ஜீரோ பேலென்ஸ் சேமிப்பு கணக்கு பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை..!

By Staff
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பணத்தைச் சம்பாதித்து அதைச் சேமிப்பது என்பது ஒரு கலை. ஆதி காலத்தில் சம்பாதித்த பணத்தைப் பாதுகாக்க ஒருவருக்கும் தெரியாமல் புதைத்து வைத்தனர். புதைத் இடத்தை மறந்த பின்னர் ஒவ்வொரு இடமாகத் தேடி தன்னுடைய செல்வத்தைப் புதையலாக மாற்றியவர்கள் பலர். நல்ல வேளை நமக்கு அத்தகைய சிரமங்கள் இல்லை. நம்முடைய பணத்தைச் சேமிக்க வங்கி என்றொரு அமைப்பு உள்ளது.

ஒரு வங்கியில் அவர்கள் கேட்கும் ஆவணங்களைச் சமர்ப்பித்து வங்கிக் கணக்கைத் திறப்பது எளிது. இருப்பினும், எந்தவிதமான வங்கிக் கணக்கை தேர்ந்தெடுப்பது என்பது ஒரு குழப்பமான விஷயமாகும். ஏனெனில் வங்கிகள் பல்வேறு வகையான கணக்குகளை வழங்குகின்றன. அவற்றில் இருந்து நமக்கு உகந்த சரியான சேமிப்புக் கணக்கைத் தேர்ந்தெடுப்பது மிகவும் முக்கியம். ஏனெனில் ஒவ்வொரு வகையான வங்கிக் கணக்கும் ஒவ்வொரு வகையிலான பலன்களை வழங்குகின்றன.

ஜீரோ இருப்புச் சேமிப்பு கணக்கு

ஜீரோ இருப்புச் சேமிப்பு கணக்கு

ஜீரோ இருப்புச் சேமிப்பு கணக்கு இதில் ஒரு மிக முக்கியமான சேமிப்புக் கணக்காகும். இதன் பெயர் குறிப்பிடுவது போல் இந்தக் கணக்குகளில் ஒரு மாதாந்திர சராசரித் தொகையைப் பராமரிக்கும் தொந்தரவு வாடிக்கையாளர்களுக்கு இல்லை. எனவே இது வாடிக்கையாளர்களுக்கு மிகவும் லாபகரமானது. பிற வங்கிக் கணக்குகளில் மாதாந்திர குறைந்த பட்ச தொகையைப் பராமரிக்கா விட்டால் அபராதம் விதிக்கப்படும்.

பிரதான் மந்திரி ஜான் தண் யோஜனா

பிரதான் மந்திரி ஜான் தண் யோஜனா

இந்த வகையான வங்கிக் கணக்குகள் சம்பளக் கணக்கு வைத்திருப்பவர்கள் போன்ற வாடிக்கையாளர்கள் மற்றும் வழக்கமான சேமிப்பு வங்கிக் கணக்கை வாங்க முடியாதவர்களுக்குப் பிரதான் மந்திரி ஜான் தண் யோஜனா (PMJDY) திட்டம் மூலம் வழங்கப்படுகிறது. இத்தகைய கணக்கைத் திறக்க, நீங்கள் அடிப்படையான KYC ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.

நீங்கள் ஜீரோ இருப்புச் சேமிப்பு கணக்கு பற்றி அறிந்து கொள்ள வேண்டிய முக்கியமான 5 விஷயங்களைப் பாருங்கள்.

 

அபராதம் கிடையாது

அபராதம் கிடையாது

ஒரு வழக்கமான சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகையை வாடிக்கையாளர்கள் பராமரிக்க வேண்டும். அவ்வாறு இல்லாத பட்சத்தில் வாடிக்கையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகின்றது. இத்தகைய கணக்குகளில் அந்தத் தொல்லை அறவே இல்லை. எனவே நீங்கள் விரும்பும் பணத்தை இந்தக் கணக்கில் வைத்திருக்கலாம்.

இணைய வங்கி

இணைய வங்கி

ஒரு பூஜ்ஜிய இருப்பு கணக்கின் சுமைகளை வங்கிகளே எடுத்துக்கொள்கிறது. எனவே நீங்கள் ஒரு வழக்கமான வங்கி கணக்கின் எல்லா வசதிகளையும் அனுபவிக்க முடியும். கணக்கைத் திறக்கும்போது உங்கள் இணைய வங்கி சேவையானது இந்தக் கணக்கை தொடங்கும் பொழுதே செயல்படுத்தப் படுகிறது. உங்களுக்குத் தொழில்நுட்பம் மற்றும் இண்டர்நெட் பற்றித் தெரிந்திருக்காவிட்டால், வங்கி அதிகாரிகள் உங்களுக்கு உதவி புரிந்து இணைய வங்கி பற்றிய அனைத்து விபரங்களையும் விளக்குவார்கள்.

ஏடிஎம் கார்டு, காசோலை

ஏடிஎம் கார்டு, காசோலை

ஒரு வழக்கமான சேமிப்பாகக் கணக்கைப் போல, பூஜ்ஜிய சமநிலை சேமிப்பு கணக்கிற்கு ஏடிஎம் அட்டை, காசோலை, பாஸ் புக் போன்ற வசதிகளும் கிடைக்கின்றது.

உங்களுடைய இலவச ஏடிஎம் / டெபிட் கார்டை உலகளாவிய பரிவர்த்தனைக்குப் பயன்படுத்தப்படலாம். ஒரு வருடத்திற்கு ஒரு குறிப்பிட்ட அளவு பரிவர்த்தனை உங்களுடைய ஏடிஎம் கார்டுகளால் மேற்கொள்ளும் பொழுது அந்தக் கார்டு எவ்வித கட்டணமின்றி இலவசமாகின்றது. ஒரு புதிய காசோலை புத்தகம் மிகக் குறைந்த அளவு கட்டணத்திற்கு வழங்கப்படுகிறது.

 

கணக்குச் செயல்படாமல் இருந்தால்

கணக்குச் செயல்படாமல் இருந்தால்

ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு உங்களுடைய கணக்கில் எந்த விதமான பரிவர்த்தனையும் இல்லை என்றால், உங்கள் கணக்குச் செயலற்றதாக மாறி விடும். ஏடிஎம், இண்டர்நெட், மற்றும் மொபைல் பேங்கிங் வழியாக நீங்கள் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள அனுமதிக்கப் பட மாட்டீர்கள். நன்மைகளை மீண்டும் அனுபவிக்க, நீங்கள் கணக்கை மீண்டும் செயல்படுத்த வேண்டும்.

கணக்கு வைத்திருப்பவர்கள் மற்றும் வட்டி விகிதம்

கணக்கு வைத்திருப்பவர்கள் மற்றும் வட்டி விகிதம்

கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் பூஜ்ஜிய சமநிலை கணக்கைத் தனிப்பட்ட முறையில், கூட்டுச் சேர்ந்து, அல்லது உயிர் பிழைத்தவர், முன்னாள் அல்லது உயிர் பிழைத்தவர், எவரும் அல்லது உயிர் பிழைத்தவர் ஆகியோருடன் தேர்வு செய்யலாம். பூஜ்ஜிய சமநிலை கணக்கிற்கான வட்டி பிற சதாரண வங்கி சேமிப்புக்கான வட்டி விகிதத்தை ஒத்து இருக்கும்.

நீங்கள் ஒரு ஜீரோ பாலான்ஸ் சேமிப்பு வங்கி கணக்கைத் திறக்க திட்டமிட்டால், முழுமையான ஆராய்ச்சிக்குப் பின்னர் அல்லது நிதி ஆலோசகரிடம் ஆலோசனை செய்த பின்னர் உங்களுக்குத் தேவைப்படும் பட்சத்தில் திறந்திடுங்கள்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Things To Know About Zero Balance Savings Account

Things To Know About Zero Balance Savings Account
Story first published: Wednesday, January 17, 2018, 11:31 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X