முதலில் எந்த கடனை தான் தீர்க்க வேண்டும்..?

Posted By: meganathan
Subscribe to GoodReturns Tamil

ஒருவர் தனக்குக் கிடைக்கும் குறைந்த உதவியைக் கொண்டு மன நிறைவு பெறும் பட்சத்தில் கடன்கள் தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கிறது. உடனடி தீர்வை காண விரும்பும் கோடி கணக்கானோரின் வாழ்க்கையைக் கிரெடிட் கார்டு மற்றும் தனிநபர் கடன்கள் எளிமையாக்கி விடுகின்றன.

அந்த வகையில் பெரிய தொகையாகக் கிடைக்கும் வீட்டுக் கடன், வாகன கடன் அல்லது தனி நபர் கடன் என ஒருவரது வாழ்க்கையில் கடன் பட்டியல் நீளும் போது, அவரது மனதில் எழும் முதல் கேள்வி இது தான்.

வாங்கியிருக்கும் கடன்களில் முதல் தீர்க்க வேண்டிய கடன் எது? என்பது தான்!

உயர் மதிப்புக் கொண்ட கடன்

ஒருவர் வாங்கியிருக்கும் கடன்களில் முதற்கட்டமாக உயர் மதிப்புக் கொண்ட கடன்களைத் தீர்க்க வேண்டும். ஆனால் கிரெடிட் கார்டு மற்றும் தனி நபர் கடன்களைத் தான் ஒருவர் முதலில் தீர்க்க வேண்டும். வீட்டுக் கடன் மற்றும் வாகன கடன் உள்ளிட்டவற்றை இரண்டாம் கட்டமாகத் தீர்க்கலாம்.

கடன் தொகை

கடன் வாங்குவோரில் பலரும் முதலில் பெரிய கடன் அல்லது சிறிய கடன்களைத் தீர்க்க நினைப்பர். ஒவ்வொருவர் மன நிலைக்கு ஏற்ப சிலர் சிறிய தொகையை முதலிலும், சிலர் பெரிய தொகையை முதலிலும் தீர்க்க நினைப்பர்.

ஆனால் வணிக நிபுணர்கள் கூற்றின் படி ஒருவர் வாங்கியிருக்கும் கடன் தொகை பிரச்சனையே இல்லையாம். இதற்கு எளிமையான உதாரணம் மூலம் புரிந்து கொள்ள முடியும்.

 

உதாரணம்

ஒருவர் ரூ.1 லட்சம் மதிப்புடைய இரண்டு கடன்களை வாங்கியிருக்கிறார். இதில் ஒரு தொகைக்கான வட்டி 18% மற்றொரு தொகைக்கான வட்டி 8.5% என எடுத்துக் கொள்வோம். முதல் கடன் தொகை 12 மாத தவணைக்கு மாற்றாக ஒரே சமயத்தில் செலுத்தும் போது ரூ.10,016 வரை வட்டியைச் சேமிக்க முடியும்.

இரண்டாவது கடனை 12 மாத தவணைக்கு மாற்றாக ஒரே சமயத்தில் செலுத்தும் போது ரூ.4,664 மட்டுமே வட்டியில் சேமிக்க முடியும்.

 

கிரெடிட் கார்டு

அதிக மதிப்புக் கொண்ட கடன்களை முதலில் செலுத்த வேண்டும். அதாவது கிரெடிட் கார்டு அல்லது தனி நபர் கடன்கள் அதிக வட்டி கொண்டவை என்பதால் இவற்றை முதலில் செலுத்துவது சிறந்தது.

ஒருவரின் ஆண்டு வருமானம் 8 முதல் 10 சதவிகிதம் வரை அதிகரிக்கும் பட்சத்தில் இவ்வாறான கடன்கள் இருமடங்கு வட்டியை வசூலிக்கலாம்.

 

பல்வேறு சிக்கல்கள்

அதிகத் தொகை கொண்ட கடன்களை முதலில் செலுத்துவது சிறப்பானது எனப் பலரும் நினைத்தாலும், இவ்வாறு செய்வதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கின்றன.

சில சமயங்களில் குடும்பத்தார் வற்புறத்தல்களால் தங்க நகைக்குப் பெற்ற கடன்களை முதலில் செலுத்தி தங்க நகையை வீட்டிற்கு எடுத்து வரப் பலரும் முதலில் செய்கின்றனர்.

தங்க நகைக் கடன்

தங்க நகைக்கான கடன் வட்டி குறைவாக வசூலிக்கப்படும் நிலையில், குடும்பத்தார் வற்புறுத்தல்களின் படி அவற்றை முதலில் தீர்க்கும் பட்சத்தில் மன நிறைவு கொண்டாலும், பின் அதிகத் தொகை கொண்ட கடனை தீர்க்கக் கடுமையாக உழைப்பர்.

சரியான திட்டமிடல்

கடன்களைத் தீர்க்கும் போது அவற்றுக்கான தொகையையும் மனதில் கொள்ள வேண்டும். ஒருவேளை உங்களுக்குத் திடீரென ரூ.2 லட்சம் கிடைக்கிறது என எடுத்துக் கொள்வோம். இதுபோன்ற சூழலில் 18% வட்டி கொண்ட தனி நபர் கடனை முதலில் தீர்க்க வேண்டும் என நினைப்பீர்கள்.

தனிக் கட்டணம்

ஆனால் ஒரு நிமிடம் காத்திருந்து செயல்பட வேண்டியது அவசியம் ஆகும். அதாவது சில கடன்களை முன்கூடியே தீர்க்கும் போது அதற்கெனத் தனிக் கட்டணம் செலுத்த வேண்டும்.

இவ்வாறு செய்யும் போது கையில் இருக்கும் பணம் முழுக்கத் தீர்ந்து போகலாம். அடுத்து வரும் பணத் தேவைக்கு மீண்டும் தனி நபர் கடன் வாங்க வேண்டிய சூழல் ஏற்படலாம்.

 

செயலாக்கக் கட்டணம்

புதிதாக வாங்கும் கடனிற்குச் செயலாக்க கட்டணம் (Processing Fee) செலுத்த வேண்டும். அந்த வகையில் கடன் தீர்க்கும் போது உங்களது நிதி நிலையைச் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டியது அவசியமானதாகும்.

திடீரெனக் கிடைக்கும் பெரிய தொகையைக் கொண்டு உயர் மதிப்பு மற்றும் பாதுகாப்பற்ற கடன்களைத் தீர்க்க வேண்டும். குறிப்பாக வீட்டுக் கடன்களை மெல்ல மாத தவணை மூலம் செலுத்த முடியும்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Which loan should you close first? Bigger one or the costlier one?

Which loan should you close first? Bigger one or the costlier one? - Tamil Goodreturns | முதலில் எந்த கடனை தான் தீர்க்க வேண்டும்..? - தமிழ் குட்ரிட்டன்ஸ்
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns