தற்போதைய வருமான வரி சட்டத்தின் படி, 80சி வருமான வரி சட்ட பிரிவின் கீழ் நீங்கள் முதலீடு செய்த வரிச் சேமிப்பு ஃபிக்சட் டெபாசிட்டுகளுக்கு ரூ. 1.5 இலட்சம் வரை தள்ளுபடியை கோரலாம். அப்படி முதலீடு செய்யப்பட்ட தொகை நிகர மொத்த வருமானத்தில் கழிக்கப்பட்டு வரிவிதிப்பு வருமானம் கணக்கிடப்படுகிறது.
வரிச் சேமிப்பு வைப்பு நிதிகளில் முதலீடு செய்வதற்கு முன் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

1. வரிச் சேமிப்புப் பிக்சட் டெபாசிட் திட்டங்களில் தனிநபர்கள் மற்றும் இந்து கூட்டு குடும்பத்தினர் மட்டுமே முதலீடு செய்ய முடியும்.
2. இந்த வைப்பு நிதிகள் குறைந்தபட்ச தொகையில் தொடங்கலாம் அந்தத் தொகை வங்கிக்கு வங்கி மாறுபடும்.
3. இந்த டெபாசிட்டுகளுக்கு லாக் இன் பீரியட் 5 வருடங்களாகும். இந்த வைப்பு நிதிகளில் முதிர்வு காலத்திற்கு முந்தைய திரும்பப் பெறுதல் மற்றும் கடன் பெறுதல் இயலாது.
4. ஒரு நபர் இந்த வைப்பு நிதிகளில் கிராமிய மற்றும் கூட்டுறவு வங்கியைத் தவிர மற்ற எந்தவொரு பொது அல்லது தனியார் வங்கிகளின் வழியாக முதலீடு செய்யலாம்.
5. ஐந்து வருட அஞ்சல் அலுவலக டைம் டெபாசிட்டுகளும் வருமான வரிச்சட்டம் 1961 பிரிவு 80 சி இன் கீழ் வரிவிலக்கிற்குத் தகுதி பெறுகிறது.
6. போஸ்ட் ஆபீஸ் ஃபிக்சட் டெபாசிட்டுகள் ஒரு அஞ்சல் அலுவலகத்திலிருந்து மற்றொரு அஞ்சல் அலுவலகத்திற்கு மாற்றிக் கொள்ளலாம்.
7. வைப்பு நிதிகள் ஒற்றை அல்லது இணை கணக்காக வைத்திருக்கலாம். இணை கணக்காக இருக்கும் பட்சத்தில் வரிப் பயன்கள் முதல் உரிமையாளருக்கு மட்டுமே கிடைக்கும்.
8. ஈட்டும் வட்டி முதலீட்டாளரின் வரி அடைப்புக்குறிக்குள் வரிவிதிப்புக்குட்பட்டது. எனவே டிடிஎஸ் பொருந்தும். டெபாசிட்டுகள் மீதான வட்டி மாதாந்திர/காலாண்டு அடிப்படையில் செலுத்தப்படும் அல்லது மீண்டும் முதலீடு செய்து கொள்ளலாம். ஒரு தனிநபர் வங்கிக்கு 15ஜி (அல்லது மூத்த குடிமக்களுக்கு 15ஹெச்) படிவத்தைச் சமர்ப்பிப்பதன் மூலம் ஈட்டும் வட்டி மீதான டிடிஎஸ் தள்ளுபடியை தவிர்க்கலாம்.
9. இந்த வைப்பு நிதிகளுக்கு நியமன வசதி உண்டு.
10. பெரும்பாலான வங்கிகள் மூத்த குடிமக்களுக்கு வைப்பு நிதிகளில் சற்று அதிக வட்டியை வழங்குகின்றன. (மூத்த குடிமக்கள் அல்லாதவர்களுக்குத் தரும் வட்டியோடு ஒப்பிடும் போது) இந்த வட்டி விகித மாறுபாடு வரிச் சேமிப்பு வைப்பு நிதி களுக்கும் உள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications