வீட்டில் இருந்து வேலை செய்வது ஒரு அதிர்ஷ்டம், குறிப்பாக நீங்கள் உங்கள் குழந்தையுடன் இருக்க வேண்டும் அல்லது நீங்கள் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க வேண்டும் என நினைப்பவரானால். ஆனால் இதை அனுபவித்தவர்கள் இது கேரியர் வளர்ச்சிக்கு வெற்றிகரமான சூழ்நிலை அல்ல என்று நம்புகிறார்கள். பலர் கவனம் செலுத்துவது கடினம் என்று புகார் தெரிவித்தனர். சிலர் அதை 'வீட்டிலிருந்து வேலை' என்ற பெயரில் 'வீடு மற்றும் அலுவலகங்கள்' இரண்டிலும் வேலை செய்வதாக உணர்கிறார்கள்.
வீட்டில் ஷாட்ஸ், லுங்கி அல்லது இரவு நேர உடையில் வேலை செய்வது வசதியாக இருப்பினும் சில விதிகள் உள்ளன. வீட்டிலிருந்து வேலை செய்யும் உங்களுடைய அதிகபட்ச உழைப்பை அளிக்க நீங்கள் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டிய சில..
ஒரு சரியான மூலையைக் கண்டுபிடியுங்கள்
நீங்கள் வீட்டில் இருக்கும்போது, சோம்பேறித்தனமாக உணர்ந்து உங்கள் வேலை இடத்தை அடிக்கடி மாற்றுவீர்கள். ஆனால் இது உங்கள் நேரத்தை வீணாக்குவதோடு அல்லாமல் உங்கள் உடல் நிலைக்கும் நல்லதல்ல. படுக்கையில் படுத்துக்கொண்டே அல்லது படுக்கையில் அமர்ந்தவாறு பல மணி நேரம் வேலை செய்வது ஆரோக்கியமான ஒன்றாக இருக்காது. ஒரு சரியான நாற்காலி மற்றும் மேஜையைத் தேர்வு செய்து அந்த இடத்திலேயே வேலை செய்யவும்.
சரியான ஆடை அணிந்து கொள்ளுங்கள்
பற்களைக் கூடத் துலக்காமல் வீட்டிலிருந்து எத்தனை முறை வேலை செய்தீர்கள்? உங்கள் போர்வையைப் போர்த்தியபடி வேலை செய்வது உங்கள் உடல் ஆரோக்கியத்தை மட்டுமல்ல உங்கள் மன நலத்திலும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும்.
நீங்கள் மந்தமாகி உங்கள் கவனத்தையும் இழப்பீர்கள். அலுவலகத்திற்குச் செல்லும் போது நம்முடைய ஆடை மிடுக்காக இருக்கும், வீட்டில் இருக்கும்போது அப்படி இல்லை. இதுவே நம்முடை பணி திறனை பெரிய அளவில் பாதிக்கும் ஒரு காரணியாக விளங்குகிறது. எனவே வீட்டில் இருந்து வேலை செய்தாலும் குறைந்தபட்சம் ஒரு நல்ல ஆடையை அணிந்து வேலையைத் துவங்குங்கள்.
நீங்கள் ஹெட்ஃபோன்கள் அணிந்து வேலை செய்பவரானால்
உங்கள் மனநிலையை உற்சாகமாக வைக்கும் வகையிலான சரியான பாடல்களைத் தேர்ந்தெடுக்கவும். உங்கள் கவன அளவை அதிகரிக்கும் பாடல்களின் பட்டியலைத் தேர்ந்தெடுக்கவும். அல்லது பாடல்களைத் தவிர்ப்பது நல்லது. சிலருக்கு அவை கவனத்தைச் சிதறடிக்கக்கூடும்.
சலவை மற்றும் சுத்தம் செய்யும் வேலையிலிருந்து விலகி இருங்கள்
நீங்கள் வீட்டில் இருந்து வேலை செய்வதால் வீட்டில் இருக்கும் சில வேலைகளை விரைவாகச் செய்ய முனைவீர்கள். அதைச் செய்யாதீர்கள்! இது கண்டிப்பாக உங்கள் வேலையைப் பாதிக்கும். மறக்காமல் இதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் 'வீட்டிலிருந்து உழைக்கிறீர்கள்', 'வீட்டிற்கு' அல்ல.
சரியான மதிய உணவு இடைவேளை எடுத்துக்கொள்ளுங்கள்
நாம் வீட்டில் இருந்து வேலை செய்யும் போது, மிகவும் சாதாரணமானவையாகவும், சரியான மதிய உணவை விட அரைகுறையான உணவுகளையே சாப்பிட நினைப்போம். மதிய உணவை உட்கொண்டவாறே நம்மில் பலரும் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். இதைத் தவிர்க்கவும்! நீங்கள் அலுவலகத்தில் இருக்கும் போது எப்படிச் சரியான மதிய உணவு இடைவேளையைப் எடுப்பீர்களோ அதையே வீட்டிலும் பின்பற்றுங்கள். மேலும், ஒரு நடைப்பயிற்சி எடுத்து உங்கள் கால்களுக்குப் புத்துணர்ச்சி அளியுங்கள்.
நொறுக்குத் தீனியிலிருந்து விலகி இருங்கள்
வீட்டிலிருந்து வேலை செய்யும்போது, நாம் மிகவும் ஆரோக்கியமற்ற காரியமான நொறுக்குத் தீனி தின்பண்டங்களைப் சாப்பிடுவோம். அந்தக் கவர்ந்திழுக்கும் பிஸ்கட்கள் மற்றும் மான்சிகள் அனைத்தையும் மறைத்துவிடவும். அதற்குப் பதிலாகக் காபி அல்லது தேநீர் இடைவெளிகளை எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் பால்கனியில் உலாத்துங்கள் அல்லது உங்களை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளச் சாலட்டை தயார் செய்து சாப்பிடவும்.


Click it and Unblock the Notifications