ராஜீவ்காந்தி ஈக்விட்டி சேமிப்புத் திட்டம் பற்றித் தெரியுமா உங்களுக்கு?

உள்நாட்டு மூலதன சந்தைகளில் சிறு முதலீட்டாளர்களின் சேமிப்பை ஊக்கப்படுத்துவது என்ற நோக்கத்துடன் இந்தியாவில் மூலதன முதலீட்டாளர்களுக்கான ஒரு புதிய மூலதன வரிச் சாதகச் சேமிப்புத் திட்டமாக, ராஜீவ் காந்தி மூலதன பங்கு சேமிப்புத் திட்டம் அல்லது ஆர்ஜிஇஎஸ்எஸ் என்பதற்காக அறிமுகம் செய்யப்பட்ட ஒரு திட்டமாகப் பார்க்கப்படுகிறது.

 பா.சிதம்பரம்

பா.சிதம்பரம்

மத்திய நிதியமைச்சராக இருந்த பா.சிதம்பரம் மூலம் கடந்த 2012 ஆம் ஆண்டுச் செப்டம்பர் 21ல் இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டிருந்தது. இது முழுக்க முழுக்கப் பங்கு சந்தையில் சில்லறை முதலீட்டாளர்களுக்காக முதல் முறையாக அமைக்கப்பட்டது ஆகும்.

 

 

யாருக்கு லாபம்?

யாருக்கு லாபம்?

இந்தத் திட்டத்தின் மூலம் ஆண்டிற்கு ரூ.12 லட்சத்திற்கும் குறைவான வருமானம் இருந்து ரூ.50 ஆயிரம் வரை முதலீடு செய்யும் புதிய முதலீட்டாளர்களுக்கு வரிச் சலுகைகள் அளிக்கப்படுகிறது. இந்தத் திட்டத்திற்கு 2012-13 இல் ஆண்டு வருமானம் ரூ.10 லட்சம் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், 2013-14 இல் பயனாளிகளுக்காக ரூ.12 லட்சமாக உயர்த்தப்பட்டது.

சில்லறை முதலீட்டாளர்கள்

சில்லறை முதலீட்டாளர்கள்

இந்தத் திட்டத்தின் மூலம் பணம் ஒரே இடத்தில் குவிக்கப்படுவது தடுக்கப்பட்டு, உள்நாட்டு மூலதன சந்தைகளின் கீழ்மட்டத்தை மேம்படுத்துவதை ஊக்கப்படுத்துவது தவிர, இந்தியாவில் ஒரு பங்கு கலாச்சாரத்தை வளர்க்கத் திட்டமிடப்பட்டது. மேலும் இதன்மூலம் இந்திய பங்கு சந்தையில் சில்லறை முதலீட்டாளர்களின் அடித்தளத்தை விரிவுபடுத்த முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வரி விலக்கு

வரி விலக்கு

ஓராண்டின் வரி செலுத்த வேண்டிய வருமானத்தில் இருந்து, ஒரு நிதியாண்டில் அதிகபட்சமாக ரூ.50 ஆயிரம் வரை தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு வரி விதிக்கப்பட்ட தொகையில் இருந்து முதலீடு செய்யும் போது, ஒரு முதலீட்டாளருக்கு ஆண்டிற்கு 50% வரை வரி விலக்கம் பெறலாம்.

வருமான வரி சட்டத்தின் கீழ் தற்போதைய வரிச் சேமிப்புத் திட்டங்களுக்கு மேலாகவும் அதிகமாகவும், கூடுதலான வரி சலுகைகளை இது அளிக்கிறது.

 

 பலன்

பலன்

ராஜீவ்காந்தி ஈக்விட்டி சேமிப்புத் திட்டத்தில் செய்யப்பட்ட முதலீடுகளின் பலன்களை, ஒரு ஆண்டிற்குப் பிறகு மட்டுமே அறிந்து கொள்ள முடியும். இது, மற்ற எல்லா வரிச் சேமிப்பு திட்டங்களுக்கும் முரணானதாக அமைகிறது.

தவனை

தவனை

வரி கோருதலை நிரப்பும் வகையில், ஆண்டு முதலீடுகளைத் தவணைகளாக மட்டுமே செலுத்த அனுமதிக்கப்படுகிறது.

இதனால் கிடைக்கும் பலனை மூன்று ஆண்டுகளுக்கு அனுபவிக்க முடியும். ஈவுத்தொகைக்கு வரி இல்லை. இந்தத் திட்டமானது, சில்லறை முதலீட்டுப் பிரிவு குறித்த மிக நீண்டகால நன்மைகளை அளிப்பதால், நாட்டில் நிதி மீதான ஈடுபாடு அதிகரிக்கிறது.

 

அடுத்தக் கட்டம்

அடுத்தக் கட்டம்

இந்தத் திட்டம் வெற்றி பெறும் பட்சத்தில், வங்கி வைப்பு நிதி மற்றும் எப்டிகள் போன்ற பழமையான சேமிப்பு வழிகளில் தங்களின் சொத்துகளை முதலீடு செய்வது திசைமாறி, மூலதன சந்தைகளில் முதலீடு செய்வது அதிகரித்து, சில்லறை முதலீட்டாளர் என்ற அடையாளம் மறைந்து பன்முகத்தன்மைக் கொண்டவர்களாக மாறுவதோடு, மூலதன உருவாக்கம் கொண்ட சொத்துகளின் கூடுதல் உற்பத்திக்கும் வழிவகுக்கும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+