பேஸ்புக்கில் எஸ்பிஐ வங்கி சேவையினை பயன்படுத்துவது எப்படி?

வாடிக்கையாளர்களுக்கு அனைத்து வகையிலும் எளிமையான வங்கி சேவையினை வழங்குவதற்காக எஸ்பிஐ மிங்கள் செயலி பேஸ்புக் வழியாக வங்கி சேவையினை வழங்குகிறது. இந்தச் சேவை மூலமாக வங்கி வாடிக்கையாளர்கள் பேஸ்புக்கில் உள்ள தங்களது நண்பர்களுக்குப் பரிவர்த்தனையினைச் செய்யவும் முடியும்.

எஸ்பிஐ வங்கியின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கம் மூலமாகப் பணப் பரிவர்த்தனை செய்வது என்று விளக்கமாக இங்குப் பார்க்கலாம்.

எஸ்பிஐ மிங்கள் செயலியினை ஆண்டிராய்டு மற்றும் ஐஓஎஸ் என்று இரண்டு இயங்கு தளங்களிலும் பயன்படுத்த முடியும். பயனர்கள் இந்தச் செயலியினை எஸ்பிஐ வங்கியின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் இருந்து பயன்படுத்திப் பின்வரும் சேவைகளை எல்லாம் பெறலாம்:

1. வங்கி கணக்கு இருப்புத் தொகையினைக் காண்பது
2. மினி ஸ்டேட்மெண்ட்
3. பணப் பரிமாற்றம்
4. செக் புக் நிர்வகித்தல்
5. எஸ்எம்எஸ் ரெஜிஸ்ட்ரேஷன்
6. டெபிட் அல்லது ஏடிஎம் கார்டை துண்டித்தல்
7. P2P பணப் பரிமாற்றம்
8. மாதாந்திர செலவு
9. கனவு இல்லம்

எஸ்பிஐ மிங்கள் செயலி மூலம் வங்கி கணக்கை பயன்படுத்த முதலில் வங்கி கணக்கு அல்லது டெபிட் கார்டு மற்றும் பின் எண் போன்றவற்றைப் பயன்படுத்திப் பதிவு செய்ய வேண்டும். சரிபார்ப்பிற்கு ஒரு முறை கடவுச் சொல் அனுப்பப்படும். அதனை உள்ளிட்ட பிறகு வங்கி செவையினைப் பயன்படுத்த முடியும்.

எஸ்பிஐ மிங்கள் செயலியை பயன்படுத்தி வங்கி சேவைகள் மற்றும் பரிவர்த்தனை உள்ளிட்டவையினைச் செய்ய மற்றும் பயன்[அடுத்த நீங்கள் முதலில் வங்கி கணக்கில் உள்நுழைய வேண்டும்.

 வங்கி கணக்கு இருப்புத் தொகை சரிபார்த்தல்

வங்கி கணக்கு இருப்புத் தொகை சரிபார்த்தல்

எஸ்பிஐ மிங்கள் செயலியில் பேஸ்புக் பக்கத்துடன் உள்நுழைந்த பிறகு இருப்புத் தொகையினைப் பார்க்கவும் என்பதைக் கிளிக் செய்வதன் மூலம் வங்கி கணக்கில் எவ்வளவு பணம் உள்ளது என்பதைக் காண முடியும்.

 மினி ஸ்டேட்மெண்ட்

மினி ஸ்டேட்மெண்ட்

மினி ஸ்டேட்மெண்ட்டை பார்க்கவும் என்பதைக் கிளிக் செய்வதன் மூலமாக உங்கள் வங்கி கணக்கில் நடைபெற்ற கடைசி 10 பரிவர்த்தனைகளின் விவரங்கள் பட்டியல் தேதி உள்ளிட்ட விவரங்களுடன் கிடைக்கும்

 பணப் பரிமாற்றம்

பணப் பரிமாற்றம்

எஸ்பிஐ மிங்கள் செயலியில் பணப் பரிமாற்றம் செய்ய உங்கள் வங்கி கணக்கில் மொபைல் எண் இணைக்கப்பட்டு இருக்க வேண்டும். ஒரு நாளைக்கு அதிகபட்சம் 5,000 ரூபாய் வரை பணப் பரிமாற்றம் செய்ய முடியும்.

பணம் பரிமாற்றம் என்ற தெரிவை தேர்வு செய்த உடன் எஸ்பிஐ வங்கி கணக்கிற்குப் பணம் அனுப்ப வேண்டுமா அல்லது பிற வங்கி கணக்குகளுக்கு அனுப்ப வேண்டுமா என்பதைத் தேர்வு செய்து பணம் அனுப்பலாம்.

 

டெபிட் அல்லது ஏடிஎம் கார்டை பிளாக் செய்தல்

டெபிட் அல்லது ஏடிஎம் கார்டை பிளாக் செய்தல்

உங்க: டெபிட் அல்லது ஏடிஎம் கார்டானது தொலைந்து போனால் மிங்கள் செயலியில் உள்ள ஏடிஎம் கார்டை பிளாக் செய்யவும் என்ற தெரிவை தேர்வு செய்ய வேண்டும். பின்னர்த் தொலைந்து போன டெப்டி கார்டு அல்லது ஏடிஎம் கார்டு எண்ணைத் தேர்வு செய்து பிளாக் செய்யலாம்.

அருகில் உள்ள கிளையினைக் கண்டறிதல்

அருகில் உள்ள கிளையினைக் கண்டறிதல்

நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்து அருகில் உள்ள எஸ்பிஐ வங்கி கிளையினைத் தெரிந்துகொள்ளவும் எஸ்பிஐ மிங்கள் செயலி உதவும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+