலாம். அவர்களுடைய வளரிளம் பருவத்தில் நீங்கள் பணத்தின் மதிப்பை அவர்களைப் புரிந்து கொள்ளச் செய்து புத்திசாலித்தனமாக முடிவுகளை எடுக்கிறீர்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

மோனோ போலி போன்ற விளையாட்டுக்கள் உங்கள் வேலையை எளிதாக்குகின்றன. அத்தகைய விளையாட்டுக்களை ஊக்குவியுங்கள் மேலும் அவர்களுடன் அமர்ந்து விளையாடுங்கள். உங்கள் குழந்தையின் பெயரில் ஒரு வங்கிக் கணக்கைத் துவங்குவதற்கு இது மிகச் சரியான நேரமாகும். அவர்களுடைய வங்கிக் கணக்கு அவர்களைப் பணத்தைச் சேமிக்க ஊக்குவிக்கும். ஒரு எளிய வாழ்க்கை முறையை அவர்களை வாழக் கற்றுக் கொடுங்கள். வெற்றிகள் எளிமையான தொடக்கங்களில் தான் ஆரம்பமாகின்றன என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் கற்றுக் கொடுக்கும் பழக்கங்கள் வயதுக்கு வந்த பிள்ளைகளாக அவர்கள் பணத்தைச் சிறப்பாகக் கையாளவும் அதிகமாகச் சேமிக்கவும் உதவும்.

 

13 முதல் 18 வயது வரை

13 முதல் 18 வயது வரை

இந்த வயதில் பெற்றோர்கள் அவர்களுடைய பிள்ளைகளுக்கு நண்பனாகவோ அல்லது எதிரியாகவோ இருக்கும் வயது இது. நவீன உலகின் பேடனுக்கும் மற்றும் நவீன கருவிகளுக்கும் அவர்களுக்குப் புதிதாக அறிமுகமாகும் மேலும் தற்போது அவை தான் அவர்களுடைய சிறந்த நண்பர்களாகவும் இருக்கும் காலகட்டம் இது. அத்தகைய ஆடம்பர பழக்கவழக்கங்கள் குறிப்பிடத் தகுந்த அளவு செலவுகளைக் கொண்டு வரும். அவர்களை நிதி ரீதியாகப் புத்திசாலிகளாக்க அவர்களை நிதி சார்ந்த குடும்பப் பேச்சுக்களில் ஈடுபடுத்துங்கள். அவர்களுடைய கண்ணோட்டத்தைக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். இந்த வயதில் அவர்கள் ஏற்கனவே உயர் படிப்புகளுக்காகத் தயாராகிக் கொண்டிருப்பார்கள். எனவே நிதி சார்ந்த விஷயங்களைப் பற்றி அவர்களுடன் விவாதியுங்கள். அவர்களுக்குக் கல்லூரிக் கட்டணங்கள், மாணவர் வங்கிக் கடன்கள் மற்றும் கிரெடிட் கார்டுகள் போன்றவற்றைப் பற்றி விளக்குங்கள். இது அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் மேலும் அவர்களை நிதி ரீதியான விஷயங்களைக் கவனமாகக் கண்காணிப்பவராக மாற்றும்.

இத்துடன் இது முடிந்து விடுவதில்லை. வருங்காலத்தில் அவர்கள் தங்கள் முதல் சம்பளக் காசோலையை வாங்கும் போது உங்களிடமிருந்து பெறும் ஒரு நல்ல முதலீட்டு அறிவுரை அவர்களுக்கு நீண்ட காலத்திற்கு நல்ல செல்வத்தை உருவாக்க உதவும். இன்னும் சிறப்பாக என்றென்றைக்கும் நிதி சார்ந்து செயல்பட உங்கள் வழிகாட்டுதல்கள் உதவும். "ஒரு மனிதனுக்கு நீங்கள் ஒரு மீனைக் கொடுத்தால் அவனுக்கு அந்த ஒரு நாளுக்கு மட்டுமே அவனுக்கு உணவளிப்பீர்கள்; அவனுக்கு மீன் பிடிக்கக் கற்றுக் கொடுத்து விட்டீர்களானால் வாழ்நாள் முழுவதும் அவனுக்கு உணவளித்தவராவீர்கள்" என்னும் புகழ்பெற்ற வாசகத்தை நினைவில் கொள்ளுங்கள். இங்கே அந்த மனிதன் என்பது உங்கள் குழந்தையைக் குறிக்கும். முதலீடு செய்வதாக இருந்தாலோ அல்லது உங்கள் குழந்தைக்கு முதலீட்டைப் பற்றிக் கற்றுக் கொடுப்பதாக இருந்தாலோ விரைவில் தொடங்குவதே எப்பொழுதும் நன்மை பயக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+